நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

166 சொல்லதிகாரம் - பெயரியல் உ-ம்: சாத்தனது, சாத்தனதனை, சாத்தனதனால், சாத்தனதற்கு, சாத்தனதனின், சாத்தனதனது, சாத்தனதன்கண் என வரும். விளி யேலாதேனும் உருபேற்றலிற் குறைபட்டதாகாது; சில உறுப் பிற் குறைபட்டாலும் மக்கள் என்பர்; அதுபோலவெனக் கொள்க. பெயர் வேற்றுமையும் ஏனை உருபுகளையும் ஏற்கு மால் அது ஒழித்தது என்னையோவெனின், பெயர் எழுவா யுருபாவது தன் பயனிலை தோன்றுகின்ற காலையன்றே; ஆண் டுப் பிற உருபுகளை ஏலாது. ஏற்பிற் றன் பொருண்மையும் ஏற்கும் உருபின் பொருண்மையும் ஒருங்குடைத்தாதல் வேண் டும்; அதனால் பயனிலை கொள்ளாது நின்ற பெயரே உருபு களை ஏற்குமெனக் கொள்க. ஆகலின் ஆறாம் வேற்றுமையுருபு ஒழிந்த உருபுகளை ஏற்புழித் தன் இருகிழமைப் பொருளினும் திரியாது நிற்குமெனக் கொள்க. (36) உருபேலாப் பெயர்கள் 293. நீயிர் நீவிர் நா னெழுவா யலபெறா. சூ-ம், மேல் “ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீறாய்” என்றார்; எனவே ஏலாப் பெயர்களும் உள என்பதாயிற்று; அவை இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) நீயிர் நீவிர் நான் - நீயிர் நீவிர் நான் என்னும் இம் மூன்று பெய ரும், எழுவாயல பெறா - எழுவாய் உருபினையொழிய ஏனை உருபு களை ஏலாது என்றவாறு. உ-ம்: நீயிர் வந்தீர், நீவிர் வந்தீர், நான் வந்தேன் என வரும்.(37) முதல் வேற்றுமை 294. அவற்றுள், எழுவா யுருபு திரிபில் பெயரே வினைபெயர் வினாக்கொள லதன்பய னிலையே. சூ-ம், நிறுத்தமுறையானே பெயர் வேற்றுமையது இலக்கணம் கூறு கின்றது. (இ-ள்) அவற்றுள் - மேற்கூறிய எட்டு வேற்றுமையுள்ளும், எழுவா யுருபு திரிபில் பெயரே - முதல் வேற்றுமைக்கு உருபாவது திரிபு யாதுமின்றி நிற்கும் பெயர்தானேயாம்; வினை பெயர் வினாக் கொளல் வினையையும் பெயரையும் வினாவையும் கொண்டு முடிதல், அதன் பயனிலையே - அதற்குப் பொருணிலையாம் என்றவாறு.
166 சொல்லதிகாரம் - பெயரியல் - ம் : சாத்தனது சாத்தனதனை சாத்தனதனால் சாத்தனதற்கு சாத்தனதனின் சாத்தனதனது சாத்தனதன்கண் என வரும் . விளி யேலாதேனும் உருபேற்றலிற் குறைபட்டதாகாது ; சில உறுப் பிற் குறைபட்டாலும் மக்கள் என்பர் ; அதுபோலவெனக் கொள்க . பெயர் வேற்றுமையும் ஏனை உருபுகளையும் ஏற்கு மால் அது ஒழித்தது என்னையோவெனின் பெயர் எழுவா யுருபாவது தன் பயனிலை தோன்றுகின்ற காலையன்றே ; ஆண் டுப் பிற உருபுகளை ஏலாது . ஏற்பிற் றன் பொருண்மையும் ஏற்கும் உருபின் பொருண்மையும் ஒருங்குடைத்தாதல் வேண் டும் ; அதனால் பயனிலை கொள்ளாது நின்ற பெயரே உருபு களை ஏற்குமெனக் கொள்க . ஆகலின் ஆறாம் வேற்றுமையுருபு ஒழிந்த உருபுகளை ஏற்புழித் தன் இருகிழமைப் பொருளினும் திரியாது நிற்குமெனக் கொள்க . ( 36 ) உருபேலாப் பெயர்கள் 293. நீயிர் நீவிர் நா னெழுவா யலபெறா . சூ - ம் மேல் ஏற்கு மெவ்வகைப் பெயர்க்கு மீறாய் என்றார் ; எனவே ஏலாப் பெயர்களும் உள என்பதாயிற்று ; அவை இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) நீயிர் நீவிர் நான் - நீயிர் நீவிர் நான் என்னும் இம் மூன்று பெய ரும் எழுவாயல பெறா - எழுவாய் உருபினையொழிய ஏனை உருபு களை ஏலாது என்றவாறு . - ம் : நீயிர் வந்தீர் நீவிர் வந்தீர் நான் வந்தேன் என வரும் . ( 37 ) முதல் வேற்றுமை 294. அவற்றுள் எழுவா யுருபு திரிபில் பெயரே வினைபெயர் வினாக்கொள லதன்பய னிலையே . சூ - ம் நிறுத்தமுறையானே பெயர் வேற்றுமையது இலக்கணம் கூறு கின்றது . ( - ள் ) அவற்றுள் - மேற்கூறிய எட்டு வேற்றுமையுள்ளும் எழுவா யுருபு திரிபில் பெயரே - முதல் வேற்றுமைக்கு உருபாவது திரிபு யாதுமின்றி நிற்கும் பெயர்தானேயாம் ; வினை பெயர் வினாக் கொளல் வினையையும் பெயரையும் வினாவையும் கொண்டு முடிதல் அதன் பயனிலையே - அதற்குப் பொருணிலையாம் என்றவாறு .