நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

160 சொல்லதிகாரம் - பெயரியல் பெயர் நான்கும், முன்னிலை ஐந்தும் - எல்லீர் நீவிர் நீயீர் நீர் நீ என்னும் முன்னிலைப்பெயர் ஐந்தும், எல்லாம் தாம் தான் - எல்லாம் தாம் தான் என்னும் இம்மூன்று பெயரும், இன்னன - இவை போல்வன பிறவும், பொதுப்பெயர் - இருதிணைக்குமுரிய பெயர் களாம் என்றவாறு. (25) 282. ஆண்மை பெண்மை யொருமை பன்மையின் ஆமிந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர். சூ-ம், மேல் தொகைப்படுத்துரைத்த பெயர்களை வகைப்படுத்து மாறு கூறியது. (இ-ள்) ஆண்மை - ஆண்மை முதற்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைமுதற்பெயர் ஆண்மை முறைப்பெயர், பெண்மை - பெண்மை முதற்பெயர் பெண்மைச் சினைப்பெயர் பெண்மைச் சினை முதற்பெயர் பெண்மை முறைப்பெயர், ஒருமை - ஒருமை முதற்பெயர் ஒருமைச் சினைப்பெயர் ஒருமைச் சினைமுதற்பெயர், பன்மையின் - பன்மை முதற்பெயர் பன்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைமுதற் பெயர், ஆமிந்நான்மைகள் - இந்த நால்வகைப் பெயரினாலே முன் கூறிய நான்கு தொகையுமாம், ஆண் பெண் முறைப்பெயர் - ஆண்மை யும் பெண்மையும் சார்ந்ததினாலே முறைப் பெயர் இரண்டாம் என்ற வாறு. உ-ம்: சாத்தன், முடவன், முடக்கொற்றன் என ஆண்மையின் மூன்றும் வந்தன. சாத்தி, முடத்தி, முடக்கொற்றி எனப் பெண் மையில் மூன்றும் வந்தன. கோதை, செவியிலி, நெடும்புற மருதி என ஒருமையின் மூன்றும் வந்தன. யானை, நெடுங்க ழுத்தல், நெடுந்தாள்யானை எனப் பன்மையில் மூன்றும் வந்தன. தந்தை, தாய் என முறைப்பெயர் இரண்டும் வந்தன. (26) 283. அவற்றுள், ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும். சூ-ம், மேல் ஆண்மை முதற்பெயர் முதலாகப் பகுத்தவற்றை இரு திணைப் பாலுள்ளும் இன்னது இன்ன பாற்கு உரித்தென்பது கூறியது. (இ-ள்) அவற்றுள் - மேல் ஆண்மை முதற்பெயர் முதலாகச் சொல் லப்பட்ட பதினான்கு பெயருள்ளும், ஒன்றே இருதிணை - ஒரு பெயரே உயர்திணை அஃறிணை என்னும் இரு திணைமிடத்தும், தன் பால் ஏற்கும் - பொருந்தி வரும் தன் பாலனைத்தையும் ஏற்று நிற்கும் என்ற வாறு. உ-ம்: சாத்தன், முடவன், முடக்கொற்றன், தந்தை என்பன வந்தான், வந்தது என வரும். யானை, நெடுங்கழுத்தல்,
160 சொல்லதிகாரம் - பெயரியல் பெயர் நான்கும் முன்னிலை ஐந்தும் - எல்லீர் நீவிர் நீயீர் நீர் நீ என்னும் முன்னிலைப்பெயர் ஐந்தும் எல்லாம் தாம் தான் - எல்லாம் தாம் தான் என்னும் இம்மூன்று பெயரும் இன்னன - இவை போல்வன பிறவும் பொதுப்பெயர் - இருதிணைக்குமுரிய பெயர் களாம் என்றவாறு . ( 25 ) 282. ஆண்மை பெண்மை யொருமை பன்மையின் ஆமிந் நான்மைக ளாண்பெண் முறைப்பெயர் . சூ - ம் மேல் தொகைப்படுத்துரைத்த பெயர்களை வகைப்படுத்து மாறு கூறியது . ( - ள் ) ஆண்மை - ஆண்மை முதற்பெயர் ஆண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைமுதற்பெயர் ஆண்மை முறைப்பெயர் பெண்மை - பெண்மை முதற்பெயர் பெண்மைச் சினைப்பெயர் பெண்மைச் சினை முதற்பெயர் பெண்மை முறைப்பெயர் ஒருமை - ஒருமை முதற்பெயர் ஒருமைச் சினைப்பெயர் ஒருமைச் சினைமுதற்பெயர் பன்மையின் - பன்மை முதற்பெயர் பன்மைச் சினைப்பெயர் பன்மைச் சினைமுதற் பெயர் ஆமிந்நான்மைகள் - இந்த நால்வகைப் பெயரினாலே முன் கூறிய நான்கு தொகையுமாம் ஆண் பெண் முறைப்பெயர் - ஆண்மை யும் பெண்மையும் சார்ந்ததினாலே முறைப் பெயர் இரண்டாம் என்ற வாறு . - ம் : சாத்தன் முடவன் முடக்கொற்றன் என ஆண்மையின் மூன்றும் வந்தன . சாத்தி முடத்தி முடக்கொற்றி எனப் பெண் மையில் மூன்றும் வந்தன . கோதை செவியிலி நெடும்புற மருதி என ஒருமையின் மூன்றும் வந்தன . யானை நெடுங்க ழுத்தல் நெடுந்தாள்யானை எனப் பன்மையில் மூன்றும் வந்தன . தந்தை தாய் என முறைப்பெயர் இரண்டும் வந்தன . ( 26 ) 283. அவற்றுள் ஒன்றே யிருதிணைத் தன்பா லேற்கும் . சூ - ம் மேல் ஆண்மை முதற்பெயர் முதலாகப் பகுத்தவற்றை இரு திணைப் பாலுள்ளும் இன்னது இன்ன பாற்கு உரித்தென்பது கூறியது . ( - ள் ) அவற்றுள் - மேல் ஆண்மை முதற்பெயர் முதலாகச் சொல் லப்பட்ட பதினான்கு பெயருள்ளும் ஒன்றே இருதிணை - ஒரு பெயரே உயர்திணை அஃறிணை என்னும் இரு திணைமிடத்தும் தன் பால் ஏற்கும் - பொருந்தி வரும் தன் பாலனைத்தையும் ஏற்று நிற்கும் என்ற வாறு . - ம் : சாத்தன் முடவன் முடக்கொற்றன் தந்தை என்பன வந்தான் வந்தது என வரும் . யானை நெடுங்கழுத்தல்