நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 159 (இ-ள்) முன்னரவ்வொடு - முன்னர் அஃறிணை ஒருமைப்பாற்கு எய் திய பெயர்கண்மேல், வருவையவ்வும் - பொருந்தி வரும் வையீற்று மொழிகளும் அகரவீற்று மொழிகளும், சுட்டிறு வவ்வும் - சுட்டொடு கூடிய வகரவீற்று மொழிகளும், கள்ளிறு மொழியும் - கள்ளென்னும் விகுதி ஈறாய் வருமொழிகளும், ஒன்றல வெண்ணும் - ஒன்று என்ப தனையொழிந்த எல்லாவெண்களும், உள்ள இல்ல பல்ல சில்ல உள வில பல சில - உள்ளவென்பது முதல் எட்டு மொழிகளும், இன்னன - இவை போல்வன பிறவும், பலவின் பெயராகும்மே - அஃறிணைப் பன்மைப் பாற்குரிய பெயர்களாம் என்றவாறு. (23) பால்பகாவஃறிணைப் பெயர் 280. பால்பகா வஃறிணைப் பெயர்கள் பாற் பொதுமைய. சூ-ம், அஃறிணைப் பெயர்கட்கு ஆவதோர் இயல்பு கூறியது. (இ-ள்) பால்பகா அஃறிணைப் பெயர்கள் - மேற்பால் வகுத்தவை யொழித்து ஒழிந்த பெயர்களனைத்தும், பாற் பொதுமைய - ஒருமை பன்மைகட்குரிய பொதுவாம் என்றவாறு. உ-ம்: மரம் வளர்ந்தது; மரம் வளர்ந்தன; முலை எழுந்தது, முலை எழுந்தன. (24) இருதிணைப் பொதுப்பெயர் 281. முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும் சினைமுதற் பெயரொரு நான்குமுறை யிரண்டும் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர். சூ-ம், இருதிணைக்குமுரிய பெயராமாறு கூறுகின்றது. (இ-ள்) முதற்பெயர் நான்கும் - ஆண்மை முதற்பெயர் பெண்மை முதற்பெயர் ஒருமை முதற்பெயர் பன்மை முதற்பெயர் என்னும் நான் கும், சினைப்பெயர் நான்கும் - ஆண்மைச் சினைப்பெயர் பெண்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் என்னும் நான்கும், சினைமுதற்பெயர் ஒரு நான்கும் - ஆண்மைச் சினை முதற்பெயர் பெண்மைச் சினைமுதற்பெயர் ஒருமைச் சினைமுதற் பெயர் பன்மைச் சினைமுதற் பெயர் என்னும் நான்கும், முறை இரண் டும் - ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என்னும் இரண் டும், தன்மை நான்கும் - யான் நான் யாம் நாம் என்னும் தன்மைப்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 159 ( - ள் ) முன்னரவ்வொடு - முன்னர் அஃறிணை ஒருமைப்பாற்கு எய் திய பெயர்கண்மேல் வருவையவ்வும் - பொருந்தி வரும் வையீற்று மொழிகளும் அகரவீற்று மொழிகளும் சுட்டிறு வவ்வும் - சுட்டொடு கூடிய வகரவீற்று மொழிகளும் கள்ளிறு மொழியும் - கள்ளென்னும் விகுதி ஈறாய் வருமொழிகளும் ஒன்றல வெண்ணும் - ஒன்று என்ப தனையொழிந்த எல்லாவெண்களும் உள்ள இல்ல பல்ல சில்ல உள வில பல சில - உள்ளவென்பது முதல் எட்டு மொழிகளும் இன்னன - இவை போல்வன பிறவும் பலவின் பெயராகும்மே - அஃறிணைப் பன்மைப் பாற்குரிய பெயர்களாம் என்றவாறு . ( 23 ) பால்பகாவஃறிணைப் பெயர் 280. பால்பகா வஃறிணைப் பெயர்கள் பாற் பொதுமைய . சூ - ம் அஃறிணைப் பெயர்கட்கு ஆவதோர் இயல்பு கூறியது . ( - ள் ) பால்பகா அஃறிணைப் பெயர்கள் - மேற்பால் வகுத்தவை யொழித்து ஒழிந்த பெயர்களனைத்தும் பாற் பொதுமைய - ஒருமை பன்மைகட்குரிய பொதுவாம் என்றவாறு . - ம் : மரம் வளர்ந்தது ; மரம் வளர்ந்தன ; முலை எழுந்தது முலை எழுந்தன . ( 24 ) இருதிணைப் பொதுப்பெயர் 281. முதற்பெயர் நான்குஞ் சினைப்பெயர் நான்கும் சினைமுதற் பெயரொரு நான்குமுறை யிரண்டும் தன்மை நான்கு முன்னிலை யைந்தும் எல்லாந் தாந்தா னின்னன பொதுப்பெயர் . சூ - ம் இருதிணைக்குமுரிய பெயராமாறு கூறுகின்றது . ( - ள் ) முதற்பெயர் நான்கும் - ஆண்மை முதற்பெயர் பெண்மை முதற்பெயர் ஒருமை முதற்பெயர் பன்மை முதற்பெயர் என்னும் நான் கும் சினைப்பெயர் நான்கும் - ஆண்மைச் சினைப்பெயர் பெண்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர் பன்மைச் சினைப்பெயர் என்னும் நான்கும் சினைமுதற்பெயர் ஒரு நான்கும் - ஆண்மைச் சினை முதற்பெயர் பெண்மைச் சினைமுதற்பெயர் ஒருமைச் சினைமுதற் பெயர் பன்மைச் சினைமுதற் பெயர் என்னும் நான்கும் முறை இரண் டும் - ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர் என்னும் இரண் டும் தன்மை நான்கும் - யான் நான் யாம் நாம் என்னும் தன்மைப்