நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

15 பதிப்புரை சூத்திரங்களோடு முறையே இணைத்து ஒன்றாகக் கொள்ளப்பட்டுள் ளன. அந்த முறையிலேயே அவையிரண்டும் இப்பதிப்பில் இணைத் துத் தரப்பட்டுள்ளன. வழக்கத்தைப் பின்பற்றியும் மேற்கோள் வசதிக் காகவும் சூத்திரங்களுக்குத் தொடரெண் கொடுக்கப்பட்டுள்ளது. இது சுவடியில் இல்லாத ஒன்று. மரபையொட்டிச் சூத்திரங்களுக்கு ஆங்காங்கே பொருள் தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இது வும் சுவடியில் இல்லாத ஒன்றாகும். கடவுள் துணை முருகன் துணை' உட்பட மற்றவை அனைத்தும் சுவடியில் உள்ளவாறே எடுத் தெழுதியுள்ளேன். மிகச்சில பிழைகள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன; தெளிவாகத் தெரிந்திருந்தும் சிலவற்றைத் திருத்த விரும்பவில்லை; விடுபாடுகள் புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் சூத்திர முதற்குறிப்பு அகராதியும் இடம் விளங்கா மேற்கோள் அக ராதியும் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வுரைக்குச் செய்ய வேண்டிய பணி இன்னும் நிறைய உண்டு என்பது உண்மைதான். இது ஆசிரியரின் மூலக்கையேடு இல்லை என்பதாலும் ஓலைச்சுவடி ஒன்றைப் பார்த் துப் பிரதி செய்யப்பட்ட நகலென்று இச்சுவடியை நான் நம்புவதாலும் திருத்தம் பெறவேண்டிய பகுதிகள் உண்டு என்பதாலும் இந்த உரையை உடனே தமிழுலகுக்கு வழங்கவேண்டுமென்ற ஆர்வத்தா லும் விளக்கம், அடிக்குறிப்பு, பாடபேதங்கள், உதாரணங்கள் முத லிய துணைப் பகுதிகள் இங்கு இடம் பெறவில்லை. கூழங்கைத் தம்பிரானுடைய உரையாராய்ச்சியில் இது ஒரு தொடக்கமே; கடக்க வேண்டிய தூரம் செய்ய வேண்டிய பணி இன்னும் எத்தனையோ எஞ் சிக் கிடக்கின்றன. இலக்கண வரலாற்றில் இருள் கவிந்திருந்த ஒரு சிறு பகுதி யில் இந்த வெளியீட்டின் மூலம் ஒளி மிகு அகல் விளக்கு ஒன்று ஏற்றப்படுகிறது. இந்த ஒளியில் ஒரு வேளை இவ்வுரைக்குரிய வேறு சுவடிகள் இனிமேல் புலப்படக்கூடும். அதுவரையில் இப் பதிப்பை முதனிலைப் பதிப்பகாவே கருதுமாறு தமிழுலகைக் கேட் டுக் கொள்கிறேன். ஒளிப்படத்தைப் (microfilm) பார்த்துப் படிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள இடர்ப்பாடுகளை எண்ணிப் பார்த்தால் இப் பதிப்பின் பெருமை புலப்படாமற் போகாது. இதன் அருமைப் பாட் டினை அறிந்து உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வது தமிழ்ப் பெருமக்களின் கடமை. இந்த முயற்சியில் எனக்கு உதவிய சிலரை நன்றியுணர்வோடு இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும். இந்தச் சுவடியை நன்கு
15 பதிப்புரை சூத்திரங்களோடு முறையே இணைத்து ஒன்றாகக் கொள்ளப்பட்டுள் ளன . அந்த முறையிலேயே அவையிரண்டும் இப்பதிப்பில் இணைத் துத் தரப்பட்டுள்ளன . வழக்கத்தைப் பின்பற்றியும் மேற்கோள் வசதிக் காகவும் சூத்திரங்களுக்குத் தொடரெண் கொடுக்கப்பட்டுள்ளது . இது சுவடியில் இல்லாத ஒன்று . மரபையொட்டிச் சூத்திரங்களுக்கு ஆங்காங்கே பொருள் தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன . இது வும் சுவடியில் இல்லாத ஒன்றாகும் . கடவுள் துணை முருகன் துணை ' உட்பட மற்றவை அனைத்தும் சுவடியில் உள்ளவாறே எடுத் தெழுதியுள்ளேன் . மிகச்சில பிழைகள் மட்டுமே திருத்தப்பட்டுள்ளன ; தெளிவாகத் தெரிந்திருந்தும் சிலவற்றைத் திருத்த விரும்பவில்லை ; விடுபாடுகள் புள்ளியிட்டுக் காட்டப்பட்டுள்ளன . நூலின் இறுதியில் சூத்திர முதற்குறிப்பு அகராதியும் இடம் விளங்கா மேற்கோள் அக ராதியும் சேர்க்கப்பட்டுள்ளன . இவ்வுரைக்குச் செய்ய வேண்டிய பணி இன்னும் நிறைய உண்டு என்பது உண்மைதான் . இது ஆசிரியரின் மூலக்கையேடு இல்லை என்பதாலும் ஓலைச்சுவடி ஒன்றைப் பார்த் துப் பிரதி செய்யப்பட்ட நகலென்று இச்சுவடியை நான் நம்புவதாலும் திருத்தம் பெறவேண்டிய பகுதிகள் உண்டு என்பதாலும் இந்த உரையை உடனே தமிழுலகுக்கு வழங்கவேண்டுமென்ற ஆர்வத்தா லும் விளக்கம் அடிக்குறிப்பு பாடபேதங்கள் உதாரணங்கள் முத லிய துணைப் பகுதிகள் இங்கு இடம் பெறவில்லை . கூழங்கைத் தம்பிரானுடைய உரையாராய்ச்சியில் இது ஒரு தொடக்கமே ; கடக்க வேண்டிய தூரம் செய்ய வேண்டிய பணி இன்னும் எத்தனையோ எஞ் சிக் கிடக்கின்றன . இலக்கண வரலாற்றில் இருள் கவிந்திருந்த ஒரு சிறு பகுதி யில் இந்த வெளியீட்டின் மூலம் ஒளி மிகு அகல் விளக்கு ஒன்று ஏற்றப்படுகிறது . இந்த ஒளியில் ஒரு வேளை இவ்வுரைக்குரிய வேறு சுவடிகள் இனிமேல் புலப்படக்கூடும் . அதுவரையில் இப் பதிப்பை முதனிலைப் பதிப்பகாவே கருதுமாறு தமிழுலகைக் கேட் டுக் கொள்கிறேன் . ஒளிப்படத்தைப் ( microfilm ) பார்த்துப் படிப்பதிலும் எழுதுவதிலும் உள்ள இடர்ப்பாடுகளை எண்ணிப் பார்த்தால் இப் பதிப்பின் பெருமை புலப்படாமற் போகாது . இதன் அருமைப் பாட் டினை அறிந்து உரிய வகையில் பயன்படுத்திக் கொள்வது தமிழ்ப் பெருமக்களின் கடமை . இந்த முயற்சியில் எனக்கு உதவிய சிலரை நன்றியுணர்வோடு இங்கே நான் குறிப்பிட்டாக வேண்டும் . இந்தச் சுவடியை நன்கு