நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

152 சொல்லதிகாரம் - பெயரியல் (இ-ள்) ஒன்றொழி பொதுச்சொல் - இரு திணையில் ஆண்பால் பெண்பால்களுள் ஒன்றனையொழித்து நிற்கும் பொதுச்சொல்லும், விகாரம் - தலைக்குறைத்தல் முதலான ஒன்பது விகாரச் சொற்களும், தகுதி ஆகுபெயர் - மூவகைத் தகுதி வழக்கு மொழிகளும் ஆகு பெயர்ச் சொற்களும், அன்மொழி வினைக்குறிப்பு - அன்மொழித் தொகைச் சொற்களும் வினைக்குறிப்பு மொழிகளும், முதல் - முத னிற்கும் எழுத்து மாத்திரமும் மொழி மாத்திரமும் காட்டி நிற்கும் மொழிகளும், தொகை - பொருட்டொகையிற் றொற்றி நிற்கும் மொழி களும், குறிப்போடு - குறிப்பாய் வருமொழிகளுடன், இன்ன பிறவும் குறிப்பிற் றருமொழி - இவை போல்வன பிறவும் குறிப்பினாற் காட்டும் மொழிகளாம்; அல்லன வெளிப்படை - இவ்வாறன்றி வரு வன எல்லாம் விளங்கி நின்று பொருளைக் காட்டும் மொழிகளாம் என்றவாறு. (12) சொல் இத்துணையவென்பது 269. அதுவே, இயற்சொல் றிரிசொ லியல்பிற் பெயர்வினை எனவிரண் டாகு மிடையுரி யடுத்து நான்குமாந் திசைவட சொல்லணு காவழி. சூ-ம், மேல் அவ்வாற்றாற் பகுத்த சொல் இவ்வாற்றால் பத்தனை யாமெனக் கூறுகின்றது. (இ-ள்) அதுவே - மேற் கூறப்பட்ட சொல்லே, இயற்சொல் திரி சொல் இயல்பிற் இயற்சொல்லும் திரிசொல்லும் என்னும் இவ்விரு வகையினாலும், பெயர்வினை என இரண்டாகும் - பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லுமென இரண்டாகும்; இடையரி யடுத்து நான்குமாம் - இடைச்சொல்லும் உரிச்சொல்லும் என்னும் இவ்விரண்டு டன் நான்கு கூறுபட்டதாம், திசை வடசொல் அணுகா வழி - திசைச் சொல்லும் வட சொல்லும் கூடாவிடத்து என்றவாறு. (13) இயற்சொல் 270. செந்தமி ழாகித் திரியா தியார்க்கும் தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல். சூ-ம், மேல் “இயற்சொல்” என்றார்; அஃது இஃதெனக் கூறியது. (இ-ள்) செந்தமிழாகி - செந்தமிழ் நிலத்து வழங்குமொழியாய், திரி யாது - சொல்லானும் பொருளானும் திரிவின்றி, யார்க்கும் - கற்றோர்க்
152 சொல்லதிகாரம் - பெயரியல் ( - ள் ) ஒன்றொழி பொதுச்சொல் - இரு திணையில் ஆண்பால் பெண்பால்களுள் ஒன்றனையொழித்து நிற்கும் பொதுச்சொல்லும் விகாரம் - தலைக்குறைத்தல் முதலான ஒன்பது விகாரச் சொற்களும் தகுதி ஆகுபெயர் - மூவகைத் தகுதி வழக்கு மொழிகளும் ஆகு பெயர்ச் சொற்களும் அன்மொழி வினைக்குறிப்பு - அன்மொழித் தொகைச் சொற்களும் வினைக்குறிப்பு மொழிகளும் முதல் - முத னிற்கும் எழுத்து மாத்திரமும் மொழி மாத்திரமும் காட்டி நிற்கும் மொழிகளும் தொகை - பொருட்டொகையிற் றொற்றி நிற்கும் மொழி களும் குறிப்போடு - குறிப்பாய் வருமொழிகளுடன் இன்ன பிறவும் குறிப்பிற் றருமொழி - இவை போல்வன பிறவும் குறிப்பினாற் காட்டும் மொழிகளாம் ; அல்லன வெளிப்படை - இவ்வாறன்றி வரு வன எல்லாம் விளங்கி நின்று பொருளைக் காட்டும் மொழிகளாம் என்றவாறு . ( 12 ) சொல் இத்துணையவென்பது 269. அதுவே இயற்சொல் றிரிசொ லியல்பிற் பெயர்வினை எனவிரண் டாகு மிடையுரி யடுத்து நான்குமாந் திசைவட சொல்லணு காவழி . சூ - ம் மேல் அவ்வாற்றாற் பகுத்த சொல் இவ்வாற்றால் பத்தனை யாமெனக் கூறுகின்றது . ( - ள் ) அதுவே - மேற் கூறப்பட்ட சொல்லே இயற்சொல் திரி சொல் இயல்பிற் இயற்சொல்லும் திரிசொல்லும் என்னும் இவ்விரு வகையினாலும் பெயர்வினை என இரண்டாகும் - பெயர்ச் சொல்லும் வினைச்சொல்லுமென இரண்டாகும் ; இடையரி யடுத்து நான்குமாம் - இடைச்சொல்லும் உரிச்சொல்லும் என்னும் இவ்விரண்டு டன் நான்கு கூறுபட்டதாம் திசை வடசொல் அணுகா வழி - திசைச் சொல்லும் வட சொல்லும் கூடாவிடத்து என்றவாறு . ( 13 ) இயற்சொல் 270. செந்தமி ழாகித் திரியா தியார்க்கும் தம்பொருள் விளக்குந் தன்மைய வியற்சொல் . சூ - ம் மேல் இயற்சொல் என்றார் ; அஃது இஃதெனக் கூறியது . ( - ள் ) செந்தமிழாகி - செந்தமிழ் நிலத்து வழங்குமொழியாய் திரி யாது - சொல்லானும் பொருளானும் திரிவின்றி யார்க்கும் - கற்றோர்க்