நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

146 சொல்லதிகாரம் - பெயரியல் என்னும் இவ்விரு திணையும் அவற்றின் கூறுபாடாய் வரும் ஐம்பாற் பொருளையும், தன்னையும் - பொருளை உணர்த்துவதன்றித் தன்னை உணர்த்துவதான சொல் தன்னையும், மூவகை இடத்தும் - தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூன்றிடத்தும், வழக்கொடு செய்யு ளின் - வழக்கின் கண்ணும் செய்யுட்கண்ணும், வெளிப்படை குறிப்பின் - வெளிப்படையினாலும் குறிப்பினாலும், விரிப்பது சொல்லே - விளக் குவது சொல்லாம் என்றவாறு. (2) மூவகை மொழி 259. ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர்மொழி பலபொரு ளனபொது விருமையு மேற்பன. சூ-ம், மேற்சூத்திரத்தில் நிறுத்திய முறையே சொற்கூறு ஆமாறு கூறியது. (இ-ள்) ஒரு மொழி ஒரு பொருளனவாம் - ஒரு மொழிகளாவன பகுப் பிலவாய் நின்று ஒரு பொருளை உணர்த்துவனவாம்; தொடர் மொழி பல பொருளன - தொடர் மொழிகளாவன பகுக்கப்பட்டு, தொகை நிலை தொகாநிலை வகையானும் தொடர்ந்து நின்று பல பொருளை உணர்த்துவனவாம்; பொது இருமையும் ஏற்பன - பொது மொழிகளா வன ஒரு காற் பகுப்பிலவாய் நின்று ஒரு பொருளை உணர்த்தியும் அதுவே தொடர் மொழியுமாய்ப் பல பொருளை உணர்த்தியும் இவ் வாறு இருமைக்கும் பொதுவாய் நிற்பனவாம் என்றவாறு. (3) இரு திணை 260. மக்க டேவர் நரக ருயர்திணை மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை. சூ-ம், மேல் இரு திணை என்றார்; அவை இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) மக்கள் தேவர் நரகர் - மக்களும் தேவரும் நரகரும், உயர் திணை - உயர்ந்த குலமாகிய உயர்திணை, மற்றுயிர் உள்ளவும் - அவரை ஒழிந்து நின்ற ஊர்வன, தவழ்வன, தத்துவன, நடப்பன, நிற் பன, பறப்பனவான விலங்கு முதலாம் உயிருள்ளனவும், இல்லவும் - நில நீர் தீ வளி முதலான உயிரில்லனவும் உடல் உயிர் கூடிய ஒழிந்த எல்லாப் பொருளும், அஃறிணைப் - உயர் திணை இன்மையவான இழிதிணையான அஃறிணையாம். ஆண்பாலும் பெண்பாலும் தழுவு தற்கு வேண்டிய மக்கள் தேவர் நரகர் எனக் கதிமேல் வைத்து
146 சொல்லதிகாரம் - பெயரியல் என்னும் இவ்விரு திணையும் அவற்றின் கூறுபாடாய் வரும் ஐம்பாற் பொருளையும் தன்னையும் - பொருளை உணர்த்துவதன்றித் தன்னை உணர்த்துவதான சொல் தன்னையும் மூவகை இடத்தும் - தன்மை முன்னிலை படர்க்கை என்னும் மூன்றிடத்தும் வழக்கொடு செய்யு ளின் - வழக்கின் கண்ணும் செய்யுட்கண்ணும் வெளிப்படை குறிப்பின் - வெளிப்படையினாலும் குறிப்பினாலும் விரிப்பது சொல்லே - விளக் குவது சொல்லாம் என்றவாறு . ( 2 ) மூவகை மொழி 259. ஒருமொழி யொருபொரு ளனவாந் தொடர்மொழி பலபொரு ளனபொது விருமையு மேற்பன . சூ - ம் மேற்சூத்திரத்தில் நிறுத்திய முறையே சொற்கூறு ஆமாறு கூறியது . ( - ள் ) ஒரு மொழி ஒரு பொருளனவாம் - ஒரு மொழிகளாவன பகுப் பிலவாய் நின்று ஒரு பொருளை உணர்த்துவனவாம் ; தொடர் மொழி பல பொருளன - தொடர் மொழிகளாவன பகுக்கப்பட்டு தொகை நிலை தொகாநிலை வகையானும் தொடர்ந்து நின்று பல பொருளை உணர்த்துவனவாம் ; பொது இருமையும் ஏற்பன - பொது மொழிகளா வன ஒரு காற் பகுப்பிலவாய் நின்று ஒரு பொருளை உணர்த்தியும் அதுவே தொடர் மொழியுமாய்ப் பல பொருளை உணர்த்தியும் இவ் வாறு இருமைக்கும் பொதுவாய் நிற்பனவாம் என்றவாறு . ( 3 ) இரு திணை 260. மக்க டேவர் நரக ருயர்திணை மற்றுயி ருள்ளவு மில்லவு மஃறிணை . சூ - ம் மேல் இரு திணை என்றார் ; அவை இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) மக்கள் தேவர் நரகர் - மக்களும் தேவரும் நரகரும் உயர் திணை - உயர்ந்த குலமாகிய உயர்திணை மற்றுயிர் உள்ளவும் - அவரை ஒழிந்து நின்ற ஊர்வன தவழ்வன தத்துவன நடப்பன நிற் பன பறப்பனவான விலங்கு முதலாம் உயிருள்ளனவும் இல்லவும் - நில நீர் தீ வளி முதலான உயிரில்லனவும் உடல் உயிர் கூடிய ஒழிந்த எல்லாப் பொருளும் அஃறிணைப் - உயர் திணை இன்மையவான இழிதிணையான அஃறிணையாம் . ஆண்பாலும் பெண்பாலும் தழுவு தற்கு வேண்டிய மக்கள் தேவர் நரகர் எனக் கதிமேல் வைத்து