நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

144 எழுத்ததிகாரம் - உருபு புணரியல் சூ-ம், இவ்வதிகாரத்துட் சொன்ன பொருட்கெல்லாம் ஏற்பதோர் புற நடை கூறியது. (இ-ள்) இதற்கு இது முடிபென்று - இச்சொற்கு இதுவே விதியாக முடிப்பவென்று, எஞ்சாது யாவும் விதிப்ப - குறைவில்லாமல் எல்லாச் சொற்களுக்கும் விதித்தலைச் செய்ய, அளவின்மையின் - சொற்கள் அளவு படாது ஆகையினாலே, விதித்தவற்றியலான் - இவ்வதிகாரத் துட் சொல்லிய அதிகாரங் கொண்டு, வகுத்துரையாதவும் - எடுத்து விதியாத சொற்களும், வகுத்தனர் கொளலே - வகுத்தனர்; கொள்க என்றவாறு. ஐந்தாவது உருபு புணரியல் முற்றிற்று அடையெண் பெயர்முறை தோற்றம் வடிவள வாதியந்தம் இடைநிலை போலியென் றீரைந் தெழுத்து மிருபதமும் படுபுணர் மூன்றி னியல்பும் விகாரமுஞ் சாரியையும் உடனுணர் வாரை யெழுத்தறி வாரென்ப ருத்தமரே எழுத்ததிகாரம் முற்றும்
144 எழுத்ததிகாரம் - உருபு புணரியல் சூ - ம் இவ்வதிகாரத்துட் சொன்ன பொருட்கெல்லாம் ஏற்பதோர் புற நடை கூறியது . ( - ள் ) இதற்கு இது முடிபென்று - இச்சொற்கு இதுவே விதியாக முடிப்பவென்று எஞ்சாது யாவும் விதிப்ப - குறைவில்லாமல் எல்லாச் சொற்களுக்கும் விதித்தலைச் செய்ய அளவின்மையின் - சொற்கள் அளவு படாது ஆகையினாலே விதித்தவற்றியலான் - இவ்வதிகாரத் துட் சொல்லிய அதிகாரங் கொண்டு வகுத்துரையாதவும் - எடுத்து விதியாத சொற்களும் வகுத்தனர் கொளலே - வகுத்தனர் ; கொள்க என்றவாறு . ஐந்தாவது உருபு புணரியல் முற்றிற்று அடையெண் பெயர்முறை தோற்றம் வடிவள வாதியந்தம் இடைநிலை போலியென் றீரைந் தெழுத்து மிருபதமும் படுபுணர் மூன்றி னியல்பும் விகாரமுஞ் சாரியையும் உடனுணர் வாரை யெழுத்தறி வாரென்ப ருத்தமரே எழுத்ததிகாரம் முற்றும்