நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

13 பதிப்புரை னார்கள். இவைகட்குப் பின்னர் மாணவர்கட்குப் பயன்படும் முறை யில் பதவுரை, சுருக்கவுரை, தெளிவுரையென்று பல்வேறு புத்துரை கள் தோன்றலாயின; ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தோன்றின . இவைகள் பெரும்பாலும் அச்சாகியுள்ளன; சில பயிற்சியில் உள்ளன; பல அரிதாகிவிட்டன. நன்னூலுக்குத் தோன்றிய முதல் காண்டிகையுரை 18ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த கூழங்கைத்தம்பிரான் (1699 - 1795) என்ப வரால் இயற்றப்பட்டதேயாகும். இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர்; தஞ்சைப் பகுதியில் வாழ்ந்தவர். பின்னர் ஈழநாடு சென்று ஆசிரிய ராகப் பணியாற்றி அங்கேயே உயிர் நீத்த தமிழ் நாவலர். இவருடைய பெயர் பற்றிய ஒரு கதையும் (அறவாணன், 1977, பக்.168) உண்டு. பொற்கைப் பாண்டியன், சீத்தலைச் சாத்தனார் போன்ற பெயர் களுக்கு வழங்கும் கதைக ளப் போலவே இந்த கதையும் எனக்குத் தோன்றுகிறது; உண்மையென்று உறுதியாகச் சொல்ல எனக்குத் தயக்கமாகவும் இருக்கிறது. சைவராக இருந்த இவர் தம் வாழ் நாளின் பிற்பகுதியில் கிறித்தவத்தைத் தழுவியதாகவும் (அரவிந் தன், 1968, பக்.479) தெரிய வருகிறது. நன்னூல் காண்டிகையைத் தவிர வேறு சில நூல்கள் இயற்றினார் என்பதும் இவர் வரலாறு பற்றிய மற்ற செய்திகளும் மேலே குறிப்பிட்ட இரு நூல்களிலும் பிற இலக்கிய வரலாற்று நூல்களிலும் காணப்படுகின்றன. மயிலைநாதர் தம்முடைய உரையில் ஒரு சில சூத்திரங்களுக் குச் (உ.ம்: சிறப்புப் பாயிரம், 55, 107, 150, 187) சூத்திரத்தி லுள்ள சொற்களைப் பதங்களாகவும் தொடர்களாகவும் மீண்டும் எடுத் தெழுதிப் பொருள் விளக்கியுள்ள பதவுரை முறையைத் தொடக்க முதல் இறுதி வரையில் கூழங்கைத்தம்பிரான் கடைப்பிடித்துத் தம்முடைய உரையை அமைத்துள்ளார். சுவடியின் இறுதியில் உள்ள குறிப்பும் இவ்வுரையைக் காண்டிகையுரையென்றே நமக்கு அறிவிக் கிறது. பொழிப்புரையாக இருக்கும் மயிலைநாதர் உரையைக் கற் போருக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்ற கருத்தே கூழங்கையர் தமது தலைநோக்காகக் கொண்டிருத்தலின் பெரும்பாலும் மயிலை நாதரின் உரையைப் பின்பற்றியே தம்முடைய உரையை அமைத்துள் ளார். ஆயினும் சங்கர நமச்சிவாயர் உரை நேமிநாத உரை ஆகிய வற்றையும் சிற்சில இடங்களில் இவர் பயன்படுத்தியுள்ளாரென்று தெரிகிறது. முழுக்க முழுக்க மயிலைநாதர் உரையையே இவர் பின் பற்றினாலும் தம்முடைய கருத்துக்களை ஆங்காங்கே குறிப்பிடத்
13 பதிப்புரை னார்கள் . இவைகட்குப் பின்னர் மாணவர்கட்குப் பயன்படும் முறை யில் பதவுரை சுருக்கவுரை தெளிவுரையென்று பல்வேறு புத்துரை கள் தோன்றலாயின ; ஆங்கில மொழிபெயர்ப்புகளும் தோன்றின . இவைகள் பெரும்பாலும் அச்சாகியுள்ளன ; சில பயிற்சியில் உள்ளன ; பல அரிதாகிவிட்டன . நன்னூலுக்குத் தோன்றிய முதல் காண்டிகையுரை 18 ஆம் நூற் றாண்டில் வாழ்ந்த கூழங்கைத்தம்பிரான் ( 1699 - 1795 ) என்ப வரால் இயற்றப்பட்டதேயாகும் . இவர் காஞ்சிபுரத்தில் பிறந்தவர் ; தஞ்சைப் பகுதியில் வாழ்ந்தவர் . பின்னர் ஈழநாடு சென்று ஆசிரிய ராகப் பணியாற்றி அங்கேயே உயிர் நீத்த தமிழ் நாவலர் . இவருடைய பெயர் பற்றிய ஒரு கதையும் ( அறவாணன் 1977 பக் .168 ) உண்டு . பொற்கைப் பாண்டியன் சீத்தலைச் சாத்தனார் போன்ற பெயர் களுக்கு வழங்கும் கதைக ளப் போலவே இந்த கதையும் எனக்குத் தோன்றுகிறது ; உண்மையென்று உறுதியாகச் சொல்ல எனக்குத் தயக்கமாகவும் இருக்கிறது . சைவராக இருந்த இவர் தம் வாழ் நாளின் பிற்பகுதியில் கிறித்தவத்தைத் தழுவியதாகவும் ( அரவிந் தன் 1968 பக் .479 ) தெரிய வருகிறது . நன்னூல் காண்டிகையைத் தவிர வேறு சில நூல்கள் இயற்றினார் என்பதும் இவர் வரலாறு பற்றிய மற்ற செய்திகளும் மேலே குறிப்பிட்ட இரு நூல்களிலும் பிற இலக்கிய வரலாற்று நூல்களிலும் காணப்படுகின்றன . மயிலைநாதர் தம்முடைய உரையில் ஒரு சில சூத்திரங்களுக் குச் ( உ.ம் : சிறப்புப் பாயிரம் 55 107 150 187 ) சூத்திரத்தி லுள்ள சொற்களைப் பதங்களாகவும் தொடர்களாகவும் மீண்டும் எடுத் தெழுதிப் பொருள் விளக்கியுள்ள பதவுரை முறையைத் தொடக்க முதல் இறுதி வரையில் கூழங்கைத்தம்பிரான் கடைப்பிடித்துத் தம்முடைய உரையை அமைத்துள்ளார் . சுவடியின் இறுதியில் உள்ள குறிப்பும் இவ்வுரையைக் காண்டிகையுரையென்றே நமக்கு அறிவிக் கிறது . பொழிப்புரையாக இருக்கும் மயிலைநாதர் உரையைக் கற் போருக்குத் தெளிவுபடுத்த வேண்டுமென்ற கருத்தே கூழங்கையர் தமது தலைநோக்காகக் கொண்டிருத்தலின் பெரும்பாலும் மயிலை நாதரின் உரையைப் பின்பற்றியே தம்முடைய உரையை அமைத்துள் ளார் . ஆயினும் சங்கர நமச்சிவாயர் உரை நேமிநாத உரை ஆகிய வற்றையும் சிற்சில இடங்களில் இவர் பயன்படுத்தியுள்ளாரென்று தெரிகிறது . முழுக்க முழுக்க மயிலைநாதர் உரையையே இவர் பின் பற்றினாலும் தம்முடைய கருத்துக்களை ஆங்காங்கே குறிப்பிடத்