நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 137 உருபுகள் புணரும் முறைமை 241. ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின் ஒக்குமள் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே சூ-ம் , உருபுகள் பதத்தோடு புணரும் முறைமை மாட்டெறிந்து உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் - மெய் முதலாயும் மெய் ஈறாயும் உயிர் முதலாயும் உயிர் ஈறாயும் மெய் முதலாயும் உயிர் ஈறாயும் உயிர் முதலாயும் மெய் ஈறாயும் வரும் உருபுகள். உ-ம்: கண், அது, கடை, ஆல். புணர்ச்சியின் - நிலைமொழியாயும் வருமொழியாயும் பதத்தோடு புணருமிடத்து, ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே - முற் கூறிய அப்பெயர்ப் பதங்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் தம்முடன் புணரும் புணர்ச்சி விதியோடு ஒக்கும் பெரும்பாலும் என்ற வாறு. (3) சாரியைகள் வரும் இடமும் இயல்பும் 242. பதமுன் விகுதியும் பதமு முருபும் புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை வருதலுந் தவிர்தலும் விகற்பமு மாகும். சூ-ம், (இ-ள்) பதமுன் விகுதியும் - பதத்தின் முன் விகுதி வந்து தொடரு மிடத்தும், பதமும் - பதத்தின் முன்னே பதம் வந்து தொடருமிடத்தும், உருபும் புணர்வழி - பதத்தின் முன்னே உருபு வந்து தொடருமிடத் தும், ஒன்றும் பலவும் சாரியை வருதலும் - அவ்விரண்டிற்கும் இடையே ஒரு சாரியை இரண்டு சாரியை வருதலும், தவிர்தலும் - இடையே சாரியை வராமல் இயல்பாய் முடிதலும், விகற்பமும் ஆகும் - ஒரு புணர்ச்சிக்கே ஓரிடத்து வந்தும் ஓரிடத்து வராமலும் வழங்குவனவாம் என்றவாறு. உ-ம்: ஊரது, உண்டது என அகரச் சாரியை விகுதிப் புணர்ச் சிக்கண் வந்தது. வெற்பன், பொருப்பன், வீரன், ஊரன் எனச் சாரியை வேண்டாவாயின. உண்டனன், உண்டான், மொழிகு வன், மொழிவன என ஒன்றற்கே ஓரிடத்து வேண்டியும் ஓரிடத்து வேண்டாமலும் வந்தன.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 137 உருபுகள் புணரும் முறைமை 241. ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் புணர்ச்சியின் ஒக்குமள் னப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே சூ - ம் உருபுகள் பதத்தோடு புணரும் முறைமை மாட்டெறிந்து உணர்த்துதல் நுதலிற்று . ( - ள் ) ஒற்றுயிர் முதலீற் றுருபுகள் - மெய் முதலாயும் மெய் ஈறாயும் உயிர் முதலாயும் உயிர் ஈறாயும் மெய் முதலாயும் உயிர் ஈறாயும் உயிர் முதலாயும் மெய் ஈறாயும் வரும் உருபுகள் . - ம் : கண் அது கடை ஆல் . புணர்ச்சியின் - நிலைமொழியாயும் வருமொழியாயும் பதத்தோடு புணருமிடத்து ஒக்குமன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே - முற் கூறிய அப்பெயர்ப் பதங்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் தம்முடன் புணரும் புணர்ச்சி விதியோடு ஒக்கும் பெரும்பாலும் என்ற வாறு . ( 3 ) சாரியைகள் வரும் இடமும் இயல்பும் 242. பதமுன் விகுதியும் பதமு முருபும் புணர்வழி யொன்றும் பலவுஞ் சாரியை வருதலுந் தவிர்தலும் விகற்பமு மாகும் . சூ - ம் ( - ள் ) பதமுன் விகுதியும் - பதத்தின் முன் விகுதி வந்து தொடரு மிடத்தும் பதமும் - பதத்தின் முன்னே பதம் வந்து தொடருமிடத்தும் உருபும் புணர்வழி - பதத்தின் முன்னே உருபு வந்து தொடருமிடத் தும் ஒன்றும் பலவும் சாரியை வருதலும் - அவ்விரண்டிற்கும் இடையே ஒரு சாரியை இரண்டு சாரியை வருதலும் தவிர்தலும் - இடையே சாரியை வராமல் இயல்பாய் முடிதலும் விகற்பமும் ஆகும் - ஒரு புணர்ச்சிக்கே ஓரிடத்து வந்தும் ஓரிடத்து வராமலும் வழங்குவனவாம் என்றவாறு . - ம் : ஊரது உண்டது என அகரச் சாரியை விகுதிப் புணர்ச் சிக்கண் வந்தது . வெற்பன் பொருப்பன் வீரன் ஊரன் எனச் சாரியை வேண்டாவாயின . உண்டனன் உண்டான் மொழிகு வன் மொழிவன என ஒன்றற்கே ஓரிடத்து வேண்டியும் ஓரிடத்து வேண்டாமலும் வந்தன .