நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 135 எனவும் இருவழியும் த நக்கள் வரத் த டவ்வும் நணவ்வும் ஆயிற்று. (34) 237. உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும். சூ-ம், பதப்புணர்ச்சிக்கு ஓர் கருவி கூறியது. (இ-ள்) உருபின் முடிபவை - மேல் உருபுப் புணர்ச்சிக்கண் முடிந்த முடிவெல்லாம், ஒக்குமப் பொருளினும் - அவ்வுருபின் பொருளான பதப் புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் என்றவாறு. உ-ம்: தன்னை, தம்மை, நம்மை, தன்பதி, நம்பதி. (35) 238. இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும் போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற் கியையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே. சூ-ம், எவ்வகை மொழிக்கும் ஆவதோர் விதி கூறியது. (இ-ள்) இடையுரி வடசொலின் - இடைச் சொல்லினும், உரிச் சொல் லினும் வட சொல்லினும், இயம்பிய கொளாதவும் - மேல் ஒதிய புணர்ச்சி விதி கொள்ளாது மாறுபட்டு வருவனவும், போலியும் மரூஉவும் - இலக்கணப் போலியும் மரூஉ மொழியும் இரு வகை வழக்கின் நடக்கும் முறைமை அறிந்து, பொருந்தியவாற்றிற்கு - அவற்றவற்றிற்குப் பொருந்து முறைமையாக, இயையப் புணர்த்தல் - பொருந்தும் படிக்குப் புணர்ப்பது, யாவர்க்கு நெறியே - கற்றோர் எல்லார்க்கும் கடனாகும் என்றவாறு. (36) நான்காவது மெய்யீற்றுப் புணரியல் முற்றும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 135 எனவும் இருவழியும் நக்கள் வரத் டவ்வும் நணவ்வும் ஆயிற்று . ( 34 ) 237. உருபின் முடிபவை யொக்குமப் பொருளினும் . சூ - ம் பதப்புணர்ச்சிக்கு ஓர் கருவி கூறியது . ( - ள் ) உருபின் முடிபவை - மேல் உருபுப் புணர்ச்சிக்கண் முடிந்த முடிவெல்லாம் ஒக்குமப் பொருளினும் - அவ்வுருபின் பொருளான பதப் புணர்ச்சிக்கண்ணும் ஒக்கும் என்றவாறு . - ம் : தன்னை தம்மை நம்மை தன்பதி நம்பதி . ( 35 ) 238. இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும் போலியு மரூஉவும் பொருந்திய வாற்றிற் கியையப் புணர்த்தல் யாவர்க்கு நெறியே . சூ - ம் எவ்வகை மொழிக்கும் ஆவதோர் விதி கூறியது . ( - ள் ) இடையுரி வடசொலின் - இடைச் சொல்லினும் உரிச் சொல் லினும் வட சொல்லினும் இயம்பிய கொளாதவும் - மேல் ஒதிய புணர்ச்சி விதி கொள்ளாது மாறுபட்டு வருவனவும் போலியும் மரூஉவும் - இலக்கணப் போலியும் மரூஉ மொழியும் இரு வகை வழக்கின் நடக்கும் முறைமை அறிந்து பொருந்தியவாற்றிற்கு - அவற்றவற்றிற்குப் பொருந்து முறைமையாக இயையப் புணர்த்தல் - பொருந்தும் படிக்குப் புணர்ப்பது யாவர்க்கு நெறியே - கற்றோர் எல்லார்க்கும் கடனாகும் என்றவாறு . ( 36 ) நான்காவது மெய்யீற்றுப் புணரியல் முற்றும்