நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 12 பிரிட்டிஷ் நூலகத்தின் கீழ்த்திசைப் பிரிவில் இந்தச் சுவடி இருந்து வருகிறது. 1884வது ஆண்டு பிப்ரவரி மாதம் ஆர்.பி.எஸ். (RPS) ஜி.சி.டி. (G.C.T.) என்ற முதலெழுத்துக்களையுடைய இரு நூலக உதவியாளர்களால் இந்தச் சுவடி பரிசோதிக்கப்பட்டு ஏட்டு (folio) முறையில் மூன்று முதல் நூற்றிருபத்தொன்று வரையில் புதிதாக எண்ணிடப்பட்டுள்ளது. மேலே விவரிக்கப்பட்ட இந்தச் சுவடியே இப்போது நூலுருவில் முதன்முதலாக வெளிவருகிறது. தொல்காப்பியத்திற்குப் பின்னர் இடைக்காலத்தில் எழுந்த இலக்கண நூலே நன்னூல். இது பவணந்தி என்னும் சமண முனிவ ரால் கி.பி.12ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 13ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இயற்றப்பட்டிருக்கலாமென இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. மறைந்தவை போகத் தமிழில் காணப்படும் இலக்கணங்களில் நன்னூலே மிகச் சிறந்த இலக்கண மாகும். காலத்தால் மிகப் பிந்தியதாயினும் தொல்காப்பியத்தை விடவும் பரவலாக விரும்பிப் பயிலப்பட்டு வரும் இலக்கணம் இது என்பதைத் தமிழுலகு நன்கு அறியும். இந்த இலக்கணத்திற்கு மயிலைநாதரால் கி.பி.14வது நூற் றாண்டில் ஒரு உரை இயற்றப்பட்டது. கிடைத்துள்ள நன்னூல் உரை களில் பழமையானது இதுவே. இந்த உரையை அடியொற்றி ஆனால் மேலும் பல விளக்கங்களைச் சேர்த்து விரிவுபடுத்திச் சங்கர நமச் சிவாயர் என்பவர் கி.பி.17வது நூற்றாண்டில் மற்றொரு உரை செய்துள்ளார். இந்த இரு உரைகளும் பொழிப்புரைகளாகும். தமிழ் நாட்டின் தலைசிறந்த பதிப்பாசிரியராகிய உ.வே. சாமிநாதையர் இந்த இரு உரைகளையும் முறையே 1918லும் 1925லும் செப்ப மாகப் பதிப்பித்துள்ளார். பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர் சங்கரநமச்சிவாயரின் உரையில் சிற்சில இடங் களில் புதிய விளக்கங்களைச் சேர்த்து அந்த உரையை மேலும் புதுக்கினார். இது நன்னூல் விருத்தியுரை' என்றும் புத்தம் புத்துரை' என்றும் வழங்கப்படுகிறது. இந்த உரையை நல்லூர் ஆறுமுக நாவலர் நல்ல முறையில் 1851ல் வெளியிட்டுள்ளார். மேலே குறித்த மூன்று உரைகளுமே இன்றளவும் தமிழறிஞர்களால் விரும்பிப் பயிலப்படுகின்றன. பயிலுவதற்குச் சிறிது கடினமாக இந்த உரைகள் தோன்றிய காரணத்தினால் விசாகப்பெருமாளையர், இராமானுச கவிராயர், ஆறுமுகநாவலர், சடகோபராமாநுசாச்சாரியார் முதலியோர் 19ஆம் நூற்றாண்டில் நன்னூலுக்குக் காண்டிகையுரைகளை இயற்றி
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 12 பிரிட்டிஷ் நூலகத்தின் கீழ்த்திசைப் பிரிவில் இந்தச் சுவடி இருந்து வருகிறது . 1884 வது ஆண்டு பிப்ரவரி மாதம் ஆர்.பி.எஸ் . ( RPS ) ஜி.சி.டி. ( G.C.T. ) என்ற முதலெழுத்துக்களையுடைய இரு நூலக உதவியாளர்களால் இந்தச் சுவடி பரிசோதிக்கப்பட்டு ஏட்டு ( folio ) முறையில் மூன்று முதல் நூற்றிருபத்தொன்று வரையில் புதிதாக எண்ணிடப்பட்டுள்ளது . மேலே விவரிக்கப்பட்ட இந்தச் சுவடியே இப்போது நூலுருவில் முதன்முதலாக வெளிவருகிறது . தொல்காப்பியத்திற்குப் பின்னர் இடைக்காலத்தில் எழுந்த இலக்கண நூலே நன்னூல் . இது பவணந்தி என்னும் சமண முனிவ ரால் கி.பி .12 ம் நூற்றாண்டின் இறுதி அல்லது 13 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இயற்றப்பட்டிருக்கலாமென இலக்கிய வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது . மறைந்தவை போகத் தமிழில் காணப்படும் இலக்கணங்களில் நன்னூலே மிகச் சிறந்த இலக்கண மாகும் . காலத்தால் மிகப் பிந்தியதாயினும் தொல்காப்பியத்தை விடவும் பரவலாக விரும்பிப் பயிலப்பட்டு வரும் இலக்கணம் இது என்பதைத் தமிழுலகு நன்கு அறியும் . இந்த இலக்கணத்திற்கு மயிலைநாதரால் கி.பி .14 வது நூற் றாண்டில் ஒரு உரை இயற்றப்பட்டது . கிடைத்துள்ள நன்னூல் உரை களில் பழமையானது இதுவே . இந்த உரையை அடியொற்றி ஆனால் மேலும் பல விளக்கங்களைச் சேர்த்து விரிவுபடுத்திச் சங்கர நமச் சிவாயர் என்பவர் கி.பி .17 வது நூற்றாண்டில் மற்றொரு உரை செய்துள்ளார் . இந்த இரு உரைகளும் பொழிப்புரைகளாகும் . தமிழ் நாட்டின் தலைசிறந்த பதிப்பாசிரியராகிய உ.வே. சாமிநாதையர் இந்த இரு உரைகளையும் முறையே 1918 லும் 1925 லும் செப்ப மாகப் பதிப்பித்துள்ளார் . பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவஞான முனிவர் சங்கரநமச்சிவாயரின் உரையில் சிற்சில இடங் களில் புதிய விளக்கங்களைச் சேர்த்து அந்த உரையை மேலும் புதுக்கினார் . இது நன்னூல் விருத்தியுரை ' என்றும் புத்தம் புத்துரை ' என்றும் வழங்கப்படுகிறது . இந்த உரையை நல்லூர் ஆறுமுக நாவலர் நல்ல முறையில் 1851 ல் வெளியிட்டுள்ளார் . மேலே குறித்த மூன்று உரைகளுமே இன்றளவும் தமிழறிஞர்களால் விரும்பிப் பயிலப்படுகின்றன . பயிலுவதற்குச் சிறிது கடினமாக இந்த உரைகள் தோன்றிய காரணத்தினால் விசாகப்பெருமாளையர் இராமானுச கவிராயர் ஆறுமுகநாவலர் சடகோபராமாநுசாச்சாரியார் முதலியோர் 19 ஆம் நூற்றாண்டில் நன்னூலுக்குக் காண்டிகையுரைகளை இயற்றி