நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

128) எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் வரின் - வருமொழி முதலாக உயிர்க்கணமும் இடைக்கணமும் வந்தால், இயல்பு முள - நிலைமொழி ஈற்றினின்ற மகரம் கெடாமல் இயல் பாய் நிற்றலுமுள. உ-ம்: குளக்கரை குளங்கரை என வேற்றுமைக்கண் உறழ்ந்தன. மரமழகிது, வலிது, யாது என அல்வழி இயல்பாயின. (17) 220. நுந்தம், எம் நம் மீறா மவ்வரு ஞநவே. சூ-ம், சுற்றப் பெயர் ஈற்றினின்ற மகரம் புணருமாறு கூறியது. (இ-ள்) நுந்தம் எம் நம் - நும் தம் எம் நம் என்னும் இந்நான்கு பெய ரும், ஈறாம் - நிலைமொழியாய் நின்றதனீற்றின் மகரம், வரு ஞ நவே - மேல் வருமொழி முதல் வந்த ஞகர நகரங்களாய்த் திரியும் என்ற வாறு. உ-ம்: நும், தம், எம், நம் ஞாண், நூல் என வரும். (18) 221. அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும். சூ-ம், அகமென்னும் மகரவீற்றுச் சொற் புணர்ச்சி கூறியது. (இ-ள்) அகமுனர் - நிலைமொழியாய் நின்ற அகம் என்னும் மகர வீற் றுச் சொல் முன்னர், செவி கை வரின் - செவி கை என்னும் இவ்விரு சொல்லும் வந்து புணர்ந்தால், இடை ய ன கெடும் - நிலை மொழி யிடை நின்ற உயிர்மெய் கெடும் என்றவாறு. உ-ம்: “அஞ்செவி நிறைய மந்திர மோதி”, “அங்கையி னெல்லி யதன்பயன்” (பு.வெ.34) எனவும் வரும். 222. ஈமுங், கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே. சூ-ம், ஈம் கம் உரும் என்னும் இம் மூன்று சொல்லின் ஈற்றினின்ற மகர விகாரம் கூறியது. (இ-ள்) ஈமுங் கம்மு முருமும் - ஈம், கம், உரும் என்னும் இம்மூன்று சொல்லின் ஈற்றினின்ற மகரவொற்று, தொழிற்பெயர் மானும் - தொழிற்பெயர் போல உகரம் பெற்று உயிரீற்றுப் புணர்ச்சியாம், முதலன - முதனின்ற ஈமும் கம்முன் என்னும் இவ்விரு சொற்களும், வேற்றுமைக்கு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணே, அவ்வும் பெறுமே - அவ்வீற்று மகரம் அகரச் சாரியையும் பெறும் என்றவாறு.
128 ) எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் வரின் - வருமொழி முதலாக உயிர்க்கணமும் இடைக்கணமும் வந்தால் இயல்பு முள - நிலைமொழி ஈற்றினின்ற மகரம் கெடாமல் இயல் பாய் நிற்றலுமுள . - ம் : குளக்கரை குளங்கரை என வேற்றுமைக்கண் உறழ்ந்தன . மரமழகிது வலிது யாது என அல்வழி இயல்பாயின . ( 17 ) 220. நுந்தம் எம் நம் மீறா மவ்வரு ஞநவே . சூ - ம் சுற்றப் பெயர் ஈற்றினின்ற மகரம் புணருமாறு கூறியது . ( - ள் ) நுந்தம் எம் நம் - நும் தம் எம் நம் என்னும் இந்நான்கு பெய ரும் ஈறாம் - நிலைமொழியாய் நின்றதனீற்றின் மகரம் வரு நவே - மேல் வருமொழி முதல் வந்த ஞகர நகரங்களாய்த் திரியும் என்ற வாறு . - ம் : நும் தம் எம் நம் ஞாண் நூல் என வரும் . ( 18 ) 221. அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும் . சூ - ம் அகமென்னும் மகரவீற்றுச் சொற் புணர்ச்சி கூறியது . ( - ள் ) அகமுனர் - நிலைமொழியாய் நின்ற அகம் என்னும் மகர வீற் றுச் சொல் முன்னர் செவி கை வரின் - செவி கை என்னும் இவ்விரு சொல்லும் வந்து புணர்ந்தால் இடை கெடும் - நிலை மொழி யிடை நின்ற உயிர்மெய் கெடும் என்றவாறு . - ம் : அஞ்செவி நிறைய மந்திர மோதி அங்கையி னெல்லி யதன்பயன் ( பு.வெ .34 ) எனவும் வரும் . 222. ஈமுங் கம்மு முருமுந் தொழிற்பெயர் மானும் முதலன வேற்றுமைக் கவ்வும் பெறுமே . சூ - ம் ஈம் கம் உரும் என்னும் இம் மூன்று சொல்லின் ஈற்றினின்ற மகர விகாரம் கூறியது . ( - ள் ) ஈமுங் கம்மு முருமும் - ஈம் கம் உரும் என்னும் இம்மூன்று சொல்லின் ஈற்றினின்ற மகரவொற்று தொழிற்பெயர் மானும் - தொழிற்பெயர் போல உகரம் பெற்று உயிரீற்றுப் புணர்ச்சியாம் முதலன - முதனின்ற ஈமும் கம்முன் என்னும் இவ்விரு சொற்களும் வேற்றுமைக்கு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணே அவ்வும் பெறுமே - அவ்வீற்று மகரம் அகரச் சாரியையும் பெறும் என்றவாறு .