நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

126 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் 215. குயினூன் வேற்றுமைக் கண்ணு மியல்பே. சூ-ம், குயின் ஊன் என்னும் இவ்விரு சொல்லும் புணருமாறு கூறி யது. (இ-ள்) குயினூன் - குயின் ஊன் என்னும் இவ்விரு சொல்லின் ஈற்றினின்ற னகர ஒற்றின்மேல், வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், இயல்பே - வருமொழிமுதல் வல்லினம் வந்தால் இயல்பாய் முடியும் என்றவாறு. உ-ம்: குயின் குழாம், செறிவு, திரள், பெருமை, மாட்சி, வலிமை எனவும் ஊன் கடுமை, சிறுமை, தீமை, பெருமை, மாட்சி, வலிமை எனவும் வரும். குயின் - கொண்மூ (13) 216. மின் பின் பன் கன் றொழிற்பெய ரனைய கன்னவ் வேற்று மென்மையோ றெழும். சூ-ம், மின், பின், பன், கன் என்னும் இந்நான்கு சொல்லும் புணருமாறு கூறியது, (இ-ள்) மின் பின் பன் கன் - மின் பின் பன் கன் என்னும் இந்நான்கு சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்று, தொழிற் பெயரனைய - தொழிற்பெயரே போல உகரம் பெற்று வல்லெழுத்துப் பெறும்; இயல்பு கணம் வரின் இயல்புமாம்; கன் அவ்வேற்று - கன் என்னும் சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்று அகரச் சாரியை ஏற்று, மென் மையோ டுறழும் - வல்லெழுத்து மெல்லெழுத்து மிக்கு முடியும் என்ற வாறு. உ-ம்: மின்னு, பின்னு, பன்னு, கன்னுக்கடிது, சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும் கடுமை, சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் இருவழியும் உகரத்தோடு வன்மை மிக்கன; ஏனைய இயல்பாயின. கன்னங்கடிது, கன்னக் கடிது, கன்னங் கடுமை, கன்னக் கடுமை எனக் கண் அகரம் பெற்று வன்மை மென்மை உறழ்ந்து வந்தது. (14) 217. தன்னென் னென்பவற் றீற்றின் வன்மையோ டுறழு நின்னீ றியல்பா முறவே. சூ-ம், தன் என் நின் என்னும் சொற்கள் புணருமாறு கூறியது.
126 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் 215. குயினூன் வேற்றுமைக் கண்ணு மியல்பே . சூ - ம் குயின் ஊன் என்னும் இவ்விரு சொல்லும் புணருமாறு கூறி யது . ( - ள் ) குயினூன் - குயின் ஊன் என்னும் இவ்விரு சொல்லின் ஈற்றினின்ற னகர ஒற்றின்மேல் வேற்றுமைக்கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும் இயல்பே - வருமொழிமுதல் வல்லினம் வந்தால் இயல்பாய் முடியும் என்றவாறு . - ம் : குயின் குழாம் செறிவு திரள் பெருமை மாட்சி வலிமை எனவும் ஊன் கடுமை சிறுமை தீமை பெருமை மாட்சி வலிமை எனவும் வரும் . குயின் - கொண்மூ ( 13 ) 216. மின் பின் பன் கன் றொழிற்பெய ரனைய கன்னவ் வேற்று மென்மையோ றெழும் . சூ - ம் மின் பின் பன் கன் என்னும் இந்நான்கு சொல்லும் புணருமாறு கூறியது ( - ள் ) மின் பின் பன் கன் - மின் பின் பன் கன் என்னும் இந்நான்கு சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்று தொழிற் பெயரனைய - தொழிற்பெயரே போல உகரம் பெற்று வல்லெழுத்துப் பெறும் ; இயல்பு கணம் வரின் இயல்புமாம் ; கன் அவ்வேற்று - கன் என்னும் சொல்லின் ஈற்றினின்ற னகரவொற்று அகரச் சாரியை ஏற்று மென் மையோ டுறழும் - வல்லெழுத்து மெல்லெழுத்து மிக்கு முடியும் என்ற வாறு . - ம் : மின்னு பின்னு பன்னு கன்னுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் இருவழியும் உகரத்தோடு வன்மை மிக்கன ; ஏனைய இயல்பாயின . கன்னங்கடிது கன்னக் கடிது கன்னங் கடுமை கன்னக் கடுமை எனக் கண் அகரம் பெற்று வன்மை மென்மை உறழ்ந்து வந்தது . ( 14 ) 217. தன்னென் னென்பவற் றீற்றின் வன்மையோ டுறழு நின்னீ றியல்பா முறவே . சூ - ம் தன் என் நின் என்னும் சொற்கள் புணருமாறு கூறியது .