நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 119 பது எதிர்மறை, நன்றோ தீதோ என்பது தெரிநிலை, அவனோ போனான் என்பது கழிவு, "காணிய வம்மினோ கங்குலது நிலையே” என்பது அசைநிலை, அவனோ கொண்டான் என்பது பிரிநிலை எனவும் இயல்பாயின. (50) ஐகார வீற்றுச் சிறப்புவிதி 201. வேற்றுமை யாயி னைகா னிறுமொழி ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே. சூ-ம், ஐகாரவீறு புணருமாறு கூறியது. (இ-ள்) வேற்றுமையாயின் - வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணே வல்லி னம் வந்ததாயின், ஐகானிறு மொழி - ஐகாரவீற்று நிலைமொழி, ஈற் றழிவோடும் - தன்னீற்று ஐகாரம் கெடுதலுடனே, அம்மேற்பவும் உளவே - அம்முச் சாரியை பெறுதலும் உளவென்றவாறு. உ-ம்: ஆவிரங்கோடு, வழுதுணங்காய், தூதுணங்காய், தில்லங் காய், பாவட்டங்காய், செதிள், தோல், பூ எனவும் ஓலம்போழ் எனவும் வரும். “ஈற்றழிவோடம் மேற்பவும்” என்பதினானே ஈற்றழிவின்றி அம்மேற்பவு முள. அவை அரையங்காய், மனையங்காய் எனவும் வரும். வல் லெழுத்துப் பேறும் கொள்க. (51) 202. பனை முன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐபோ யம்முந் திரள்வரி னுறழ்வும் அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை. சூ-ம், பனையென்னும் ஐகாரவீற்றுப் புணர்ச்சி கூறியது. . (இ-ள்) பனைமுன் கொடிவரின் - நிலையாக நின்ற பனையென்னும் பெயர் முன்னர் சேரன் அணியும் கொடி வரின், மிகலும் - வந்த கொடி முதன் வன்மை மிகலும், வலி வரின் - மற்றும் வன்மை வந்தால், ஐபோயம் மும் - நிலையாக நின்ற தன் ஈற்றைகாரம் போய் அம்முச்சாரியை பெறு தலும், திரள் வரின் உறழ்வும் - திரள் என்பது வரின் அப்பெற்றிட லொடு விகற்பித்தும், அட்டுறின் - அட்டு என்பது வரின், ஐகெட்டந் நீள்வுமாம் - ஈற்றினின்ற ஐகாரம் போய் வந்த அகரம் ஆகாரம் ஆதலு மாம், வேற்றுமை - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உ-ம்! பனைக்கொடி, பனங்காய், செறும்பு, தூண், பழம் எனவும்; பனந்திரள், பனைத்திரள் எனவும்; பனாட்டு எனவும் முறையே காண்க. இதற்கு வரும் அகலமும் உரையிற் கொள்க. (52) மூன்றாவது உயிரீற்றுப் புணரியல் முற்றும்.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 119 பது எதிர்மறை நன்றோ தீதோ என்பது தெரிநிலை அவனோ போனான் என்பது கழிவு காணிய வம்மினோ கங்குலது நிலையே என்பது அசைநிலை அவனோ கொண்டான் என்பது பிரிநிலை எனவும் இயல்பாயின . ( 50 ) ஐகார வீற்றுச் சிறப்புவிதி 201. வேற்றுமை யாயி னைகா னிறுமொழி ஈற்றழி வோடுமம் மேற்பவு முளவே . சூ - ம் ஐகாரவீறு புணருமாறு கூறியது . ( - ள் ) வேற்றுமையாயின் - வேற்றுமைப் புணர்ச்சிக்கண்ணே வல்லி னம் வந்ததாயின் ஐகானிறு மொழி - ஐகாரவீற்று நிலைமொழி ஈற் றழிவோடும் - தன்னீற்று ஐகாரம் கெடுதலுடனே அம்மேற்பவும் உளவே - அம்முச் சாரியை பெறுதலும் உளவென்றவாறு . - ம் : ஆவிரங்கோடு வழுதுணங்காய் தூதுணங்காய் தில்லங் காய் பாவட்டங்காய் செதிள் தோல் பூ எனவும் ஓலம்போழ் எனவும் வரும் . ஈற்றழிவோடம் மேற்பவும் என்பதினானே ஈற்றழிவின்றி அம்மேற்பவு முள . அவை அரையங்காய் மனையங்காய் எனவும் வரும் . வல் லெழுத்துப் பேறும் கொள்க . ( 51 ) 202. பனை முன் கொடிவரின் மிகலும் வலிவரின் ஐபோ யம்முந் திரள்வரி னுறழ்வும் அட்டுறி னைகெட்டந் நீள்வுமாம் வேற்றுமை . சூ - ம் பனையென்னும் ஐகாரவீற்றுப் புணர்ச்சி கூறியது . . ( - ள் ) பனைமுன் கொடிவரின் - நிலையாக நின்ற பனையென்னும் பெயர் முன்னர் சேரன் அணியும் கொடி வரின் மிகலும் - வந்த கொடி முதன் வன்மை மிகலும் வலி வரின் - மற்றும் வன்மை வந்தால் ஐபோயம் மும் - நிலையாக நின்ற தன் ஈற்றைகாரம் போய் அம்முச்சாரியை பெறு தலும் திரள் வரின் உறழ்வும் - திரள் என்பது வரின் அப்பெற்றிட லொடு விகற்பித்தும் அட்டுறின் - அட்டு என்பது வரின் ஐகெட்டந் நீள்வுமாம் - ஈற்றினின்ற ஐகாரம் போய் வந்த அகரம் ஆகாரம் ஆதலு மாம் வேற்றுமை - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு . - ம் ! பனைக்கொடி பனங்காய் செறும்பு தூண் பழம் எனவும் ; பனந்திரள் பனைத்திரள் எனவும் ; பனாட்டு எனவும் முறையே காண்க . இதற்கு வரும் அகலமும் உரையிற் கொள்க . ( 52 ) மூன்றாவது உயிரீற்றுப் புணரியல் முற்றும் .