நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

பதிப்புரை 1. தமிழகத்திலும் அதன் அண்டை மாநிலங்களிலும் இலங்கை போன்ற புறநிலைப் பகுதிகளிலும் சிதறிக் கிடக்கும் தமிழ்ச் சுவடிகள் முறையாகவும் முழுமையாகவும் தேடிச் சேகரிக்கப் படாத நிலை. 2. அச்சிடும் முறை தமிழகத்தில் நன்றாகப் பயிற்சிக்கு வரும் முன்பாகவே ஆயிரக்கணக்கான தமிழ்ச்சுவடிகள் இந்திய மண்ணி லிருந்து இடம் பெயர்ந்துவிட்ட நிலை. 3. திட்டமிட்டுப் பணியாற்றி என்னென்ன ஏடுகள் எங்கெங்கே குடி யேறியுள்ளன என்று தெரிந்துகொள்ள முயலாமலே சில நூல் சளும் உரைகளும் அழிந்துவிட்டனவென்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் நிலை. அடிப்படையான இந்த மூன்று காரணங் களினால் தமிழிலக்கிய வரலாற்றின் பகுதிகள் சில இன்னும் தெளிவுபடாமலே இருக்கின்றன. காலக்கோலத்தினால் இந்திய மண்ணிலிருந்து பயணமாகி ஐரோப் பிய நூலகங்களில் குடியேறிவிட்ட எண்ணற்ற தமிழ்ச் சுவடிகளுள் ஒன்றே 'நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும்' ஆகும். இது பிரிட்டீஷ் நூலகத்தின் (Thic British Library) கீழ்த்திசைப் பகுதியில் (Oricnal Departinent) பத்திரமாக இருக்கிறது. இந்த நூலகத்தின் கையெழுத்துப் பட்டியலில் (Handlist) Nannul, a Tamil grammar என்ற பெயரில் Oricntal 2724 என்ற எண்ணுடன் பதிவாகி யுள்ளது. இது ஒரு காகிதப் பிரதி. மையினால் (ink) எழுதப்பட்டுள் எது. சிதைவு சிறிதுமின்றி நன்றாகப் 'பைண்டு' செய்து வைக்கப் பட்டுள்ளது. ஒன்று முதல் இருநூற்று நாற்பத்தொன்று வரை பக்க மிடப்பட்டு முழுமையான நிலையில் இருக்கிறது. பக்கத்திற்குச் சராசரி இருபத்தைந்து வரிக்குக் குறையாமல் எழுதப்பட்டுள்ளது. நூற்றெட்டாவது பக்கம் வரையில் கோடிடாமலும் அதற்குப்பின்னர் கோடிட்டும் அடித்தல் திருத்தல் அதிகமின்றி எளிதில் படிக்குமாறு தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இடையிடையே சிற்சில இடங்களில் வேறு மையினால் திருத்தப்பட்டிருக்கிறது. இது ஓலைச்சுவடியோ அல்லது ஆசிரியரின் மூலக்கையேடோ (Autograph) அல்ல. டாக்டர் ஆர்தர் கோக் பர்னல் (Dr. Arthur Coke Burnell (1840- 1882)) என்பவருடைய சொந்த நூலகம். அவர் காலமாகிவிட்ட பின் 1884வது வருடம் ஜனவரி மாதம் விற்கப்பட்டது. அந்த விற்பனைக் குப் பிறகு, இன்னும் சரியாகச் சொன்னால் 18.1.1884 முதல்
பதிப்புரை 1. தமிழகத்திலும் அதன் அண்டை மாநிலங்களிலும் இலங்கை போன்ற புறநிலைப் பகுதிகளிலும் சிதறிக் கிடக்கும் தமிழ்ச் சுவடிகள் முறையாகவும் முழுமையாகவும் தேடிச் சேகரிக்கப் படாத நிலை . 2. அச்சிடும் முறை தமிழகத்தில் நன்றாகப் பயிற்சிக்கு வரும் முன்பாகவே ஆயிரக்கணக்கான தமிழ்ச்சுவடிகள் இந்திய மண்ணி லிருந்து இடம் பெயர்ந்துவிட்ட நிலை . 3. திட்டமிட்டுப் பணியாற்றி என்னென்ன ஏடுகள் எங்கெங்கே குடி யேறியுள்ளன என்று தெரிந்துகொள்ள முயலாமலே சில நூல் சளும் உரைகளும் அழிந்துவிட்டனவென்று உறுதியாக நம்பிக் கொண்டிருக்கும் நிலை . அடிப்படையான இந்த மூன்று காரணங் களினால் தமிழிலக்கிய வரலாற்றின் பகுதிகள் சில இன்னும் தெளிவுபடாமலே இருக்கின்றன . காலக்கோலத்தினால் இந்திய மண்ணிலிருந்து பயணமாகி ஐரோப் பிய நூலகங்களில் குடியேறிவிட்ட எண்ணற்ற தமிழ்ச் சுவடிகளுள் ஒன்றே ' நன்னூல் மூலமும் கூழங்கைத் தம்பிரான் உரையும் ' ஆகும் . இது பிரிட்டீஷ் நூலகத்தின் ( Thic British Library ) கீழ்த்திசைப் பகுதியில் ( Oricnal Departinent ) பத்திரமாக இருக்கிறது . இந்த நூலகத்தின் கையெழுத்துப் பட்டியலில் ( Handlist ) Nannul a Tamil grammar என்ற பெயரில் Oricntal 2724 என்ற எண்ணுடன் பதிவாகி யுள்ளது . இது ஒரு காகிதப் பிரதி . மையினால் ( ink ) எழுதப்பட்டுள் எது . சிதைவு சிறிதுமின்றி நன்றாகப் ' பைண்டு ' செய்து வைக்கப் பட்டுள்ளது . ஒன்று முதல் இருநூற்று நாற்பத்தொன்று வரை பக்க மிடப்பட்டு முழுமையான நிலையில் இருக்கிறது . பக்கத்திற்குச் சராசரி இருபத்தைந்து வரிக்குக் குறையாமல் எழுதப்பட்டுள்ளது . நூற்றெட்டாவது பக்கம் வரையில் கோடிடாமலும் அதற்குப்பின்னர் கோடிட்டும் அடித்தல் திருத்தல் அதிகமின்றி எளிதில் படிக்குமாறு தெளிவாக எழுதப்பட்டுள்ளது . இடையிடையே சிற்சில இடங்களில் வேறு மையினால் திருத்தப்பட்டிருக்கிறது . இது ஓலைச்சுவடியோ அல்லது ஆசிரியரின் மூலக்கையேடோ ( Autograph ) அல்ல . டாக்டர் ஆர்தர் கோக் பர்னல் ( Dr. Arthur Coke Burnell ( 1840 1882 ) ) என்பவருடைய சொந்த நூலகம் . அவர் காலமாகிவிட்ட பின் 1884 வது வருடம் ஜனவரி மாதம் விற்கப்பட்டது . அந்த விற்பனைக் குப் பிறகு இன்னும் சரியாகச் சொன்னால் 18.1.1884 முதல்