நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 1051 உ-ம்: சாக்குத்தினான் சீறினான், தகர்த்தான், படைத்தான் என வும் ஒட்டுக. வருமொழி வரையாமையின் நாற்கணமும் கொள்க. சாநீண்டான், மாண்டான், யார்த்தான், வீழ்ந்தான், அடைந்தான் என ஒட்டுக. (19) 170. பலசில வெனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பு மிகலு மகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முளபிற சூ-ம், பல சில என்னும் இவ்விரு சொல்லும் புணருமாறு கூறியது. (இ-ள்) பல சிலவெனும் இவை - அஃறிணைப் பன்மைப் பொருளை உணர்த்தும் அகரவீற்றுப் பெயராகிய பல சிலவென்னும் இவ்விரு சொற்களும், தம்முன் தாம் வரின் - பலவின்முன் பல வந்தாலும் சில வின்முன் சில வந்தாலும், இயல்புமிகலும் - இயல்பாய் முடிதலும் மிக்கு முடிதலுமாம்; அகரமேக - தம்மீற்றினின்ற அகரம் கெட, லகரம் றகரமாதலும் - அதனாற் பற்றப்பட்ட லகரவொற்று றகரவொற்றாய்த் திரிந்து முடிதலுமாம், பிற வரின் - இவற்றின் முன் பிற சொற்கள் வரினும், அகரம் விகற்பமாகலும் உள பிற - ஈற்றினின்ற அகரம் நிற்ற லும் நீங்கலும் உள என்றவாறு. உ-ம்: பலபல, சிலசில, பலப்பல, சிலச்சில என இயல்பாயும் மிக்கும் வந்தன. “பல் சான்றீரே” (புறம்.246) என அகரம் கெட்டது. பற்பல, சிற்சில என அகரம் கெட்டு லகரம் றகர மாய்த் திரிந்தது. பல்கலை பலகலை, பல்சாலை பலசாலை, பஃறாழிசை பல தாழிசை, பல்படை பல படை, பல நாள் பன்னாள், பல்மணி பன்மணி, பல்வளை பலவளை, பல்யானை பலயானை, பலவணி பல்லணி, பலவாயம் பல்லாயம், பல விழை பல்லிழை, பலவுரை பல்லுரை என அகரம் விகற்பித்து வந்தது. சிலவுக்கும் இவ்வாறே எடுத்துக் கொள்க. 'பிற'வென்ற மிகையானே பல்ல பல, சில்ல சில என்று வருவனவும், பலாம், சிலாம் என வருவனவும் பிற வல்லினம் வந்தவழி லகரம் திரியாமல் வருவதும் கொள்க. (20) ஆகாரவீற்றுச் சிறப்புவிதி 171. அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா. சூ-ம், எய்தியது விலக்கல் கூறியது. (இ-ள்) அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண் வரும், ஆமா - ஆவென்னும் பெயரும் மாவென்னும் பெயரும், மியா - முன்னிலை
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 1051 - ம் : சாக்குத்தினான் சீறினான் தகர்த்தான் படைத்தான் என வும் ஒட்டுக . வருமொழி வரையாமையின் நாற்கணமும் கொள்க . சாநீண்டான் மாண்டான் யார்த்தான் வீழ்ந்தான் அடைந்தான் என ஒட்டுக . ( 19 ) 170. பலசில வெனுமிவை தம்முன் தாம்வரின் இயல்பு மிகலு மகர மேக லகரம் றகர மாகலும் பிறவரின் அகரம் விகற்ப மாகலு முளபிற சூ - ம் பல சில என்னும் இவ்விரு சொல்லும் புணருமாறு கூறியது . ( - ள் ) பல சிலவெனும் இவை - அஃறிணைப் பன்மைப் பொருளை உணர்த்தும் அகரவீற்றுப் பெயராகிய பல சிலவென்னும் இவ்விரு சொற்களும் தம்முன் தாம் வரின் - பலவின்முன் பல வந்தாலும் சில வின்முன் சில வந்தாலும் இயல்புமிகலும் - இயல்பாய் முடிதலும் மிக்கு முடிதலுமாம் ; அகரமேக - தம்மீற்றினின்ற அகரம் கெட லகரம் றகரமாதலும் - அதனாற் பற்றப்பட்ட லகரவொற்று றகரவொற்றாய்த் திரிந்து முடிதலுமாம் பிற வரின் - இவற்றின் முன் பிற சொற்கள் வரினும் அகரம் விகற்பமாகலும் உள பிற - ஈற்றினின்ற அகரம் நிற்ற லும் நீங்கலும் உள என்றவாறு . - ம் : பலபல சிலசில பலப்பல சிலச்சில என இயல்பாயும் மிக்கும் வந்தன . பல் சான்றீரே ( புறம் .246 ) என அகரம் கெட்டது . பற்பல சிற்சில என அகரம் கெட்டு லகரம் றகர மாய்த் திரிந்தது . பல்கலை பலகலை பல்சாலை பலசாலை பஃறாழிசை பல தாழிசை பல்படை பல படை பல நாள் பன்னாள் பல்மணி பன்மணி பல்வளை பலவளை பல்யானை பலயானை பலவணி பல்லணி பலவாயம் பல்லாயம் பல விழை பல்லிழை பலவுரை பல்லுரை என அகரம் விகற்பித்து வந்தது . சிலவுக்கும் இவ்வாறே எடுத்துக் கொள்க . ' பிற'வென்ற மிகையானே பல்ல பல சில்ல சில என்று வருவனவும் பலாம் சிலாம் என வருவனவும் பிற வல்லினம் வந்தவழி லகரம் திரியாமல் வருவதும் கொள்க . ( 20 ) ஆகாரவீற்றுச் சிறப்புவிதி 171. அல்வழி யாமா மியாமுற்று முன்மிகா . சூ - ம் எய்தியது விலக்கல் கூறியது . ( - ள் ) அல்வழி - அல்வழிப் பொருட் புணர்ச்சிக்கண் வரும் ஆமா - ஆவென்னும் பெயரும் மாவென்னும் பெயரும் மியா - முன்னிலை