நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

9 இறுதிக் காலத்தில் கிறித்தவம் தழுவிய இவர், 'யோசேப் புராணம்' எனும் காவியத்தை 21 காண்டங்களில் 1023 பாக்களில் வடித்துள்ளார். இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை. டச்சு, போர்ச் சுக்கீசிய மொழிகளிலும் வல்லாண்மை பெற்ற இவர் யாருக்கும் அஞ்சாதவர். நடுவுநிலை பிறழாதவர். இவர் எழுதிய நன்னூல் உரை கிடைக்கவில்லை என்று அறிஞர் மு. அருணாசலம், புலவர் சோம. இளவரசு, பேராசிரியர் மு.வை. அரவிந்தன், முனைவர் க.ப. அற வாணன், புலவர் இளங்குமரன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு மறைந்து போனதாகத் தமிழ் அறிஞர்களால் கருதப் பட்ட கூழங்கைத் தம்பிரான் உரையைப் பிரிட்டிஷ் நூலகத்தில் கீழ்த் திசைப் பகுதியில் இருந்து எடுத்து முதல் பதிப்பாக 1980இல் முனைவர் அ. தாமோதரன் செர்மனியில் பதிப்பித்துள்ளார். தமிழ் அன்னை இழந்ததை மீட்டுத் தந்த முனைவர் அ. தாமோதரன் பாராட்டுக்குரியவர். எனவே தமிழ் உலகு அவர் இருக்கின்ற திசை நோக்கி வணங்கக் கடமைப்பட்டுள்ளது. 1980இல் செர்மனியில் வெளிவந்த இந்நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்புச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது. இந்நூலினை வெளியிட அனுமதி அளித்த முனைவர் அ. தாமோதரன் அவர்களுக்கும், அரிய நூல்கள் வெளியிடும் திட்டத் தின்கீழ் இந்நூலினை வெளியிட நிதி நல்கிய தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ச. நாகராசன் அவர்களுக்கும் நன்றி. நிறுவன வளர்ச்சியில் ஆக்கமும், ஊக்கமும் காட்டி வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க் குடிமகன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறைச் செயலாளர் திருமிகு த. இரா. சீனிவாசன் இ.ஆ.ப. அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. இந்நூலினை நல்ல முறையில் அச்சிட்டு உதவிய பார்க்கர் கம்பியூட்டர்ஸ் வே. கருணாநிதி அவர்களுக்கும் எங்கள் நன்றி. இயக்குநர்
9 இறுதிக் காலத்தில் கிறித்தவம் தழுவிய இவர் ' யோசேப் புராணம் ' எனும் காவியத்தை 21 காண்டங்களில் 1023 பாக்களில் வடித்துள்ளார் . இந்நூல் முழுமையும் கிடைக்கவில்லை . டச்சு போர்ச் சுக்கீசிய மொழிகளிலும் வல்லாண்மை பெற்ற இவர் யாருக்கும் அஞ்சாதவர் . நடுவுநிலை பிறழாதவர் . இவர் எழுதிய நன்னூல் உரை கிடைக்கவில்லை என்று அறிஞர் மு . அருணாசலம் புலவர் சோம . இளவரசு பேராசிரியர் மு.வை. அரவிந்தன் முனைவர் க.ப. அற வாணன் புலவர் இளங்குமரன் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர் . இவ்வாறு மறைந்து போனதாகத் தமிழ் அறிஞர்களால் கருதப் பட்ட கூழங்கைத் தம்பிரான் உரையைப் பிரிட்டிஷ் நூலகத்தில் கீழ்த் திசைப் பகுதியில் இருந்து எடுத்து முதல் பதிப்பாக 1980 இல் முனைவர் . தாமோதரன் செர்மனியில் பதிப்பித்துள்ளார் . தமிழ் அன்னை இழந்ததை மீட்டுத் தந்த முனைவர் . தாமோதரன் பாராட்டுக்குரியவர் . எனவே தமிழ் உலகு அவர் இருக்கின்ற திசை நோக்கி வணங்கக் கடமைப்பட்டுள்ளது . 1980 இல் செர்மனியில் வெளிவந்த இந்நூலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபதிப்புச் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறது . இந்நூலினை வெளியிட அனுமதி அளித்த முனைவர் . தாமோதரன் அவர்களுக்கும் அரிய நூல்கள் வெளியிடும் திட்டத் தின்கீழ் இந்நூலினை வெளியிட நிதி நல்கிய தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் . நாகராசன் அவர்களுக்கும் நன்றி . நிறுவன வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் காட்டி வருகின்ற நிறுவனத் தலைவர் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைவர் மு . தமிழ்க் குடிமகன் அவர்களுக்கும் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத்துறைச் செயலாளர் திருமிகு . இரா . சீனிவாசன் இ.ஆ.ப. அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி . இந்நூலினை நல்ல முறையில் அச்சிட்டு உதவிய பார்க்கர் கம்பியூட்டர்ஸ் வே . கருணாநிதி அவர்களுக்கும் எங்கள் நன்றி . இயக்குநர்