அபிதான சிந்தாமணி

பிலைகண்ணியபுண்ணியநிலை 399 கபீர்தாசர் னிறமான கண்களுள்ளது, 8. பொன் னிறமான குளம்புள்ளது, 9. பாதிரிப்பூ நிறமுள்ளது, 10. பொன்னிறமான வால் உள்ள து. (பார - அச்.) 2. ஒரு நதி நர்மதைக்குத் தெற்கிலுள் ளது. இது விழும் தலமுதலியவும் சவர்க்க மடையும். 3. புண்டரீகமென்னுந் திக்கானையின் பெண். 4, மகதநாட்டிலுள்ள ஓர் நகரம். கபில முனிவர் தவஞ்செய்த இடம். கபிலவாஸ் துவும் இதுவே. இது புத்தர் அவதார ஸ்தலம். (மணிமேகலை.) 5. கலிங்க நாட்டரசன் பட்டணம். கும ரன் எனும் அரசனாண்டது. (மணிமேகலை) கபிலைகண்ணிய புண்ணிய நிலை - தலைமை யாற் சிறந்த நான்கு வேதத்தினையுமு டைய அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய பசுவினது முறைமையைச் சொல்லியது. (பு.வெ. பாடாண்) கபீர்தாசர் - கங்கையில் கிளிஞ்சிலொன்று மிதந்துவா அதனை ஒரு துருக்கர் எடுத்துப் பிளந்தனர். அதில் குழந்தை யிருக்கக் கண்டு அதனை மனைவியிடங் கொடுக்க அவளுக்குப் பால் சுரக்கக்கண்டு அவள் அப் பிள்ளையை வளர்த்துக் கபீர் எனப் பெயரிட்டு மணமுஞ் செய்வித்தனள். கபீர் தாசர் இராமநாமம் மறவாமல் உள்ளத் துற வுடையராய்த் தம் நெய்தற்றொழில் செய் யாதிருத்தலைத் தாயுணர்ந்து உறுத்த, தாசர் நெய்தற்பொழில் மேற்கொண்டு நெய்து நெய்ததைத் தாயிடங்கொடுக்க அவள் கடைவீதியில் விற்றுவருகவெனச், சென் றவர் பெருமாளைத் தியானித்துத் தம்மை மறந்திருக்க வாங்குவோர் இது அதிக விலைபெறுமென அகலப் பொழுது போயி ன துணர்ந்து இதை வாங்குவார் காணாது அன்னை கோபிப்பாளென வருந்தி ஒரு பாழ்வீட்டை யடையப் பெருமாள் ஒரு விருத்த வேதியரைப்போல் வந்து நான் குளிரால் வருந்துகிறேன் எனக்கு ஒரு போர்வை தருக என இரக்கத், தாம் விற்க வந்ததில் ஒருபகுதி கிழித் தளித்திருக்கை யில் மீண்டும் பெருமாள் ஒரு பக்கிரி வேஷங் கொண்டடைந்து போர்வையைக் கேட்க அதனையும் அளித்தனர். பின் பெருமாள் கபீர் தாயினிடஞ் சென்று நீ விற்று வரச் சொன்ன ஆடையை விற்க வில்லை அவன் தானஞ்செய்து விட்டன னென்னத் தாய் கோபித்து அவன் வரின் தண்டிப்பே னென்னப் பெருமாள் அவ னுன்னிடம் அடையான். என்னைப் பின் பற்றின் அவனிருக்குமிடம் தெரிவிப்பே னெனத் தாய் அவ்வகைப் பின்வரத் தாசர் இருந்த வீட்டைக் காட்டிப் பெருமாள் வெளியில் இருந்தனர். தாய் தாசரை யடைந்து தடா நான் விற்கக் கூறிய கூறையெங்கெனக் கபீர் சும்மா விருக்கக் கண்டு அன்னை கோபிக்க வெளியிலிருந்த பெருமாள் அவ்வகைக் கேட்கின் கூரான் புடைக்கவேண்டு மெனத் தன் கையிலிரு ந்த கோலை நீட்ட அன்னை அதனைக்கொண் டடிக்கத் தாசர்மீதடித்த அடி பெருமா ளுக்கு முதுகிடைப்பட்டது கண்டு பெரு மாள் பட்ட அடிகளைக் காட்டி நிறுத்தக் கேட்க விடாதது கண்டு ஜானகியுட னெதி ரில் நிற்கத் தாசர் திருவடியைப் பற்றி விடாதிருக்கத் தாயும் உன்னால் பெருமா ளைக் கண்டேனென்று பிள்ளையை யணைத் து வீட்டிற்கு அழைத்துச் சென்றனள். கபீர் இவ்வகை இல்லறம் நடத்துகையில் மனைவியிடம் ஒரு புத்திரர் பிறக்க அவருக் குக் கமால்தாசர் எனப் பெயரிட்டு வளர் த்து வருகையில் அவர் வயதடைந்து துவாரகையைத் தரிசிக்க வேண்டுமெனத் தந்தையைக் கேட்கத் தந்தை அவ்வாறு விடைதரச் சென்று பெருமாளைத் தரிசித் து நான்கு மாதங்களிருந்து நீங்கிச் சித்திர கூட மடைய அவ்விடம் விட்டுணு தாசர் எதிரடைந்து தமது வீட்டிற் கழைத்துச் சென்று அமுது செய்விக்கக் கமால் தாசர் அன்றிரவு அவ்விடம் பஜனை செய்ய ஆனந் தங்கொண்டு ஒரு மாணிக்கந்தரக் கமால் தாசர் இது நாம் வேண்டோம் நமக்கு மணியுங் கல்லு மொன்றேயென மறுக்கக் கேட்டு அவரறியாவகை வஸ்திரத்திலதை முடித்தனர். பின் கமால் தம் பதியடையத் தந்தை முன் தானையில் மணியிருக்கக்கண்டு நீ ஸ்ரீ அரிநாமசங் கீர்த்தனையை விற்றுப் பிழைப்பவனென விசன முற்றழக் கமால் கண்டு அஞ்சி விஷ்ணுதாசரிடம் விரைந்து சென்று மாணிக்கத்தைத் தந்து தமது தந்தைபா லடைந்து தாம் யாத்திரை செய்த செய்திகூறி மகிழ்ந்தனர். பின்னொருநாள் அஸ்தமிக்கும் வேளையில் மூவர், இவர்கள் வீட்டுக்கு அதிதிகளாக வரக் கபீர் இவர்க களுக்கு அன்னமிடவேண்டி மனைவிக்குக் கூற மனைவி யொன்றுமிலாமையாலும்
பிலைகண்ணியபுண்ணியநிலை 399 கபீர்தாசர் னிறமான கண்களுள்ளது 8 . பொன் னிறமான குளம்புள்ளது 9 . பாதிரிப்பூ நிறமுள்ளது 10 . பொன்னிறமான வால் உள்ள து . ( பார - அச் . ) 2 . ஒரு நதி நர்மதைக்குத் தெற்கிலுள் ளது . இது விழும் தலமுதலியவும் சவர்க்க மடையும் . 3 . புண்டரீகமென்னுந் திக்கானையின் பெண் . 4 மகதநாட்டிலுள்ள ஓர் நகரம் . கபில முனிவர் தவஞ்செய்த இடம் . கபிலவாஸ் துவும் இதுவே . இது புத்தர் அவதார ஸ்தலம் . ( மணிமேகலை . ) 5 . கலிங்க நாட்டரசன் பட்டணம் . கும ரன் எனும் அரசனாண்டது . ( மணிமேகலை ) கபிலைகண்ணிய புண்ணிய நிலை - தலைமை யாற் சிறந்த நான்கு வேதத்தினையுமு டைய அந்தணர்க்குக் கொடுக்கக் கருதிய பசுவினது முறைமையைச் சொல்லியது . ( பு . வெ . பாடாண் ) கபீர்தாசர் - கங்கையில் கிளிஞ்சிலொன்று மிதந்துவா அதனை ஒரு துருக்கர் எடுத்துப் பிளந்தனர் . அதில் குழந்தை யிருக்கக் கண்டு அதனை மனைவியிடங் கொடுக்க அவளுக்குப் பால் சுரக்கக்கண்டு அவள் அப் பிள்ளையை வளர்த்துக் கபீர் எனப் பெயரிட்டு மணமுஞ் செய்வித்தனள் . கபீர் தாசர் இராமநாமம் மறவாமல் உள்ளத் துற வுடையராய்த் தம் நெய்தற்றொழில் செய் யாதிருத்தலைத் தாயுணர்ந்து உறுத்த தாசர் நெய்தற்பொழில் மேற்கொண்டு நெய்து நெய்ததைத் தாயிடங்கொடுக்க அவள் கடைவீதியில் விற்றுவருகவெனச் சென் றவர் பெருமாளைத் தியானித்துத் தம்மை மறந்திருக்க வாங்குவோர் இது அதிக விலைபெறுமென அகலப் பொழுது போயி துணர்ந்து இதை வாங்குவார் காணாது அன்னை கோபிப்பாளென வருந்தி ஒரு பாழ்வீட்டை யடையப் பெருமாள் ஒரு விருத்த வேதியரைப்போல் வந்து நான் குளிரால் வருந்துகிறேன் எனக்கு ஒரு போர்வை தருக என இரக்கத் தாம் விற்க வந்ததில் ஒருபகுதி கிழித் தளித்திருக்கை யில் மீண்டும் பெருமாள் ஒரு பக்கிரி வேஷங் கொண்டடைந்து போர்வையைக் கேட்க அதனையும் அளித்தனர் . பின் பெருமாள் கபீர் தாயினிடஞ் சென்று நீ விற்று வரச் சொன்ன ஆடையை விற்க வில்லை அவன் தானஞ்செய்து விட்டன னென்னத் தாய் கோபித்து அவன் வரின் தண்டிப்பே னென்னப் பெருமாள் அவ னுன்னிடம் அடையான் . என்னைப் பின் பற்றின் அவனிருக்குமிடம் தெரிவிப்பே னெனத் தாய் அவ்வகைப் பின்வரத் தாசர் இருந்த வீட்டைக் காட்டிப் பெருமாள் வெளியில் இருந்தனர் . தாய் தாசரை யடைந்து தடா நான் விற்கக் கூறிய கூறையெங்கெனக் கபீர் சும்மா விருக்கக் கண்டு அன்னை கோபிக்க வெளியிலிருந்த பெருமாள் அவ்வகைக் கேட்கின் கூரான் புடைக்கவேண்டு மெனத் தன் கையிலிரு ந்த கோலை நீட்ட அன்னை அதனைக்கொண் டடிக்கத் தாசர்மீதடித்த அடி பெருமா ளுக்கு முதுகிடைப்பட்டது கண்டு பெரு மாள் பட்ட அடிகளைக் காட்டி நிறுத்தக் கேட்க விடாதது கண்டு ஜானகியுட னெதி ரில் நிற்கத் தாசர் திருவடியைப் பற்றி விடாதிருக்கத் தாயும் உன்னால் பெருமா ளைக் கண்டேனென்று பிள்ளையை யணைத் து வீட்டிற்கு அழைத்துச் சென்றனள் . கபீர் இவ்வகை இல்லறம் நடத்துகையில் மனைவியிடம் ஒரு புத்திரர் பிறக்க அவருக் குக் கமால்தாசர் எனப் பெயரிட்டு வளர் த்து வருகையில் அவர் வயதடைந்து துவாரகையைத் தரிசிக்க வேண்டுமெனத் தந்தையைக் கேட்கத் தந்தை அவ்வாறு விடைதரச் சென்று பெருமாளைத் தரிசித் து நான்கு மாதங்களிருந்து நீங்கிச் சித்திர கூட மடைய அவ்விடம் விட்டுணு தாசர் எதிரடைந்து தமது வீட்டிற் கழைத்துச் சென்று அமுது செய்விக்கக் கமால் தாசர் அன்றிரவு அவ்விடம் பஜனை செய்ய ஆனந் தங்கொண்டு ஒரு மாணிக்கந்தரக் கமால் தாசர் இது நாம் வேண்டோம் நமக்கு மணியுங் கல்லு மொன்றேயென மறுக்கக் கேட்டு அவரறியாவகை வஸ்திரத்திலதை முடித்தனர் . பின் கமால் தம் பதியடையத் தந்தை முன் தானையில் மணியிருக்கக்கண்டு நீ ஸ்ரீ அரிநாமசங் கீர்த்தனையை விற்றுப் பிழைப்பவனென விசன முற்றழக் கமால் கண்டு அஞ்சி விஷ்ணுதாசரிடம் விரைந்து சென்று மாணிக்கத்தைத் தந்து தமது தந்தைபா லடைந்து தாம் யாத்திரை செய்த செய்திகூறி மகிழ்ந்தனர் . பின்னொருநாள் அஸ்தமிக்கும் வேளையில் மூவர் இவர்கள் வீட்டுக்கு அதிதிகளாக வரக் கபீர் இவர்க களுக்கு அன்னமிடவேண்டி மனைவிக்குக் கூற மனைவி யொன்றுமிலாமையாலும்