அபிதான சிந்தாமணி

ஆளவந்தார் 142 ஆளவந்தார் ஆளவந்தார்-1, மணக்கால் நம்பிக்குப் பின்வந்த வைஷ்ணவாசாரியர். இவர் கலி (50சஎ) க்குமேல் தாது வருஷம் ஆடிமீ புதன் கிழமை வீரநாராயண புரத்தில் அவதரித்தவர். தாய் அரங்கநாயகியம்மை . இவர் சிம்மானனாம்சம், நாதமுனிகள் பௌத்திரர். ஈசுரமுனிகளுக்குக் குமார், மகாபாஷ்யபட்டருடன் சாஸ்திராப்பியா சஞ் செய்தவர். ஆக்கியாழ்வான் என் னும் சமஸ்தான வித்வானுக்குக் கப்பல் கட்டும்படி மகாபாஷ்யபட்டருக்குத் திரு முகம்வா, அதைக் கிழித்தெறிந்து அரசன் அனுப்பிய தண்டிகையிற் சென்று ஆக்கி யாழ்வானை வாதத்தில் வென்று, இராஜ பத்தினியாகிய திருவரங்கத் தம்மையால் என்னை யாளவந்தவர் எனப் புகழப்பட்டு அரசன், வென்றவருக்குப் பாதிராஜ்யமும் தோற்றவர்க்குப் பணி செயலும் எனக் கூறிய பந்தயத்தில் இராஜ்யம் மாத்திரம் கொண்டு பணிசெய்தலை விலக்கிக் கிரகத் தராய்ச் சொட்டை நம்பி, தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளை யரசு நம்பி, திருவரங்கப் பெருமாளரையர், முதலிய புத்திரர்களைப் பெற்றுச் சுகித்திருந்தவர். மணக்கால் நம்பி இவர் பிரபாவத்தினைக் கேட்டுச் சங் தோஷித்து இவரைக் காணவந்தவிடத்துக் கட்டுங் காவலுமாயிருக்கக் காணக்கூடாமல் பரிசாரகரைக் கண்டு இவர் இனிப்பாயுண் ணும் பொருள் எது என வினாவினர். அவர்கள் தூதுளையெனக் கேட்டு அதனை நாடோறுங் மடைப்பள்ளிக்குக் கொடு த்துவந்து ஒருநாள் நிறுத்தினர். ஆளவந் தார், போசன காலத்தில் தூதுளையில்லா மையால் பரிசாரகரை வினாவினார். பரிசா ரகர், ஒரு விருத்தர் நாடோறுங் கொண்டு வந்து கொடுத்து வந்தனர்; அவர் இன் றைக்கு வராமையால் அது நின்றது என் றனர். அதைக் கேட்டு ஆளவந்தார் அவ் விருத்தர்வரின் என்னிடம் அனுப்புக எனப் பரிசாரகர் கேட்டு அவ்வகையே புரிய, ஆளவந்தார் மணக்கால் நம்பியைக் கண்டு பணிந்து என்னிடம் வந்தகாரணம் என்ன என்றனர். நம்பி, ஆளவந்தாரை நோக்கி நாம் உம்மிடத்து விரும்பியதொன்று மின்று, ஆயினும் உன் பிதாமகார் வைத்த பொருளை என்னிடம் இருந்து கைக்கொ ள்கவென்று, அதைக் கொள்வதற்கு ஏகா ந்தத்தில் நாமிருவருமே இருந்து தரப்பெற் றுக்கொள்ள வேண்டு மென்று ஏகாந்தத் திலிருந்து அன்று முதல் ரகஸ்யங்களை உப தேசித்து நாளுக்குநாள் சம்ஸாரத்தில், அருசிபிறக்கச் செய்து திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று நும்பி தாமகர் தேடி வைத்த மாநிதி இதுவேயெனப் பெருமா ளைக்காட்ட, ஆளவந்தார் தங் குமரர்களை 'யும், நம்பி திருவடிகளிலிட்டு, ஆச்ரயிக்கச் செய்து, ஆத்மசமர்ப்பணஞ்செய்து, சது சுலோகி யருளிச் செய்து, துரியாச்சிரமத் தைக் கைக்கொண்டனர். ஆளவந்தார் திரு வடிகளில் ஆச்ரயித்தவர்கள் : பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தாராழ் வார், பெரிய திருமலைநம்பி, திருமாலை யாண்டான், தெய்வவாரியாண்டான், வான மாமலை யாண்டான், ஈசாண்டான, திரு மோகூரப்பன், திருமோகூர் நின்றான், தெய்வப் பெருமாள். மாறனேறிநம்பி, திரு க்குருகூர் தாசர், திருமாலிருஞ் சோலை தா சர், திருவரங்கத் தம்மை, திருக்கச்சி நம்பி முதலியவராம். பின், குருகைக்காவலப் பன் யோகு செய்யுமிடத்தில், பின்னால் நின்று அவரழைக்க முன்னின்று, அவர் சொற்படி வரமறந்து, இளையாழ்வாருக் குப் பெருமாள் வில்லியருருக்கொண்டு, கடாக்ஷித்ததைக் கேட்டு ஸ்ரீ காஞ்சி நகர்க் குச் சென்று இளையாழ்வாருடன் பேசின் யாதவப்பிரகாசனிடம் வாசிப்பதற்குப் பங்கம் வருமென்று, அவரைக் குளிரக் கடாக்ஷித்துப் பெருமாளையும் பணிந்து, திருவரங்க மெழுந்தருளினர். சிலநாட் கழித்து இளையாழ்வாரைக் காண ஆவலுற் றவராகிப் பெரிய நம்பிகளை அனுப்ப அவர் வருவதற்கு முன், திருநாட்டுக் செழுந்தரு ளினர். இளையாழ்வார் வந்து, சாமவிக்கி ரகத்தைச் சேவிக்கையில் மூன்று விரல்கள் முடங்கி யிருக்க, இருந்தவர்களை வினாவி 'யுற்ற துணர்ந்து, பெருமாள் தலைக்கட்டக் கடவரென, அவை நிமிர்ந்தன. பின் இளை யாழ்வார் பெரிய பெருமாளைச் சேவியாது, ஸ்ரீ காஞ்சிக் கெழுந்தருளினர். இவர்க்கு யமுனைத் துறைவரென்றும் யாமுநாசார் யர் எனவும் பெயர். இவர் செய்த நூல்கள் ஆகமப் பிராமாண்யம், புருஷர்ணயம், ஆத்மசித்தி, ஈச்சுரசித்தி, கீதார்த்த சங்கி ரகம், ஸ்ரீ தோத்திரம், சதுச்லோகி முத வியன. (குருபரம்பரை). 2. இவர் பாண்டிய நாட்டு வீரையூரித் பிறந்த தமிழ்ப் புலவர். ஞானவாசிட்டத் தைத் தமிழிற் செய்யுளாகச் செய்தவர்.
ஆளவந்தார் 142 ஆளவந்தார் ஆளவந்தார் - 1 மணக்கால் நம்பிக்குப் பின்வந்த வைஷ்ணவாசாரியர் . இவர் கலி ( 50சஎ ) க்குமேல் தாது வருஷம் ஆடிமீ புதன் கிழமை வீரநாராயண புரத்தில் அவதரித்தவர் . தாய் அரங்கநாயகியம்மை . இவர் சிம்மானனாம்சம் நாதமுனிகள் பௌத்திரர் . ஈசுரமுனிகளுக்குக் குமார் மகாபாஷ்யபட்டருடன் சாஸ்திராப்பியா சஞ் செய்தவர் . ஆக்கியாழ்வான் என் னும் சமஸ்தான வித்வானுக்குக் கப்பல் கட்டும்படி மகாபாஷ்யபட்டருக்குத் திரு முகம்வா அதைக் கிழித்தெறிந்து அரசன் அனுப்பிய தண்டிகையிற் சென்று ஆக்கி யாழ்வானை வாதத்தில் வென்று இராஜ பத்தினியாகிய திருவரங்கத் தம்மையால் என்னை யாளவந்தவர் எனப் புகழப்பட்டு அரசன் வென்றவருக்குப் பாதிராஜ்யமும் தோற்றவர்க்குப் பணி செயலும் எனக் கூறிய பந்தயத்தில் இராஜ்யம் மாத்திரம் கொண்டு பணிசெய்தலை விலக்கிக் கிரகத் தராய்ச் சொட்டை நம்பி தெய்வத்துக்கரசு நம்பி பிள்ளை யரசு நம்பி திருவரங்கப் பெருமாளரையர் முதலிய புத்திரர்களைப் பெற்றுச் சுகித்திருந்தவர் . மணக்கால் நம்பி இவர் பிரபாவத்தினைக் கேட்டுச் சங் தோஷித்து இவரைக் காணவந்தவிடத்துக் கட்டுங் காவலுமாயிருக்கக் காணக்கூடாமல் பரிசாரகரைக் கண்டு இவர் இனிப்பாயுண் ணும் பொருள் எது என வினாவினர் . அவர்கள் தூதுளையெனக் கேட்டு அதனை நாடோறுங் மடைப்பள்ளிக்குக் கொடு த்துவந்து ஒருநாள் நிறுத்தினர் . ஆளவந் தார் போசன காலத்தில் தூதுளையில்லா மையால் பரிசாரகரை வினாவினார் . பரிசா ரகர் ஒரு விருத்தர் நாடோறுங் கொண்டு வந்து கொடுத்து வந்தனர் ; அவர் இன் றைக்கு வராமையால் அது நின்றது என் றனர் . அதைக் கேட்டு ஆளவந்தார் அவ் விருத்தர்வரின் என்னிடம் அனுப்புக எனப் பரிசாரகர் கேட்டு அவ்வகையே புரிய ஆளவந்தார் மணக்கால் நம்பியைக் கண்டு பணிந்து என்னிடம் வந்தகாரணம் என்ன என்றனர் . நம்பி ஆளவந்தாரை நோக்கி நாம் உம்மிடத்து விரும்பியதொன்று மின்று ஆயினும் உன் பிதாமகார் வைத்த பொருளை என்னிடம் இருந்து கைக்கொ ள்கவென்று அதைக் கொள்வதற்கு ஏகா ந்தத்தில் நாமிருவருமே இருந்து தரப்பெற் றுக்கொள்ள வேண்டு மென்று ஏகாந்தத் திலிருந்து அன்று முதல் ரகஸ்யங்களை உப தேசித்து நாளுக்குநாள் சம்ஸாரத்தில் அருசிபிறக்கச் செய்து திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று நும்பி தாமகர் தேடி வைத்த மாநிதி இதுவேயெனப் பெருமா ளைக்காட்ட ஆளவந்தார் தங் குமரர்களை ' யும் நம்பி திருவடிகளிலிட்டு ஆச்ரயிக்கச் செய்து ஆத்மசமர்ப்பணஞ்செய்து சது சுலோகி யருளிச் செய்து துரியாச்சிரமத் தைக் கைக்கொண்டனர் . ஆளவந்தார் திரு வடிகளில் ஆச்ரயித்தவர்கள் : பெரியநம்பி திருக்கோட்டியூர் நம்பி ஆளவந்தாராழ் வார் பெரிய திருமலைநம்பி திருமாலை யாண்டான் தெய்வவாரியாண்டான் வான மாமலை யாண்டான் ஈசாண்டான திரு மோகூரப்பன் திருமோகூர் நின்றான் தெய்வப் பெருமாள் . மாறனேறிநம்பி திரு க்குருகூர் தாசர் திருமாலிருஞ் சோலை தா சர் திருவரங்கத் தம்மை திருக்கச்சி நம்பி முதலியவராம் . பின் குருகைக்காவலப் பன் யோகு செய்யுமிடத்தில் பின்னால் நின்று அவரழைக்க முன்னின்று அவர் சொற்படி வரமறந்து இளையாழ்வாருக் குப் பெருமாள் வில்லியருருக்கொண்டு கடாக்ஷித்ததைக் கேட்டு ஸ்ரீ காஞ்சி நகர்க் குச் சென்று இளையாழ்வாருடன் பேசின் யாதவப்பிரகாசனிடம் வாசிப்பதற்குப் பங்கம் வருமென்று அவரைக் குளிரக் கடாக்ஷித்துப் பெருமாளையும் பணிந்து திருவரங்க மெழுந்தருளினர் . சிலநாட் கழித்து இளையாழ்வாரைக் காண ஆவலுற் றவராகிப் பெரிய நம்பிகளை அனுப்ப அவர் வருவதற்கு முன் திருநாட்டுக் செழுந்தரு ளினர் . இளையாழ்வார் வந்து சாமவிக்கி ரகத்தைச் சேவிக்கையில் மூன்று விரல்கள் முடங்கி யிருக்க இருந்தவர்களை வினாவி ' யுற்ற துணர்ந்து பெருமாள் தலைக்கட்டக் கடவரென அவை நிமிர்ந்தன . பின் இளை யாழ்வார் பெரிய பெருமாளைச் சேவியாது ஸ்ரீ காஞ்சிக் கெழுந்தருளினர் . இவர்க்கு யமுனைத் துறைவரென்றும் யாமுநாசார் யர் எனவும் பெயர் . இவர் செய்த நூல்கள் ஆகமப் பிராமாண்யம் புருஷர்ணயம் ஆத்மசித்தி ஈச்சுரசித்தி கீதார்த்த சங்கி ரகம் ஸ்ரீ தோத்திரம் சதுச்லோகி முத வியன . ( குருபரம்பரை ) . 2 . இவர் பாண்டிய நாட்டு வீரையூரித் பிறந்த தமிழ்ப் புலவர் . ஞானவாசிட்டத் தைத் தமிழிற் செய்யுளாகச் செய்தவர் .