அபிதான சிந்தாமணி

பக்தனார் 925 நந்த சிறு இறகுகள் பெற்றிருக்கின்றன. இதன் காலில் மயிர்க் குச்சுகள் உண்டு. இதன் மூக்கு மீன்குத்திப் பறவை மூக்குப்போல் நீண்டிருக்கிறது. இதுவும் பாடுமினம், நந்தனார் - திருநாளைப்போவாரைக் காண்க. நந்தன் -1. விஷ்ணுமூர்த்தியின் படர்களில் ஒருவன். 2. திருதராட்டிரன் புத்திரன். 3. கண்ணனை வளர்த்தவன். இவன் தேவி யசோதை. 4, பிருதுஷேணன் குமரன், தாய் ஆகுதி, தேவி பிரதிபுத்திரை, குமான் கேயன். 5. மகாநந்திக்குச் சூத்திரப் பெண்ணி டம் உதித்துப் பிறகு மகாபத்மன் என்கிற பெயாடைந்து க்ஷத்திரியரை நாசஞ் செய் தவன். மகத தேசாதிபதி இவனுக்குச் சுமாலி முதலிய எட்டுக் குமாரர், 6. வசுதேவர்க்கு மந்தரையிடம் உதித்த குமான். 7. சந்திரகுலத் தரசனாகிய தருமகுத்த னுக்குத் தந்தை. 8. நபாகனைக் காண்க, நந்தன் சாம்பன் - பேராவூர்ப் பிரபுவைக் காண்க. | நந்தி - 1. இவர்க்கு இடது கையில் சூலம், வலதுகையில் செபமாலை. இராவணனைக் குரங்கால் உன் பட்டணமழிக வெனச் சபித்தவர். சர்வசம்மார காலத்தில் சிவ மூர்த்தியை அடைக்கலம் புகுந்து வாகன மானவர். கருடனை உச்வாசநிச்வாசத்தால் கர்வபங்கஞ் செய்ததால் பூமியில் பசவேச ராகப் பிறந்து சிவபூசை செய்து கைலை யடைந்தவர். சிவாக்கினையால் பிரமன் யாகசாலைக்குச சென்று அவ்விடத்துச் சிவ மூர்த்தியை நிந்தை கூறிய தக்கனைத் தலை யறவும் இந்தச் சிவ நிந்தை கேட்டிருந்த தேவர் பிறந்திறந்து சூரனால் வாதையடை யவும் சாபமிட்டுத் திருக்கைலை யடைந்த வர். சிவமூர்த்தி பிராட்டிக்கு ஞானோப தேசஞ் செய்த காலத்தில், குமாரக்கடவுளை அவர்களிடம் கட்டளையின்றி விட்டு இத னால் சுறா மீனாகச் சாபமடைந்து வலைய பாய் வந்த சிவமூர்த்தியால் பிடியுண்டு சாப நீக்க மடைந்தவர். இவர் தவமியற்றிப் பருவதவடிவம் பெற்று ஸ்ரீபர்வதமாய்ச் சிவமூர்த்தியைத் தாங்கினவர். விஷ்ணு மூர்த்திக்குச் சிவமான்மியங் கூறியவர். 2. அருஷன் மனைவி 3. ஒரு சிவகிக்கான். 4. பாாச ரூஷியின் புத்திரன், 5. இவன், தொண்டை நாட்டு ஆறைப் பதிக்காவலன். இவன் பல்லவர் வம்சத்த வன், இதனை 'மல்லைவேந்தன் மயிலை காவலன், பல்லவர் தோன்றல் பைந் தார் நந்தி'' எனவும், பல்லவர்கோனந்தி'' என வும், "அமரர்கோமானடுபோர்நந்தி" என வும் கூறியவற்றா லறிக. இவன் அவனி நாராயணன், விடேல், விகுே, குவலமார்த் தாண்டன், மனோதயன், தேசபண்டாரி, நந்திச்சீராமன் எனவும் பெயர் பெறுவன். இவன், குருக்கோட்டை வென்றதாகவும், தெள்ளாற்றில் பகைவரை வென்றதாகவும், பழையாற்றுச் சண்டை வென்றதாகவும், புகழப்படுவன். இவன் பொருளை யிரவலர் க்குச் செலவு செய்தலில் பொருது இவ னைக் கொலை புரிய வெண்ணிய இவன் சகோதரன் வசையாகக் கலம்பகம் பாடி அதில் ஒரு கவியை ஒரு புலவனை அவர் ஏகாந்தத் தலத்துச் சுவரைத் தொளைத்துக் கூறிவிட்டு ஓடச் செய்தனன். அவ்வகை செய்த புலவன் கூறிய செய்யுள் ஒன்றைக் கேட்டு அவற்றை முற்றும் கேட்க ஆவல் கொண்டவனாய் இருக்கும் நாட்களில் ஒரு நாள் நகரை வலம் வருகையில் தாசி யொ ருத்தி இச் செய்யுளை வீணையில் பாடக் கேட்டு (கக) பந்தல்களைச் சுடலையளவு போடச் செய்வித்துச் சுடலையில் சிதை யடுக்கச் செய்வித்துத் தாசியை அழைப் பித்து ஒவ்வொரு பந்தலில் ஒவ்வொரு செய்யுளைக் கேட்டு வருகையில் அப்பந்தல் கள் தீப்பற்றக் கண்டும் மனஞ் சலியாது நூறாவது செய்யுளைக் கேட்க ஆவல்கொ ண்டு சிதைமேலிருந்து "வானுறு மதியை யடைந்த துன் வதனம் வையகமடைந்த தின் கீர்த்தி, கானுறு புலியை யடைந்த துன் வீரம் கற்பகமடைந்த துன் கரங்கள், தேனுறு மலராளரியிடஞ் சேர்ந்தாள் செந் தழல் புகுந்த துன் மேனி, யானுமென் கலியுமெவ்விடம் புகுவேமெந்தையே நந்தி நாயகனே" என இதைக்கேட்டுச் சிதை தீப்பற்ற உயிர் நீங்கினவன், இவனது நாடு மயிலையென்றுங் கூறுவர். இவனையே நந்தித் தொண்டைமான் என்பர். அதனை ''பொள்ளா நுழை வழிப்போய்த் தலை நீட் டும் புலவர் முன் சொல், கள்ளாருஞ் செஞ் சொற்கலம்பகமே கொண்டு காயம் விட்ட., தெள்ளாறை நந்தி யெனுந் தொண்டை
பக்தனார் 925 நந்த சிறு இறகுகள் பெற்றிருக்கின்றன . இதன் காலில் மயிர்க் குச்சுகள் உண்டு . இதன் மூக்கு மீன்குத்திப் பறவை மூக்குப்போல் நீண்டிருக்கிறது . இதுவும் பாடுமினம் நந்தனார் - திருநாளைப்போவாரைக் காண்க . நந்தன் - 1 . விஷ்ணுமூர்த்தியின் படர்களில் ஒருவன் . 2 . திருதராட்டிரன் புத்திரன் . 3 . கண்ணனை வளர்த்தவன் . இவன் தேவி யசோதை . 4 பிருதுஷேணன் குமரன் தாய் ஆகுதி தேவி பிரதிபுத்திரை குமான் கேயன் . 5 . மகாநந்திக்குச் சூத்திரப் பெண்ணி டம் உதித்துப் பிறகு மகாபத்மன் என்கிற பெயாடைந்து க்ஷத்திரியரை நாசஞ் செய் தவன் . மகத தேசாதிபதி இவனுக்குச் சுமாலி முதலிய எட்டுக் குமாரர் 6 . வசுதேவர்க்கு மந்தரையிடம் உதித்த குமான் . 7 . சந்திரகுலத் தரசனாகிய தருமகுத்த னுக்குத் தந்தை . 8 . நபாகனைக் காண்க நந்தன் சாம்பன் - பேராவூர்ப் பிரபுவைக் காண்க . | நந்தி - 1 . இவர்க்கு இடது கையில் சூலம் வலதுகையில் செபமாலை . இராவணனைக் குரங்கால் உன் பட்டணமழிக வெனச் சபித்தவர் . சர்வசம்மார காலத்தில் சிவ மூர்த்தியை அடைக்கலம் புகுந்து வாகன மானவர் . கருடனை உச்வாசநிச்வாசத்தால் கர்வபங்கஞ் செய்ததால் பூமியில் பசவேச ராகப் பிறந்து சிவபூசை செய்து கைலை யடைந்தவர் . சிவாக்கினையால் பிரமன் யாகசாலைக்குச சென்று அவ்விடத்துச் சிவ மூர்த்தியை நிந்தை கூறிய தக்கனைத் தலை யறவும் இந்தச் சிவ நிந்தை கேட்டிருந்த தேவர் பிறந்திறந்து சூரனால் வாதையடை யவும் சாபமிட்டுத் திருக்கைலை யடைந்த வர் . சிவமூர்த்தி பிராட்டிக்கு ஞானோப தேசஞ் செய்த காலத்தில் குமாரக்கடவுளை அவர்களிடம் கட்டளையின்றி விட்டு இத னால் சுறா மீனாகச் சாபமடைந்து வலைய பாய் வந்த சிவமூர்த்தியால் பிடியுண்டு சாப நீக்க மடைந்தவர் . இவர் தவமியற்றிப் பருவதவடிவம் பெற்று ஸ்ரீபர்வதமாய்ச் சிவமூர்த்தியைத் தாங்கினவர் . விஷ்ணு மூர்த்திக்குச் சிவமான்மியங் கூறியவர் . 2 . அருஷன் மனைவி 3 . ஒரு சிவகிக்கான் . 4 . பாாச ரூஷியின் புத்திரன் 5 . இவன் தொண்டை நாட்டு ஆறைப் பதிக்காவலன் . இவன் பல்லவர் வம்சத்த வன் இதனை ' மல்லைவேந்தன் மயிலை காவலன் பல்லவர் தோன்றல் பைந் தார் நந்தி ' ' எனவும் பல்லவர்கோனந்தி ' ' என வும் அமரர்கோமானடுபோர்நந்தி என வும் கூறியவற்றா லறிக . இவன் அவனி நாராயணன் விடேல் விகுே குவலமார்த் தாண்டன் மனோதயன் தேசபண்டாரி நந்திச்சீராமன் எனவும் பெயர் பெறுவன் . இவன் குருக்கோட்டை வென்றதாகவும் தெள்ளாற்றில் பகைவரை வென்றதாகவும் பழையாற்றுச் சண்டை வென்றதாகவும் புகழப்படுவன் . இவன் பொருளை யிரவலர் க்குச் செலவு செய்தலில் பொருது இவ னைக் கொலை புரிய வெண்ணிய இவன் சகோதரன் வசையாகக் கலம்பகம் பாடி அதில் ஒரு கவியை ஒரு புலவனை அவர் ஏகாந்தத் தலத்துச் சுவரைத் தொளைத்துக் கூறிவிட்டு ஓடச் செய்தனன் . அவ்வகை செய்த புலவன் கூறிய செய்யுள் ஒன்றைக் கேட்டு அவற்றை முற்றும் கேட்க ஆவல் கொண்டவனாய் இருக்கும் நாட்களில் ஒரு நாள் நகரை வலம் வருகையில் தாசி யொ ருத்தி இச் செய்யுளை வீணையில் பாடக் கேட்டு ( கக ) பந்தல்களைச் சுடலையளவு போடச் செய்வித்துச் சுடலையில் சிதை யடுக்கச் செய்வித்துத் தாசியை அழைப் பித்து ஒவ்வொரு பந்தலில் ஒவ்வொரு செய்யுளைக் கேட்டு வருகையில் அப்பந்தல் கள் தீப்பற்றக் கண்டும் மனஞ் சலியாது நூறாவது செய்யுளைக் கேட்க ஆவல்கொ ண்டு சிதைமேலிருந்து வானுறு மதியை யடைந்த துன் வதனம் வையகமடைந்த தின் கீர்த்தி கானுறு புலியை யடைந்த துன் வீரம் கற்பகமடைந்த துன் கரங்கள் தேனுறு மலராளரியிடஞ் சேர்ந்தாள் செந் தழல் புகுந்த துன் மேனி யானுமென் கலியுமெவ்விடம் புகுவேமெந்தையே நந்தி நாயகனே என இதைக்கேட்டுச் சிதை தீப்பற்ற உயிர் நீங்கினவன் இவனது நாடு மயிலையென்றுங் கூறுவர் . இவனையே நந்தித் தொண்டைமான் என்பர் . அதனை ' ' பொள்ளா நுழை வழிப்போய்த் தலை நீட் டும் புலவர் முன் சொல் கள்ளாருஞ் செஞ் சொற்கலம்பகமே கொண்டு காயம் விட்ட . தெள்ளாறை நந்தி யெனுந் தொண்டை