அபிதான சிந்தாமணி

சிவமூர்க்கி 662 சிவமூர்த்தி -72, கௌரியென்னும் பார்ப்பினி பொ ருட்டு விருத்தகுமார பாலரானவர். 73. இராஜசேகரபாண்டியன் பொருட்டு மாறி நடித்து வெள்ளியம்பல மாக்கியவர். 74, பழிக்கஞ்சிய உலோக்துங்க பாண் டியனுக்கு யமபடமால் உண்மை கூறு வித்தவர் 75. தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற வேதியனது மாபா தகம் தீர்த்த வர். 76. சித்தன் என்பவனது அங்கத்தைச் சமர்செய்து வெட்டியவர். 77. புத்தர் ஏவிய நாகம், மாயப்பசு முதலியவற்றை எய்து வதைப்பித்தவர். 78, சாமந்தர் பொருட்டு மெய்காட்டிட் டவர். 79. மதுரையில் பிறந்திருந்த தாருக வனத்து இருடிபத்னிகள் பொருட்டு வளை யலிட்டு அவர் மையலைப் போக்கிப் புத்தி ரப்பேறும் அளித்தவர். 80. குமாரக்கடவுளுக்குப் பாலூட்டிய இயக்கிமார் அட்டமாசித்திவேண்டிப் பணி யப் பிராட்டியுடன் தரிசனந்தந்து பிராட் டியைக்காட்டி யிவளை யாராதிக்கின் அட்ட சித்தியும் தருவள் என, அச்சித்திகளை யுபதேசிக்கையில் பாரமுகமாய்க் கேட்க நீங்கள் பட்டமங்கையிற் பாறைகள் ஆக என்றனர். இயக்கிமார் வேண்ட (க000) வருஷங்கள் சென்றபின் நாமே வந்து அச் சாபத்தைப் போக்குகிறோமென அவ்வாறு சென்று அப்பெண்களின் சாபம் தீர்த்து அட்டமாசித்தியுபதேசித்தவர். அப்பெண் கள் பார்வதியார் பாவனையால் சித்திபெ ற்று முத்தி அடைந்தனர். 81. காடுவெட்டிய சோழன் பொருட்டு மதுரைத் திருக்கோயிலின் மீன முத்திரை நீக்கி இடபமுத்திரையிட்டு அவனுக்குத் தரிசனந்தந்து வழித்துணையானவர். 82. பொன்னனையாள். என்னும் தாசி பொருட்டு இரசவாதஞ் செய்து அவள் மனக்கவலை தீர்த்தருளியவர். 83. பாண்டியன் சேனையின் பொருட் 'டுத் தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தாகநீக் கிச் சேனையை யுத்தத்திற்கு அனுப்பி வெல்வித்தவர். 84. தனபதியின் உடன் பிறந்தாள் மகன் பொருட்டு மாமானாக வந்து வழக்கி ட்டு ஞாதியர் கவர்ந்தபொருள் வாங்கி அளித்தவர் 85. பாணபத்திரர் பொருட்டு விறகா ளாய் ஏமநா தன் இருந்த வீட்டுத்திண்ணை யில் யாழ் வாசித்து ஏமநாதனை ஒட்டிய வர். இவர்பொருட்டுத் திருமுகம் கொடுத் துச் சோமானிடம் அனுப்பிப் பொருள் கொடுப்பித்தவர். பாணபத்திரரைக்காண்க. 86 கரிக்குருவிக்கு மந்திர முபதே சித்து முத்தியளித்தவர். 87. வங்கியசேகர பாண்டியன் கால த்து வேடுருவாய்ச் சோழன் சேனைகளை ஓட்டியவர். 88. சங்கத்தார் பொருட்டுச் சங்கப் பலகை தந்தவர். 89. சத்திக்கு ஞானமுபதேசிக்கையில் பிராட்டியார் பராமுகமாகக் கேட்டதறி ந்து வலையர் குலத்தில் அவதரிக்கச் சாப மளித்துச் சத்திவேண்ட நாமே வந்து உன்னை மணந்து கொள்ளுகிறோமெனக் கூறினவர். தாய்க்குச் சாபவிளைவு சாத் திரத்தினாலென்று அச்சாத்திரங்களைக் கடலிலெறிந்த குமாரக்கடவுளை மதுரை யில் மூங்கைப் பிள்ளையாகவும் சமயமறி யாது குமரரை உள்ளே வரவிட்ட நந்திமா தேவரை சுறா மீனாகவும் சாபம் அளித்து அநுக்கிரகித்தவர். 90. தருமசீலையின் கணவன் பொருட்டு உலவாக்கோட்டை யருளிச்செய்தவர். '_91. வரகுண பாண்டியன் பொருட்டுச் சிவலோக தரிசனங் காட்டியவர். 92. பாணபத்திரர் மனைவியை இசை வாதில் வெற்றி கொள்ள அநுக்கிரகித்தவர். '93. பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்த்து அவர்களை மந்திரிகளாக்கியவர். 94. நாரை ஒன்று பொற்றாமரைத் தீர்த் தத்தில் மீனுண்ண வந்து ஞானோதயம் பெற்றுத் தியானிக்க முத்தியளித்தவர். 95. தருமியென்னும் வேதியனுக்குக் கவி யருளிச்செய்து பொற்கிழி கொடுப் பித்தவர். தருமியைக் காண்க. ' 96. அறியாமையால் மாறு கொண்ட கீரனைப் பொற்றாமரையில் வீழ்த்திக் கரை யேற்றி அநுக்கிரகித்து இலக்கணங் கூறு வித்தவர். 97. சங்கத்தார்க்கு மூக்கைப்பிள்ளை யா ரால் கலகம் தீர்ப்பித்தவர். 98. இடைக்காடர் சொற்படி அவர்க் குப் பின்சென்று பின் பாண்டியன் புல வரை கூமைவேண்டி யிரக்கப் புலவரு டன் மதுரைக்கு எழுந்தருளியவர்.
சிவமூர்க்கி 662 சிவமூர்த்தி - 72 கௌரியென்னும் பார்ப்பினி பொ ருட்டு விருத்தகுமார பாலரானவர் . 73 . இராஜசேகரபாண்டியன் பொருட்டு மாறி நடித்து வெள்ளியம்பல மாக்கியவர் . 74 பழிக்கஞ்சிய உலோக்துங்க பாண் டியனுக்கு யமபடமால் உண்மை கூறு வித்தவர் 75 . தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற வேதியனது மாபா தகம் தீர்த்த வர் . 76 . சித்தன் என்பவனது அங்கத்தைச் சமர்செய்து வெட்டியவர் . 77 . புத்தர் ஏவிய நாகம் மாயப்பசு முதலியவற்றை எய்து வதைப்பித்தவர் . 78 சாமந்தர் பொருட்டு மெய்காட்டிட் டவர் . 79 . மதுரையில் பிறந்திருந்த தாருக வனத்து இருடிபத்னிகள் பொருட்டு வளை யலிட்டு அவர் மையலைப் போக்கிப் புத்தி ரப்பேறும் அளித்தவர் . 80 . குமாரக்கடவுளுக்குப் பாலூட்டிய இயக்கிமார் அட்டமாசித்திவேண்டிப் பணி யப் பிராட்டியுடன் தரிசனந்தந்து பிராட் டியைக்காட்டி யிவளை யாராதிக்கின் அட்ட சித்தியும் தருவள் என அச்சித்திகளை யுபதேசிக்கையில் பாரமுகமாய்க் கேட்க நீங்கள் பட்டமங்கையிற் பாறைகள் ஆக என்றனர் . இயக்கிமார் வேண்ட ( க000 ) வருஷங்கள் சென்றபின் நாமே வந்து அச் சாபத்தைப் போக்குகிறோமென அவ்வாறு சென்று அப்பெண்களின் சாபம் தீர்த்து அட்டமாசித்தியுபதேசித்தவர் . அப்பெண் கள் பார்வதியார் பாவனையால் சித்திபெ ற்று முத்தி அடைந்தனர் . 81 . காடுவெட்டிய சோழன் பொருட்டு மதுரைத் திருக்கோயிலின் மீன முத்திரை நீக்கி இடபமுத்திரையிட்டு அவனுக்குத் தரிசனந்தந்து வழித்துணையானவர் . 82 . பொன்னனையாள் . என்னும் தாசி பொருட்டு இரசவாதஞ் செய்து அவள் மனக்கவலை தீர்த்தருளியவர் . 83 . பாண்டியன் சேனையின் பொருட் ' டுத் தண்ணீர்ப்பந்தல் வைத்துத் தாகநீக் கிச் சேனையை யுத்தத்திற்கு அனுப்பி வெல்வித்தவர் . 84 . தனபதியின் உடன் பிறந்தாள் மகன் பொருட்டு மாமானாக வந்து வழக்கி ட்டு ஞாதியர் கவர்ந்தபொருள் வாங்கி அளித்தவர் 85 . பாணபத்திரர் பொருட்டு விறகா ளாய் ஏமநா தன் இருந்த வீட்டுத்திண்ணை யில் யாழ் வாசித்து ஏமநாதனை ஒட்டிய வர் . இவர்பொருட்டுத் திருமுகம் கொடுத் துச் சோமானிடம் அனுப்பிப் பொருள் கொடுப்பித்தவர் . பாணபத்திரரைக்காண்க . 86 கரிக்குருவிக்கு மந்திர முபதே சித்து முத்தியளித்தவர் . 87 . வங்கியசேகர பாண்டியன் கால த்து வேடுருவாய்ச் சோழன் சேனைகளை ஓட்டியவர் . 88 . சங்கத்தார் பொருட்டுச் சங்கப் பலகை தந்தவர் . 89 . சத்திக்கு ஞானமுபதேசிக்கையில் பிராட்டியார் பராமுகமாகக் கேட்டதறி ந்து வலையர் குலத்தில் அவதரிக்கச் சாப மளித்துச் சத்திவேண்ட நாமே வந்து உன்னை மணந்து கொள்ளுகிறோமெனக் கூறினவர் . தாய்க்குச் சாபவிளைவு சாத் திரத்தினாலென்று அச்சாத்திரங்களைக் கடலிலெறிந்த குமாரக்கடவுளை மதுரை யில் மூங்கைப் பிள்ளையாகவும் சமயமறி யாது குமரரை உள்ளே வரவிட்ட நந்திமா தேவரை சுறா மீனாகவும் சாபம் அளித்து அநுக்கிரகித்தவர் . 90 . தருமசீலையின் கணவன் பொருட்டு உலவாக்கோட்டை யருளிச்செய்தவர் . ' _ 91 . வரகுண பாண்டியன் பொருட்டுச் சிவலோக தரிசனங் காட்டியவர் . 92 . பாணபத்திரர் மனைவியை இசை வாதில் வெற்றி கொள்ள அநுக்கிரகித்தவர் . ' 93 . பன்றிக்குட்டிகளுக்குப் பாலூட்டி வளர்த்து அவர்களை மந்திரிகளாக்கியவர் . 94 . நாரை ஒன்று பொற்றாமரைத் தீர்த் தத்தில் மீனுண்ண வந்து ஞானோதயம் பெற்றுத் தியானிக்க முத்தியளித்தவர் . 95 . தருமியென்னும் வேதியனுக்குக் கவி யருளிச்செய்து பொற்கிழி கொடுப் பித்தவர் . தருமியைக் காண்க . ' 96 . அறியாமையால் மாறு கொண்ட கீரனைப் பொற்றாமரையில் வீழ்த்திக் கரை யேற்றி அநுக்கிரகித்து இலக்கணங் கூறு வித்தவர் . 97 . சங்கத்தார்க்கு மூக்கைப்பிள்ளை யா ரால் கலகம் தீர்ப்பித்தவர் . 98 . இடைக்காடர் சொற்படி அவர்க் குப் பின்சென்று பின் பாண்டியன் புல வரை கூமைவேண்டி யிரக்கப் புலவரு டன் மதுரைக்கு எழுந்தருளியவர் .