அபிதான சிந்தாமணி

கருவூர் ஓதஞானி 860. கருவூர்த்தேவர் கருவூர் ஓதஞானி - கடைச்சங்க மருவிய புல வர்களில் ஒருவர். கொங்கு நாட்டுக் கருவூ ரினர். தலைவியினுறுப்பை மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே" எனப் புகழ்ந்த வர். (குறு - எக, உஉ எ.) காவூர்கிழார் - வேளாளர். கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர். இவர் ஊர் கொங்கு நாட்டுக் கருவூராக இருக்கலாம். பிறப்பால் வேளாண் குடியினராகலாம். (குறு - 170.) கருவூர் கீகோசனார் - இவர் பாலைத்திணையிற் பயின்றவர். தமது பாடலில் சோம்ப லாய்ச் செயலற்றிருப்பவர்க்குக் கீர்த்தி யும் இன்பமும் கொடைத் தன்மையு மாகிய இவையில்லை ' யாகுமென்று தெளிவாக கூறியுள்ளார். இவர் பாடியது நற் உகச-ம் பாட்டு. கருவூரேறிய வொள்வாட் கோப்பெருஞ் சோலிரும்பொறை - நரிவெரூஉத்தலை யார்க்கு உடம்பு தந்து புகழடைந்தவன் கருவூர் கீகண்ண ம்புல்லனார் - இவர், தலை மகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குக் கூறியதாகப் பாலையினது அச்சங் கூறியவர். (அகம் - 63.) கருவூர்க்கண்ணன்பாளனூர் - கடைச் சங்க மருவிய புலவர். இரந்து பின்னின்ற தலைமகள் சூட்டிய மலரைத் தலைவி புகழ்ந்து கூறியது முதலிய பாடியவர். (அகம்-180, 263.) கருவூர்க்கதப்பிள்ளை - நாஞ்சில்வள்ளுவனை இயன்மொழி வாழ்த்துப் பாடிய புலவன். (புற. நா.) (குறு, தொ .) கருவூர்க்கந்தப்பிள்ளை சாத்தனார் - பிட்டங் கொற்றனை "வையகவரைப் பிற்றமிழகங் கேட்பப், பொய்யாச் செந்தா நெளிய வேத்தி, பாடுப்வென்ப பரிசிலர் நாளும், சயாமன்னர் நாண, வீயாது பரந்தநின் வசையில் வான்புகழே." என இயன் மொழி வாழ்த்துப் பாடிய புலவர். (புற-று. அக-று.) (குறு-தொ .) கருவூர்க்கலிங்கத்தார் - கடைச்சங்க மரு விய புலவர். பாலைத்திணை பாடினவர். 183 (அக-று.) கருவூர்ச்சேரமான் சாத்தன் - இவர் கொங் குநாட்டுக் கருவூரினர் போலும், பிறப்பால் சேரர் குடியினராக இருக்கலாம். இவர் பெயர் சாத்தன், (குறு - உசு அ.) கருவூர்த்தேவர்- இவர் கருவூரில் பிராமண குலத்திலுதித்து ஞான நூலாராய்ந்து சைவ) சமயத்தைக் கடைப் பிடித்துச் சிவயோக சித்தியடைந்து சாதிகுலம் நீத்துச் சிவத்த லயாத்திரை செய்து திருவிசைப்பா பதிகம் பாடிவந்தனர். (அவற்றுள், கோயில், திருக் களந்தை ஆதித்தேச்சுரம், திருக்கீழ்க் கோ ட்டூர், மணியம்பலம், திருமுகத்தலை, திரை லோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோ ளேச்சுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக் குடி, தஞ்சை ராஜராஜேச்சுரம், திருவிடை மருதூர் இப்பதிகங்களே இப்போதுள் ளவை.) இவரிடம் அருவருப்படைந்த வேதியர் சிலர், இவர் மது மாம்ச பக்ஷணி யென்று அருவருக்க அந்த வேதியர்க் கறிவூட்டத் தேவர் அகாலத்தில் மழை வருஷிக்கச் செய்வித்தும், ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்வித்தும் பூட்டி யிருந்த கோயில் திருக்கதவம் திறக்கச் செய்வித்தும், தமக்குப் பூதங்கள் குடைபி டித்து வரச்செய்தும், பல அற்புதங்களைக் காட்டினர். இவர் பல தலங்களை வணங்கிக் கஜேந்திரமோக்ஷ மெனுந் தலமடைந்து அவ்விடமிருந்த முன்றீசரை அழைக்க அவர் தரிசனத்தந்து என்ன வேண்டு மெ ன்றனர். தேவர், கள் வேண்டுமென்றனர். முன் றீசர், காளிக்குக் கட்டளையிடக் காளி மதுக்குட/மளித்தனள், பின்னுந் தேவர், காளியை மீன் வேண்டுமென்னக் காளி கோட்டவாசிகளைக் கேட்க அவர்கள் தேடி யும் மீன் அகப்படாமை கண்டு தேவர் அங் கிருந்த வன்னிமரத்தை நோக்கினர். அம் மரம் மீன்மாரி வருஷித்தது. அவ்விடம் விட்டு ஒரு விஷ்ணுவாலயத்தை யடைந்து பெருமாளையழைக்க அவர் வராமையால் கோயில் பூசையிலா திருக்கச் சபித்துத் திருக்குற்றால மடைந்து சிவதரிசனஞ் செய்து திருவிசைப்பா பாடிப் பொதிகையி லெழுந்தருளி யிருந்தனர். இவர் அவ் விட மிருக்கையில் நெல்வேலியப்பர் சந்நி தானத்து முன்னின்று நிவேதன காலமெ ன்றறியாமல் "நெல்லையப்பா,'' என்று மூன்று முறையழைக்க மறுமொழி பெறாத தனால் கடவுள் இங்கு இல்லையென்று நீங்க ஆலயத்தில் எருக்கு முதலிய முளைத்தன. நெல்லையப்பர், தேவரை மானூரில் சந்தித் துத் தரிசனந்தந்து. அடிக்கொரு பொன் கொடுத்து நெல்வேலிக் கழைத்து வந்து காட்சி தந்தனர். அதனால் முன் முளைத்த எருக்கு முதலிய தகாத பூண்டுகள் ஒழிந் தன, இவரை அநாசாரமுள்ளவர் என்ற
கருவூர் ஓதஞானி 860 . கருவூர்த்தேவர் கருவூர் ஓதஞானி - கடைச்சங்க மருவிய புல வர்களில் ஒருவர் . கொங்கு நாட்டுக் கருவூ ரினர் . தலைவியினுறுப்பை மருந்தெனின் மருந்தே வைப்பெனின் வைப்பே எனப் புகழ்ந்த வர் . ( குறு - எக உஉ . ) காவூர்கிழார் - வேளாளர் . கடைச்சங்க மருவிய புலவர்களில் ஒருவர் . இவர் ஊர் கொங்கு நாட்டுக் கருவூராக இருக்கலாம் . பிறப்பால் வேளாண் குடியினராகலாம் . ( குறு - 170 . ) கருவூர் கீகோசனார் - இவர் பாலைத்திணையிற் பயின்றவர் . தமது பாடலில் சோம்ப லாய்ச் செயலற்றிருப்பவர்க்குக் கீர்த்தி யும் இன்பமும் கொடைத் தன்மையு மாகிய இவையில்லை ' யாகுமென்று தெளிவாக கூறியுள்ளார் . இவர் பாடியது நற் உகச - ம் பாட்டு . கருவூரேறிய வொள்வாட் கோப்பெருஞ் சோலிரும்பொறை - நரிவெரூஉத்தலை யார்க்கு உடம்பு தந்து புகழடைந்தவன் கருவூர் கீகண்ண ம்புல்லனார் - இவர் தலை மகள் புணர்ந்துடன் செல்லச் செவிலி தன் மகளுக்குக் கூறியதாகப் பாலையினது அச்சங் கூறியவர் . ( அகம் - 63 . ) கருவூர்க்கண்ணன்பாளனூர் - கடைச் சங்க மருவிய புலவர் . இரந்து பின்னின்ற தலைமகள் சூட்டிய மலரைத் தலைவி புகழ்ந்து கூறியது முதலிய பாடியவர் . ( அகம் - 180 263 . ) கருவூர்க்கதப்பிள்ளை - நாஞ்சில்வள்ளுவனை இயன்மொழி வாழ்த்துப் பாடிய புலவன் . ( புற . நா . ) ( குறு தொ . ) கருவூர்க்கந்தப்பிள்ளை சாத்தனார் - பிட்டங் கொற்றனை வையகவரைப் பிற்றமிழகங் கேட்பப் பொய்யாச் செந்தா நெளிய வேத்தி பாடுப்வென்ப பரிசிலர் நாளும் சயாமன்னர் நாண வீயாது பரந்தநின் வசையில் வான்புகழே . என இயன் மொழி வாழ்த்துப் பாடிய புலவர் . ( புற - று . அக - று . ) ( குறு - தொ . ) கருவூர்க்கலிங்கத்தார் - கடைச்சங்க மரு விய புலவர் . பாலைத்திணை பாடினவர் . 183 ( அக - று . ) கருவூர்ச்சேரமான் சாத்தன் - இவர் கொங் குநாட்டுக் கருவூரினர் போலும் பிறப்பால் சேரர் குடியினராக இருக்கலாம் . இவர் பெயர் சாத்தன் ( குறு - உசு . ) கருவூர்த்தேவர் - இவர் கருவூரில் பிராமண குலத்திலுதித்து ஞான நூலாராய்ந்து சைவ ) சமயத்தைக் கடைப் பிடித்துச் சிவயோக சித்தியடைந்து சாதிகுலம் நீத்துச் சிவத்த லயாத்திரை செய்து திருவிசைப்பா பதிகம் பாடிவந்தனர் . ( அவற்றுள் கோயில் திருக் களந்தை ஆதித்தேச்சுரம் திருக்கீழ்க் கோ ட்டூர் மணியம்பலம் திருமுகத்தலை திரை லோக்கிய சுந்தரம் கங்கைகொண்ட சோ ளேச்சுரம் திருப்பூவணம் திருச்சாட்டியக் குடி தஞ்சை ராஜராஜேச்சுரம் திருவிடை மருதூர் இப்பதிகங்களே இப்போதுள் ளவை . ) இவரிடம் அருவருப்படைந்த வேதியர் சிலர் இவர் மது மாம்ச பக்ஷணி யென்று அருவருக்க அந்த வேதியர்க் கறிவூட்டத் தேவர் அகாலத்தில் மழை வருஷிக்கச் செய்வித்தும் ஆற்றில் வெள்ளம் பெருகச் செய்வித்தும் பூட்டி யிருந்த கோயில் திருக்கதவம் திறக்கச் செய்வித்தும் தமக்குப் பூதங்கள் குடைபி டித்து வரச்செய்தும் பல அற்புதங்களைக் காட்டினர் . இவர் பல தலங்களை வணங்கிக் கஜேந்திரமோக்ஷ மெனுந் தலமடைந்து அவ்விடமிருந்த முன்றீசரை அழைக்க அவர் தரிசனத்தந்து என்ன வேண்டு மெ ன்றனர் . தேவர் கள் வேண்டுமென்றனர் . முன் றீசர் காளிக்குக் கட்டளையிடக் காளி மதுக்குட / மளித்தனள் பின்னுந் தேவர் காளியை மீன் வேண்டுமென்னக் காளி கோட்டவாசிகளைக் கேட்க அவர்கள் தேடி யும் மீன் அகப்படாமை கண்டு தேவர் அங் கிருந்த வன்னிமரத்தை நோக்கினர் . அம் மரம் மீன்மாரி வருஷித்தது . அவ்விடம் விட்டு ஒரு விஷ்ணுவாலயத்தை யடைந்து பெருமாளையழைக்க அவர் வராமையால் கோயில் பூசையிலா திருக்கச் சபித்துத் திருக்குற்றால மடைந்து சிவதரிசனஞ் செய்து திருவிசைப்பா பாடிப் பொதிகையி லெழுந்தருளி யிருந்தனர் . இவர் அவ் விட மிருக்கையில் நெல்வேலியப்பர் சந்நி தானத்து முன்னின்று நிவேதன காலமெ ன்றறியாமல் நெல்லையப்பா ' ' என்று மூன்று முறையழைக்க மறுமொழி பெறாத தனால் கடவுள் இங்கு இல்லையென்று நீங்க ஆலயத்தில் எருக்கு முதலிய முளைத்தன . நெல்லையப்பர் தேவரை மானூரில் சந்தித் துத் தரிசனந்தந்து . அடிக்கொரு பொன் கொடுத்து நெல்வேலிக் கழைத்து வந்து காட்சி தந்தனர் . அதனால் முன் முளைத்த எருக்கு முதலிய தகாத பூண்டுகள் ஒழிந் தன இவரை அநாசாரமுள்ளவர் என்ற