அபிதான சிந்தாமணி

கரிகாலன் 854 கரிகாலன் ஒளிந்திருந்த கரிகாலனைத் தலைமிசை கொண்டுவந்தது. இதைக்கண்ட ஞாதிகள் பொறாமையால் கரிகாலனைச் சிறையில டைத்து வைத்தனர். இவனிருந்த சிறைச் சாலையைச் சிலர் தீயிட்டனர். இதற்கு அஞ்சாத திருமாவளவன், சிறையிலிருந்து 'தீயிற் குதித்து வெளிவந்து தன்மாமன் இரும்பிடர்த் தலையன் உதவி பெற்றுப் பகைவரை யடக்கிச் செங்கோல் செலுத்தி னன். இவன் பகைவர் கொளுத்திய தீயைக் கடந்து வெளிவந்த காலத்து இவன் கால் கள் கரிந் தமைபற்றி இவன் கரிகாலன் எனப்பட்டனன். இவனரசுரிமை யெய்திச் சீர்காழி தாலூகா) நாங்கூர் வேள் மகளை மணம்புணர்ந்தனன். இவனுக்குச் சேட் சென்னி நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி, மா வளத்தான், என மூன்று ஆண்மக்களும், ஆதிமந்தியார் என ஒரு பெண்மகவும் பிறந்தனர். இவன் வெண்ணி எனும் இடத் தில் பகைவராகிய குறுநில மன்னரையும் இருபெரு வேந்தரையும் வென்றான். இவன் வெற்றியைப் பொறாத ஒன்பது வேந்தர் ஒருங்குகூடி வாகையெனு மிடத் தில் போரிட்டுப் பின்னிட்டனர். இவன் அருவாநாட்டின் மீது படைகொண்டு செ ன்று ஆண்டிருந்த குறும் பாசரையோட்டி அந்நாட்டை (24) கோட்டங்களாக வகுத்து வேளாளரைக் குடியேற்றினான். இவன் அருவா நாட்டிலிருந்த காமக்கோட்டத் திருப்பணிசெய்து வழிபடக் களித்த சாத் தனார் இவற்குச் செண்டு எனும் ஆயுதத்தை உதவினர். இச்செண்டே இமயவரையைத் திரித்த காலையில் உதவிய செண்டாம். பின் வடநாடு சென்று வடுகரை வென்று, பின் அருவா நாட்டின் வடக்காகிய மலை யமா நாட்டையடைந்து அதற்கு இரா ஜதானியாகிய திருக்கோவலூரை யாண்ட மலையமான் நண்பனாதலின் அவனை விட்டுப் பன்றி நாடு (நாகப்பட்டினம்) அடைந்து ஆங்கிருந்த எயினர், நாகர், ஒளியர் என்பவரை வென்று பாண்டி நாடு சென்று பாண்டியனையடக்கிச் சேரர் நாடாகிய, பூழி, குடம், குட்டம், வேணாடு, கற்கா எனும் நாடுகளுக்குத் தலைநகராகிய வஞ்சியை யாண்டிருந்த குடவரை அட க்கிப் பொதுவர் எனும் முல்லை நிலத்தலை வரையும், இருங்கோவேள் முதலிய ஐம் பெருவேளிரையும் வென்று, அடங்காது வடவரை செல்ல இமயம் இவன் செல வைத் தடுத்ததால் சினந்து சாத்தன்கொ த்ெத செண்டால் அதனைத் திரித்துப் புலிக் கொடியை அதன்மீ தெழுதி மீண்டனன், மீளுகையில் வச்சிரநாட்டரசன் (பண்டில் கண்ட்) இவனுக்கு முத்துப்பந்தர் தர அத னைக் கைக்கொண்டு, ஆங்கு நீங்கி மகதநாட டைந்து அந்நாட்டரசன் போரிட்டு முடி யாது பட்டி மண்டபந்தரப் பெற்று, அவ ந்தியரசன் வாயிற்றோரணந்தாப் பெற்று மீண்டு, இலங்கை மேற்சென்று முதற்கய வாகுக்கு முன்னரசனாகிய சிங்கள மன்ன வனை வென்று ஆங்கிருந்த பன்னீராயிரம் குடிகளைச் சிறைகொண்டு தன்னா டடைந் தனன். இவ்வரசன் காலத்துச் சோணாட் டாசர் ஆட்சி இமயம் முதல் சிங்களம் வரையில் பரவியிருந்ததென அறியலாம். இவன் தன் கீழ்வாழ்வார் மகிழவும் வேற்று நாட்டார் தம்நாட்டில் வந்து வாணிகம் நடா த்தவும் செய்தவன். இவன் தன்னாடு வளம் பெருகக் காவிரிக்கு அணை கட்டுவித்தான். காவிரி அணை கட்டுவதற்குச் சற்றுத் தடை செய்திருந்த வடநாட்டுப் பிரதாபருத்திரன் கண்ணைக் குத்தினான் என்பர். இவன் காவிரியால் நாட்டை வளமுறச் செய்து தன்னாட்டை வாணிபத்தாலும் வலமுறச் செயவெண்ணித் தன் இராசதானியைக் காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றினான். இக்காவிரிப்பூம்பட்டினம் முன்னர் காகந் தன் எனும் வேந்தனால் ஆளப்பட்டமையின் இதற்குக் காகந்தியென்று ஒரு பெயர். வங்காளத்தின் தலைநகராகிய சம்பாபதியி னின்று வந்து இங்குக் குடியேறிய தமிழர் தமது பழம்பதியின் பெயர் மறவாதிருக்க இதற்குச் சம்பாபதி யெனப் பெயரிட்ட னர். இதற்குப் புகார் எனவும் ஒரு பெயர். இது காவிரி கடலுடன் கலக்கு முகத்வாரத் திலுள்ளது. இதனுள் மரக்கலங்கள் தடை யின்றி வந்து தங்குவதற்கு முற்காலத்து இடமிருந்தது. இதில் பிறநாட்டு வர்த்தகர் வந்து தங்கி வாணிகம் செய்தனர். ஆதலால் சோணாடு வாணிபத்தில் மிகுந்தது. இவன் காலத்துக் கல்வியும் மேம்பட்டிருந்தது. இவன் தன் மாமனார் இரும்பிடர்த்தலையா ரெனும் புலவரைத் துணை கொண்டு இருக் தனன். இவன் புலவர்களை ஆதரித்துப் பரி சளித்து அவர் சொல்வழி ஒழுகினன். இவன் காலத்து மதுரையில் தமிழ்ச்சங்க மிருந்த தாகையால் அதிலிருந்த புலவர்க ளிற் பெரும்பாலாராகிய பாணர், நக்கீரர்,
கரிகாலன் 854 கரிகாலன் ஒளிந்திருந்த கரிகாலனைத் தலைமிசை கொண்டுவந்தது . இதைக்கண்ட ஞாதிகள் பொறாமையால் கரிகாலனைச் சிறையில டைத்து வைத்தனர் . இவனிருந்த சிறைச் சாலையைச் சிலர் தீயிட்டனர் . இதற்கு அஞ்சாத திருமாவளவன் சிறையிலிருந்து ' தீயிற் குதித்து வெளிவந்து தன்மாமன் இரும்பிடர்த் தலையன் உதவி பெற்றுப் பகைவரை யடக்கிச் செங்கோல் செலுத்தி னன் . இவன் பகைவர் கொளுத்திய தீயைக் கடந்து வெளிவந்த காலத்து இவன் கால் கள் கரிந் தமைபற்றி இவன் கரிகாலன் எனப்பட்டனன் . இவனரசுரிமை யெய்திச் சீர்காழி தாலூகா ) நாங்கூர் வேள் மகளை மணம்புணர்ந்தனன் . இவனுக்குச் சேட் சென்னி நலங்கிள்ளி நெடுங்கிள்ளி மா வளத்தான் என மூன்று ஆண்மக்களும் ஆதிமந்தியார் என ஒரு பெண்மகவும் பிறந்தனர் . இவன் வெண்ணி எனும் இடத் தில் பகைவராகிய குறுநில மன்னரையும் இருபெரு வேந்தரையும் வென்றான் . இவன் வெற்றியைப் பொறாத ஒன்பது வேந்தர் ஒருங்குகூடி வாகையெனு மிடத் தில் போரிட்டுப் பின்னிட்டனர் . இவன் அருவாநாட்டின் மீது படைகொண்டு செ ன்று ஆண்டிருந்த குறும் பாசரையோட்டி அந்நாட்டை ( 24 ) கோட்டங்களாக வகுத்து வேளாளரைக் குடியேற்றினான் . இவன் அருவா நாட்டிலிருந்த காமக்கோட்டத் திருப்பணிசெய்து வழிபடக் களித்த சாத் தனார் இவற்குச் செண்டு எனும் ஆயுதத்தை உதவினர் . இச்செண்டே இமயவரையைத் திரித்த காலையில் உதவிய செண்டாம் . பின் வடநாடு சென்று வடுகரை வென்று பின் அருவா நாட்டின் வடக்காகிய மலை யமா நாட்டையடைந்து அதற்கு இரா ஜதானியாகிய திருக்கோவலூரை யாண்ட மலையமான் நண்பனாதலின் அவனை விட்டுப் பன்றி நாடு ( நாகப்பட்டினம் ) அடைந்து ஆங்கிருந்த எயினர் நாகர் ஒளியர் என்பவரை வென்று பாண்டி நாடு சென்று பாண்டியனையடக்கிச் சேரர் நாடாகிய பூழி குடம் குட்டம் வேணாடு கற்கா எனும் நாடுகளுக்குத் தலைநகராகிய வஞ்சியை யாண்டிருந்த குடவரை அட க்கிப் பொதுவர் எனும் முல்லை நிலத்தலை வரையும் இருங்கோவேள் முதலிய ஐம் பெருவேளிரையும் வென்று அடங்காது வடவரை செல்ல இமயம் இவன் செல வைத் தடுத்ததால் சினந்து சாத்தன்கொ த்ெத செண்டால் அதனைத் திரித்துப் புலிக் கொடியை அதன்மீ தெழுதி மீண்டனன் மீளுகையில் வச்சிரநாட்டரசன் ( பண்டில் கண்ட் ) இவனுக்கு முத்துப்பந்தர் தர அத னைக் கைக்கொண்டு ஆங்கு நீங்கி மகதநாட டைந்து அந்நாட்டரசன் போரிட்டு முடி யாது பட்டி மண்டபந்தரப் பெற்று அவ ந்தியரசன் வாயிற்றோரணந்தாப் பெற்று மீண்டு இலங்கை மேற்சென்று முதற்கய வாகுக்கு முன்னரசனாகிய சிங்கள மன்ன வனை வென்று ஆங்கிருந்த பன்னீராயிரம் குடிகளைச் சிறைகொண்டு தன்னா டடைந் தனன் . இவ்வரசன் காலத்துச் சோணாட் டாசர் ஆட்சி இமயம் முதல் சிங்களம் வரையில் பரவியிருந்ததென அறியலாம் . இவன் தன் கீழ்வாழ்வார் மகிழவும் வேற்று நாட்டார் தம்நாட்டில் வந்து வாணிகம் நடா த்தவும் செய்தவன் . இவன் தன்னாடு வளம் பெருகக் காவிரிக்கு அணை கட்டுவித்தான் . காவிரி அணை கட்டுவதற்குச் சற்றுத் தடை செய்திருந்த வடநாட்டுப் பிரதாபருத்திரன் கண்ணைக் குத்தினான் என்பர் . இவன் காவிரியால் நாட்டை வளமுறச் செய்து தன்னாட்டை வாணிபத்தாலும் வலமுறச் செயவெண்ணித் தன் இராசதானியைக் காவிரிப்பூம்பட்டினத்திற்கு மாற்றினான் . இக்காவிரிப்பூம்பட்டினம் முன்னர் காகந் தன் எனும் வேந்தனால் ஆளப்பட்டமையின் இதற்குக் காகந்தியென்று ஒரு பெயர் . வங்காளத்தின் தலைநகராகிய சம்பாபதியி னின்று வந்து இங்குக் குடியேறிய தமிழர் தமது பழம்பதியின் பெயர் மறவாதிருக்க இதற்குச் சம்பாபதி யெனப் பெயரிட்ட னர் . இதற்குப் புகார் எனவும் ஒரு பெயர் . இது காவிரி கடலுடன் கலக்கு முகத்வாரத் திலுள்ளது . இதனுள் மரக்கலங்கள் தடை யின்றி வந்து தங்குவதற்கு முற்காலத்து இடமிருந்தது . இதில் பிறநாட்டு வர்த்தகர் வந்து தங்கி வாணிகம் செய்தனர் . ஆதலால் சோணாடு வாணிபத்தில் மிகுந்தது . இவன் காலத்துக் கல்வியும் மேம்பட்டிருந்தது . இவன் தன் மாமனார் இரும்பிடர்த்தலையா ரெனும் புலவரைத் துணை கொண்டு இருக் தனன் . இவன் புலவர்களை ஆதரித்துப் பரி சளித்து அவர் சொல்வழி ஒழுகினன் . இவன் காலத்து மதுரையில் தமிழ்ச்சங்க மிருந்த தாகையால் அதிலிருந்த புலவர்க ளிற் பெரும்பாலாராகிய பாணர் நக்கீரர்