அபிதான சிந்தாமணி

இராவணன் 191 - இராவணன 9. காதியையும், மயனையும், துற்சந்த னையும் வென்றவன். 10. அயோத்தியை அடைந்து அன ரணியனை வென்றவன், 11. நிவா தகவசருடன் யுத்தஞ்செய்யச் சென்று பிரமனால் சமாதானஞ் செய்யப் பெற்றவன். 12. (க.க) திங்கள் பாதாளத்தில் தங் கித் தேனுவைப் பணிந்து வருணனைச் செயித்து அவன் பாசத்தைப் பிடுங்கிக் கொண்டு அவன் மைந்தரையுஞ் செயித்து அவனிடமிருந்த மாதரைக் கவர்ந்து இலங் கைக்கு வந்தவன். 13. சூர்ப்பநகையினைக் கரனூரிலிருக் கச் செய்தவன். 14. கும்பினசியைக் கவர்ந்த மதுவைக் கொல்லச் செல்லுகையில் கும்பின சி வேண்டுகையால் மதுவுட னட்புக்கொண் டவன். 15. நளகூபரன் தேவியாகிய அரம் பையை வலிவிற்புணர்ந்து அவனால் இனி யுடன்படா மாதரைத் தொடின் தலை வெடி க்கவெனச் சாபம் பெற்றவன். 16. கார்த்தவீரியனுடன் யுத்தஞ் செய் யப்போய் அவனாற் கட்டுண்டு சிறையிற் றங்கிப் புலத்தியரால் மீண்டவன். 17. வாலி சிவபூசை செய்யுந் தருணத் தில் அவனுடன் தனித்து யுத்தத்திற்குச் சென்று அவன் கக்கத்தி லகப்பட்டு நசு ங்கி அஞ்சி நட்புக் கொண்டவன். 18. திக்கு யானைகளின் தந்தங்களால் குத்துண்டு அவற்றின் தந்தங்களை முது கில் பெற்றவன். 19. சூரியனை இலங்கையில் வரவொட் டாமல் தடுத்தவன். 20. ஆகாச வீதியிற் புட்பகத்திற் சென்று அசுமநரகத்தைக் கண்டு அங்கி ருந்த பலியைக் கண்டு யுத்தத்திற் கழைத் தனன். பலி இவனை நோக்கித் தானின்ன வன் விஷ்ணுவால் சிறையி லிருக்கிறே னென்ன நான் உன்னை விடுவிக்கின்றே னென்று இராவணன் கூறினன். அதைக் கேட்ட பலி குலுங்க நகைத்து அவனைச் செயிப்பதற்கு முன் இதோ என் னெதிரி லிருக்கும் இந்தக் குண்டலத்தைத் தூக் குப் பார்ப்போமென்ன, இராவணன் தன் னாலான மட்டும் தூக்கி உதிரங் கக்கிக்கொ ண்டு பூமியில் வீழ்ந்தனன். பலி இராவண னைநோக்கி இக் குண்டலத்தைத் தரித்தி ருந்தவன் என் பாட்டனான இரணியகசிபு. அப்படிப்பட்ட வலியுள்ள வனையும் மற் றும் அநேக அரக்கர் அசுரர்களையும் கொன் றவனை வென்று என்னை விடுவிப்பது உன் னால் தரமல்ல என இராவணன் கோபித்து வாயில் காவலாகவிருந்த திருமாலிடம் யுத்தத்திற்குச் செல்ல அவனைக்கொல்ல வெண்ணிய திருமால் பிரமன் வரத்தைக் காக்கவேண்டி அவன் முன்றோன்றாது மறைந்தனர். 21. இவன் சூரியனிடம் யுத்தத்திற்குச் செல்லச் சூரியன் தண்டியிடம் சொல்லி யனுப்பிய செய்தியால் வெற்றிமுரசு முழ க்கி அவ்வுலகம் நீங்கினவன். 22. பருவ தமுனிவரைக் கண்டு யார் என்னிடம் போரிடவல்லாரெனக் கேட்டு அவர் அயோத்தி யாசனாகிய மாந்தாதா வெனக் கூறக்கேட்டு யுத்தத்திற்குச் சென்று சமயுத்தஞ்செய்ய இருவரும் பிர மாஸ்திரம், பாசுபதாஸ்திரம் பிரயோகிக்க எடுத்தகாலையில் புலத்திய முனிவரும் காலவமுனிவரும் தோன்றிச் சமாதானஞ் செய்ய ஒத்துக்கொண்டு நீங்கினவன். 23. சந்திரனிடம் யுத்தஞ் செய்யச் சென்று பிரமனால் தடையுண்டு அவரால் மந்திரசித்தி யடைந்தவன். 24. மேற்கடற்கரை யடைந்த ஒரு தீவில் பொன்னிறமும் தீப்போன்ற காங் தியுமுள்ள புருட னிற்கக்கண்டு அவனை நோக்கிப் போரிட வல்லையோவென அவ னும் ஓர் முட்டியால் இராவணனைத் தாக் கினன். அதனால் இராவணன் பல குண் டாங்கரணங்கள் போட்டுத் தரையில் வீழ் ந்து மூர்ச்சை யடையக்கண்டு அப்புருடன் பிலத்தில் புகுந்தனன். பின்பு இராவ ணன் மூர்ச்சை தெளிந்து தானும் வாளேந் திக்கொண்டு பிலத்துள் புகுந்து அங்கு முன்கண்ட புருஷனைப்போல அநேகரைக் கண் டஞ்சி அவ்விடம் பாம்பணையிற் பள்ளிகொண்டு சுற்றிலு மக்கினிச்சுவாலை சூழ ரூபலாவண்யத்துடன் சாமரை யிர ட்ட இருந்த திருமகளைக்கண்டு மயல் கொண்டு எடுக்கப்போக அங்கிருந்த மகா புருடனாகிய கபிலன் மேற் போர்வை நீக்கி இவனைக்கண்டு நகைக்க இராவணன் அப் புருடனது சுவாலாமாலையா லெரிந்து மூர்ச்சித்து வலியடங்கி நீங்கி இலங்கை யடைந்து அரசாண்டிருந்தவன், சூர்ப்ப நகை தன்னை இராம லக்குமணர் செய்த
இராவணன் 191 - இராவணன 9 . காதியையும் மயனையும் துற்சந்த னையும் வென்றவன் . 10 . அயோத்தியை அடைந்து அன ரணியனை வென்றவன் 11 . நிவா தகவசருடன் யுத்தஞ்செய்யச் சென்று பிரமனால் சமாதானஞ் செய்யப் பெற்றவன் . 12 . ( . ) திங்கள் பாதாளத்தில் தங் கித் தேனுவைப் பணிந்து வருணனைச் செயித்து அவன் பாசத்தைப் பிடுங்கிக் கொண்டு அவன் மைந்தரையுஞ் செயித்து அவனிடமிருந்த மாதரைக் கவர்ந்து இலங் கைக்கு வந்தவன் . 13 . சூர்ப்பநகையினைக் கரனூரிலிருக் கச் செய்தவன் . 14 . கும்பினசியைக் கவர்ந்த மதுவைக் கொல்லச் செல்லுகையில் கும்பின சி வேண்டுகையால் மதுவுட னட்புக்கொண் டவன் . 15 . நளகூபரன் தேவியாகிய அரம் பையை வலிவிற்புணர்ந்து அவனால் இனி யுடன்படா மாதரைத் தொடின் தலை வெடி க்கவெனச் சாபம் பெற்றவன் . 16 . கார்த்தவீரியனுடன் யுத்தஞ் செய் யப்போய் அவனாற் கட்டுண்டு சிறையிற் றங்கிப் புலத்தியரால் மீண்டவன் . 17 . வாலி சிவபூசை செய்யுந் தருணத் தில் அவனுடன் தனித்து யுத்தத்திற்குச் சென்று அவன் கக்கத்தி லகப்பட்டு நசு ங்கி அஞ்சி நட்புக் கொண்டவன் . 18 . திக்கு யானைகளின் தந்தங்களால் குத்துண்டு அவற்றின் தந்தங்களை முது கில் பெற்றவன் . 19 . சூரியனை இலங்கையில் வரவொட் டாமல் தடுத்தவன் . 20 . ஆகாச வீதியிற் புட்பகத்திற் சென்று அசுமநரகத்தைக் கண்டு அங்கி ருந்த பலியைக் கண்டு யுத்தத்திற் கழைத் தனன் . பலி இவனை நோக்கித் தானின்ன வன் விஷ்ணுவால் சிறையி லிருக்கிறே னென்ன நான் உன்னை விடுவிக்கின்றே னென்று இராவணன் கூறினன் . அதைக் கேட்ட பலி குலுங்க நகைத்து அவனைச் செயிப்பதற்கு முன் இதோ என் னெதிரி லிருக்கும் இந்தக் குண்டலத்தைத் தூக் குப் பார்ப்போமென்ன இராவணன் தன் னாலான மட்டும் தூக்கி உதிரங் கக்கிக்கொ ண்டு பூமியில் வீழ்ந்தனன் . பலி இராவண னைநோக்கி இக் குண்டலத்தைத் தரித்தி ருந்தவன் என் பாட்டனான இரணியகசிபு . அப்படிப்பட்ட வலியுள்ள வனையும் மற் றும் அநேக அரக்கர் அசுரர்களையும் கொன் றவனை வென்று என்னை விடுவிப்பது உன் னால் தரமல்ல என இராவணன் கோபித்து வாயில் காவலாகவிருந்த திருமாலிடம் யுத்தத்திற்குச் செல்ல அவனைக்கொல்ல வெண்ணிய திருமால் பிரமன் வரத்தைக் காக்கவேண்டி அவன் முன்றோன்றாது மறைந்தனர் . 21 . இவன் சூரியனிடம் யுத்தத்திற்குச் செல்லச் சூரியன் தண்டியிடம் சொல்லி யனுப்பிய செய்தியால் வெற்றிமுரசு முழ க்கி அவ்வுலகம் நீங்கினவன் . 22 . பருவ தமுனிவரைக் கண்டு யார் என்னிடம் போரிடவல்லாரெனக் கேட்டு அவர் அயோத்தி யாசனாகிய மாந்தாதா வெனக் கூறக்கேட்டு யுத்தத்திற்குச் சென்று சமயுத்தஞ்செய்ய இருவரும் பிர மாஸ்திரம் பாசுபதாஸ்திரம் பிரயோகிக்க எடுத்தகாலையில் புலத்திய முனிவரும் காலவமுனிவரும் தோன்றிச் சமாதானஞ் செய்ய ஒத்துக்கொண்டு நீங்கினவன் . 23 . சந்திரனிடம் யுத்தஞ் செய்யச் சென்று பிரமனால் தடையுண்டு அவரால் மந்திரசித்தி யடைந்தவன் . 24 . மேற்கடற்கரை யடைந்த ஒரு தீவில் பொன்னிறமும் தீப்போன்ற காங் தியுமுள்ள புருட னிற்கக்கண்டு அவனை நோக்கிப் போரிட வல்லையோவென அவ னும் ஓர் முட்டியால் இராவணனைத் தாக் கினன் . அதனால் இராவணன் பல குண் டாங்கரணங்கள் போட்டுத் தரையில் வீழ் ந்து மூர்ச்சை யடையக்கண்டு அப்புருடன் பிலத்தில் புகுந்தனன் . பின்பு இராவ ணன் மூர்ச்சை தெளிந்து தானும் வாளேந் திக்கொண்டு பிலத்துள் புகுந்து அங்கு முன்கண்ட புருஷனைப்போல அநேகரைக் கண் டஞ்சி அவ்விடம் பாம்பணையிற் பள்ளிகொண்டு சுற்றிலு மக்கினிச்சுவாலை சூழ ரூபலாவண்யத்துடன் சாமரை யிர ட்ட இருந்த திருமகளைக்கண்டு மயல் கொண்டு எடுக்கப்போக அங்கிருந்த மகா புருடனாகிய கபிலன் மேற் போர்வை நீக்கி இவனைக்கண்டு நகைக்க இராவணன் அப் புருடனது சுவாலாமாலையா லெரிந்து மூர்ச்சித்து வலியடங்கி நீங்கி இலங்கை யடைந்து அரசாண்டிருந்தவன் சூர்ப்ப நகை தன்னை இராம லக்குமணர் செய்த