அபிதான சிந்தாமணி

யாப்பருங்கலம் 18581 யாழ பாட நினைத்த யாப்பருங்கலம் இது குணசாகரர் இயற் றியது. இது நூற்பாவகவல் எனப்படுஞ் சூத்திரயாப்பில் அமைந்து யாப்பிலக்க ணத்தை விளக்கமுற வுணர்த்துவது. யாப் பருங்கலக் காரிகைக்கு முதனூலாயுள்ளது. யாப்யாயனி சிவசூரியனுக்கு வடக்கி லமருஞ் சத்தி. யாமளேந்திரர் - இசைத் தமிழ் நூலாகிய இந்திரகாளிய நூலாசிரியர் , யாமளை - உமை. யாமாள் யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணை யிடம் பிறந்த (கஉ) குமாரர். இவர்கள் மகா பலசாலிகள், யாமியம் யமபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள பட்டணம். இதில் புண்ணியபத் திரையென்னும் நதியும், ஒரு ஆலமாமும் இருக்கின்றன. இது பிரேதக் கூட்டங்கள் தங்கியிருக்கு மிடமுமாம். இங்கு ஆன்மா இறந்த முப்பதாகாள் தங்கிச் சிரமபரிகாரம் செய்து போவன். இரண்டா மாசிக பிண் டத்தை ஆன்மா ஈண்டுப் புசிப்பன். யாமினி - காசிபன் தேவி. தக்ஷன் குமாரி. சலபதங்களைப் பெற்றவள். யாழனர் - யமுனைத் துறைவருக்கு நாதமுனி கள் கட்டளையால் மணக்கால்நம்பி யிட்ட பெயர். யாவலி இராமமூர்த்தியைச் சிவபூசை செய்ய ஏவிய இருடி. (வேதாரண்ய-புரா.) யாழி - தக்ஷன்குமாரி, தருமப்பிரசாபதியின் தேவி. யாழ் - இது நான்குவகைப்படும். அவை பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங் கோட்டியாழ் என்பன. இவற்றில் பேரி யாழிற்கு நரம்பு இருபத்தொன்று; மகர யாழிற்குப் பதினேழு; சகோடயாழிற் குப் பதினொன்று ; செங்கோட்டியாழிற்கு ஏழாம். இவ் யாழின் உறுப்புக்களாவன : கோடு, ஆணி, பத்தர், மாடகம், தந்திரி முதலியன. யாழிற்குத் தெய்வம் மாதங்கி என்பர். யாழின் தொழில்களாவன பண் ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவால், செலவு, விளையாட்டு, சையூழ், குறும் போக்கு. இவற்றில் பண்ணலாவது, பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல், பரிவட் டணை என்பது அவ்வீக்கின நரம்பை அக விரலாலும், புறவிரலாலும் காணஞ்செய்து தடவிப் பார்த்தல். ஆராய்தல் என்பது ஆரோகண அவரோகணவகையால் இசை யைத்தெறித்தல். தைவால் என்பது சுருதி ஏற்று தல், செலவு என்பது ஆளத்தியிலே நிரம்பப் பாடல். (ஆளத்தியைக் காண்க). விளையாட்டு என்பது வண்ணத்தில் சந்தத்தை விடுத்தல். கை யூழ் என்பது வண்ணத்தில் செய்த பாடல் எல்லாம் இன்பமாகப் பாடல். குறும் போக்கு குடகச்செலவும், துள்ளற்செல வும் பாடுதல், பின்னும் வார் தல், வடித்தல், உந்தல், உறழ்தல், உருட்டல் முதலியன வும் உள, வார் தலாவது - சுட்டு விரலால் தொழில் செய்தல். வடித்தலாவது - சுட்டு விரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல், உந்தலா வது - நரம்புகளைத் தெறித்து வலிவிற் பட்டதும், மெலிலிற் பட்டதும், நிரல்பட் டதும் அறிதல். உறழ்தலாவது - ஒன் றிடையிட்டும், இரண்டிடையிட்டும், நரம்பு களைத் தெறித்தல். உருட்டலாவது -இடக் கைச் சுட்டுவிரல் உருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் உருட்டலும், சுட்டொடு பெரு விரற் கூட்டி உருட்டலும், இரு பெருவிர லும் இயைந்து உடன் உருட்டலு மெனப் பல. யாழினது இருக்கை ஒன்பது வகைப்படும். அவை பதுமுகம், உற்கடி தம், ஒப்படியிருக்கை, சமபுடம், சுயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏக பாதம் என்பன இதன நாடக நூலார் ஐம் பதென விரிப்பா. யாழின் குற்றங்களா வன செம்பகை, ஆர்ப்பு, அதிர்வு, கூடம், இவற்றுள் செம்பகையாவது இசைத்தல் ; ஆர்ப்பு ஒங்க சைத்தல் ; அதிர்வு நரம்பைச் சிதற உந்தல் ; கூடம் தன் பகையாகிய ஆறு நரம்பின் இசை பிற் குன்றித் தன்னோசை மழுங்கல். இவ் யாழிற்குக் குற்றம் எதினால் உண்டாம் எனின் மரக்குற்றத்தால் பிறக்கும். அம் மாம் நீரிலே நிற்றல், அழுகுதல், வேதல், நிலமயக்குப் பாரிலே நிற்றல், இடிவீழ் தல், நோய், மரப்பால் படல் முதலியவாம். முன் சொல்லிய குரல் முதல் ஏழினும் தாரம் முதலிய பண்கள் தோன்றும். தார த்தில் உழை தோன்றும். உழையுள் குரல் தோன்றும். குரலில் இளி தோன்றும். இளியுள் துத்தம் தோன்றும், துத்தத்துள் விளரி தோன்றும், விளரியுள் கைக்கிளை தோன்றும். பின்னும் இணை, இளை, பகை, நட்பு என்று சொல்லப்பட்ட நான் எனபன.
யாப்பருங்கலம் 18581 யாழ பாட நினைத்த யாப்பருங்கலம் இது குணசாகரர் இயற் றியது . இது நூற்பாவகவல் எனப்படுஞ் சூத்திரயாப்பில் அமைந்து யாப்பிலக்க ணத்தை விளக்கமுற வுணர்த்துவது . யாப் பருங்கலக் காரிகைக்கு முதனூலாயுள்ளது . யாப்யாயனி சிவசூரியனுக்கு வடக்கி லமருஞ் சத்தி . யாமளேந்திரர் - இசைத் தமிழ் நூலாகிய இந்திரகாளிய நூலாசிரியர் யாமளை - உமை . யாமாள் யஞ்ஞமூர்த்திக்குத் தக்ஷணை யிடம் பிறந்த ( கஉ ) குமாரர் . இவர்கள் மகா பலசாலிகள் யாமியம் யமபுரிக்குச் செல்லும் வழியில் உள்ள பட்டணம் . இதில் புண்ணியபத் திரையென்னும் நதியும் ஒரு ஆலமாமும் இருக்கின்றன . இது பிரேதக் கூட்டங்கள் தங்கியிருக்கு மிடமுமாம் . இங்கு ஆன்மா இறந்த முப்பதாகாள் தங்கிச் சிரமபரிகாரம் செய்து போவன் . இரண்டா மாசிக பிண் டத்தை ஆன்மா ஈண்டுப் புசிப்பன் . யாமினி - காசிபன் தேவி . தக்ஷன் குமாரி . சலபதங்களைப் பெற்றவள் . யாழனர் - யமுனைத் துறைவருக்கு நாதமுனி கள் கட்டளையால் மணக்கால்நம்பி யிட்ட பெயர் . யாவலி இராமமூர்த்தியைச் சிவபூசை செய்ய ஏவிய இருடி . ( வேதாரண்ய - புரா . ) யாழி - தக்ஷன்குமாரி தருமப்பிரசாபதியின் தேவி . யாழ் - இது நான்குவகைப்படும் . அவை பேரியாழ் மகரயாழ் சகோடயாழ் செங் கோட்டியாழ் என்பன . இவற்றில் பேரி யாழிற்கு நரம்பு இருபத்தொன்று ; மகர யாழிற்குப் பதினேழு ; சகோடயாழிற் குப் பதினொன்று ; செங்கோட்டியாழிற்கு ஏழாம் . இவ் யாழின் உறுப்புக்களாவன : கோடு ஆணி பத்தர் மாடகம் தந்திரி முதலியன . யாழிற்குத் தெய்வம் மாதங்கி என்பர் . யாழின் தொழில்களாவன பண் ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவால் செலவு விளையாட்டு சையூழ் குறும் போக்கு . இவற்றில் பண்ணலாவது பாட நினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரை யறிந்து வீக்குதல் பரிவட் டணை என்பது அவ்வீக்கின நரம்பை அக விரலாலும் புறவிரலாலும் காணஞ்செய்து தடவிப் பார்த்தல் . ஆராய்தல் என்பது ஆரோகண அவரோகணவகையால் இசை யைத்தெறித்தல் . தைவால் என்பது சுருதி ஏற்று தல் செலவு என்பது ஆளத்தியிலே நிரம்பப் பாடல் . ( ஆளத்தியைக் காண்க ) . விளையாட்டு என்பது வண்ணத்தில் சந்தத்தை விடுத்தல் . கை யூழ் என்பது வண்ணத்தில் செய்த பாடல் எல்லாம் இன்பமாகப் பாடல் . குறும் போக்கு குடகச்செலவும் துள்ளற்செல வும் பாடுதல் பின்னும் வார் தல் வடித்தல் உந்தல் உறழ்தல் உருட்டல் முதலியன வும் உள வார் தலாவது - சுட்டு விரலால் தொழில் செய்தல் . வடித்தலாவது - சுட்டு விரலும் பெருவிரலும் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல் உந்தலா வது - நரம்புகளைத் தெறித்து வலிவிற் பட்டதும் மெலிலிற் பட்டதும் நிரல்பட் டதும் அறிதல் . உறழ்தலாவது - ஒன் றிடையிட்டும் இரண்டிடையிட்டும் நரம்பு களைத் தெறித்தல் . உருட்டலாவது -இடக் கைச் சுட்டுவிரல் உருட்டலும் வலக்கைச் சுட்டுவிரல் உருட்டலும் சுட்டொடு பெரு விரற் கூட்டி உருட்டலும் இரு பெருவிர லும் இயைந்து உடன் உருட்டலு மெனப் பல . யாழினது இருக்கை ஒன்பது வகைப்படும் . அவை பதுமுகம் உற்கடி தம் ஒப்படியிருக்கை சமபுடம் சுயமுகம் சுவத்திகம் தனிப்புடம் மண்டிலம் ஏக பாதம் என்பன இதன நாடக நூலார் ஐம் பதென விரிப்பா . யாழின் குற்றங்களா வன செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடம் இவற்றுள் செம்பகையாவது இசைத்தல் ; ஆர்ப்பு ஒங்க சைத்தல் ; அதிர்வு நரம்பைச் சிதற உந்தல் ; கூடம் தன் பகையாகிய ஆறு நரம்பின் இசை பிற் குன்றித் தன்னோசை மழுங்கல் . இவ் யாழிற்குக் குற்றம் எதினால் உண்டாம் எனின் மரக்குற்றத்தால் பிறக்கும் . அம் மாம் நீரிலே நிற்றல் அழுகுதல் வேதல் நிலமயக்குப் பாரிலே நிற்றல் இடிவீழ் தல் நோய் மரப்பால் படல் முதலியவாம் . முன் சொல்லிய குரல் முதல் ஏழினும் தாரம் முதலிய பண்கள் தோன்றும் . தார த்தில் உழை தோன்றும் . உழையுள் குரல் தோன்றும் . குரலில் இளி தோன்றும் . இளியுள் துத்தம் தோன்றும் துத்தத்துள் விளரி தோன்றும் விளரியுள் கைக்கிளை தோன்றும் . பின்னும் இணை இளை பகை நட்பு என்று சொல்லப்பட்ட நான் எனபன .