அபிதான சிந்தாமணி

பாரதன 1094 பார்தன் - சமான் குமரன், இவன் குமரன் பாரதி - 1. கடம்பையூரில் இருந்த புலவர். இவர் பாரதி தீபமென நிகண்டு ஒன்று இயற்றினர். 2. இவர் இராமாயணத் திருப்புகழ் பாடிய கவி, இந்நூ ஓழுக்கு இராமஜயம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பது நூலால் தெரிகிறது. பாரதிதீபம் ஒரு நிகண்டு பாரதியால் இயற்றப்பட்டது. பாரதியாவது கவுத்தனையே தலையாகக் கூத்துக் கொடுக்கப்படுவது. பாரத்துவாசன் -1. பரத்துவாசனைக் காண்க. 2 இவர் எல்லா குடும்பங்களையும் தாங் குதலால் இப்பெயர் பெற்றவர். பாரவி கிராதார்ச்சு நீயம் செய்த வடநூற் புலவன். பாரன் - 1. பிருது குமரன். 2, புஞ்சிக ஸ் தலையென்னும் அரம்பை யைக் கூடிக் கலாவதியைப் பெற்றவன். 3. கலாவதியின் தந்தை. பாரி - இவன் நாடு தகடூர் நாட்டிற்கு அருகி லுள்ளது. சேலம் கோயம்புத்தூருக்கு மேற்கு. இவனுக்கு வேள் பாரி என்றும் பெயர். அரண்வலி முதலிய பெருமை களும் பல்வகை வளங்களு முடையதும், முந்நூறு ஊர்களைக் கொண்டதுமாகிய பறம்பு அல்லது பறம்புமலையைத் தன் அர சிருக்கையாகக் கொண்ட, வேளிர் குலத் தலைவனான பாரி என்பான், வரையா தளிக்கும் பெருவள்ளல்' எனத் தமிழ்நாடு புகழ வாழ்ந்து வந்தான். இவன், மிக்க கொடையாளியும் மிழலைக் கூற்றத்துக்குத் தலைவனுமான வேள் - எவ்வி என்பவ னுடைய வழித்தோன்றல். இப்பாரிக்கு அங்கவை, சங்கவை என்னும் மகளிர் இரு வர், எல்லாச் சிறப்புடன் கல்விச் சிறப் புடையராயு மிருந்தனர். அந்தணர் திலக ராயும் புலவர் பெருமானாகவும் விளங்கிய கபிலர், இப்பாரிக்கு உயிர்த் தோழராக அமைந் தனர். பாரியுடைய பெருங்கருணை விளக்கு தற்குச் சிறு கதை ஒன்றுண்டு. இவன் ஒருகால் தேரூர்ந்து காட்டுவழியே சென்றபோது, அங்கே முல்லைக்கொடி ஒன்று படர்தற்குக் கொழுகொம்பில்லாமல் தளர்ந்து நடுங்குவது கண்டு, அவ்வோரறி வுயிரிடத்தும் உண்டாகிய தன் போரு ளால், அக்கொடி இனிது படரும்படி தான் ஏறிச்சென்ற பொற்றேரை யதன் பக்கத்தே நிறுத்திவிட்டுத் தன் மெல்லிய அடிகள் சிவக்குமாறு நடந்து சென்றனன் என்பர். இவ் வரலாறு, பழைய நூல்கள் பலவற்றிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது. இவ்வாறே, இவன், நிழலில்லாத நீண்ட வழியில் தனிமரம்போல நின்று, தன்னை யடைந்த புலவர், மடவார், வறியார், மெலி யார் முதலிய யாவர்க்கும் தன் இன்னருள் சுரந்துவந்தமையால் இவன் புகழ் தமிழக முழுவதையும் தன் வயமாக்கிக் கொண் டது. இங்கனம், வேள் பாரி உலகம் புகழும் பெருவள்ளலாக விளங்கி நிற்ப, தமிழரச ராகிய சேரசோழ பாண்டியர் மூவரும் இவனைத் தம் பகைவனாகக் கொண்டிருந் தனர். நன்மையன்றி வேறு செய்ய அறி யாத இவ்வள்ள லிடம் இவ்வேந்தர் செற் றம் வைத்ததற்குக் காரணம் நன்கு அறி யப்படவில்லையாயினும், தம்மினும் பாரி படைத்த பெரும்புகழால் நிகழ்ந்த பொறா மையே அதன் காரணமாக வேண்டுமென் பது பல ஏதுக்களால் ஊகிக்கப்படுகின்றது, இவ்வாறு, பாரிக்கும் மூவேந்தர்க்கும் உள்ள பகைமை முற்றிவளரவும், அவ் வேந்தர் ஒன்று சேர்ந்து படையெடுத்துச் சென்று பாரியது பறம்பு மலையை முற் றுகையிட்டனர். இந்நிலைக்குப் பாரி சிறிது மஞ்சாமலும், அவர் தாக்கு தலைப் பொருட் படுத்தாமலும் ஊக்கத்தோடும் அவரை எதிர்த்து நின்றான். அம் முற்றுகைக் காலத்தே, பாரிக்கு உயிர்த்தோழரான கபி லர், உள்ளே கிளிகள் பலவற்றை வளர்த் துப் பழக்கி, அரணுக்கு அப்புறமுள்ள விளைநிலங்களி லிருந்து. நெற் கதிர்களை நாளுங் கொண்டுவரும்படி செய்வித்து, பாரியின் குடிபடைகளைக் காத்து வந்தார். முற்றுகையிட்ட மூவேந் தரும் நெடுங்காலம் வரை வெற்றியின்றிப் பாரி சேனையாற் பரிபவப்பட்டு நிற்க, அப்போது, புலவர் பெருமானாகிய கபிலர் வெளியே வந்து, அவ்வேந்தர் நாணும்படி அவரை நோக்கி, "அளிதோ தானே பாரியது பறம்பே, நளிகொண் முரசின் மூவிரு முற்றினும், உழவருழாதன நான்கு பயனுடைத்தே, ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே, இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே, மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே,
பாரதன 1094 பார்தன் - சமான் குமரன் இவன் குமரன் பாரதி - 1. கடம்பையூரில் இருந்த புலவர் . இவர் பாரதி தீபமென நிகண்டு ஒன்று இயற்றினர் . 2. இவர் இராமாயணத் திருப்புகழ் பாடிய கவி இந்நூ ஓழுக்கு இராமஜயம் என்றும் ஒரு பெயர் உண்டு என்பது நூலால் தெரிகிறது . பாரதிதீபம் ஒரு நிகண்டு பாரதியால் இயற்றப்பட்டது . பாரதியாவது கவுத்தனையே தலையாகக் கூத்துக் கொடுக்கப்படுவது . பாரத்துவாசன் -1 . பரத்துவாசனைக் காண்க . 2 இவர் எல்லா குடும்பங்களையும் தாங் குதலால் இப்பெயர் பெற்றவர் . பாரவி கிராதார்ச்சு நீயம் செய்த வடநூற் புலவன் . பாரன் - 1. பிருது குமரன் . 2 புஞ்சிக ஸ் தலையென்னும் அரம்பை யைக் கூடிக் கலாவதியைப் பெற்றவன் . 3. கலாவதியின் தந்தை . பாரி - இவன் நாடு தகடூர் நாட்டிற்கு அருகி லுள்ளது . சேலம் கோயம்புத்தூருக்கு மேற்கு . இவனுக்கு வேள் பாரி என்றும் பெயர் . அரண்வலி முதலிய பெருமை களும் பல்வகை வளங்களு முடையதும் முந்நூறு ஊர்களைக் கொண்டதுமாகிய பறம்பு அல்லது பறம்புமலையைத் தன் அர சிருக்கையாகக் கொண்ட வேளிர் குலத் தலைவனான பாரி என்பான் வரையா தளிக்கும் பெருவள்ளல் ' எனத் தமிழ்நாடு புகழ வாழ்ந்து வந்தான் . இவன் மிக்க கொடையாளியும் மிழலைக் கூற்றத்துக்குத் தலைவனுமான வேள் - எவ்வி என்பவ னுடைய வழித்தோன்றல் . இப்பாரிக்கு அங்கவை சங்கவை என்னும் மகளிர் இரு வர் எல்லாச் சிறப்புடன் கல்விச் சிறப் புடையராயு மிருந்தனர் . அந்தணர் திலக ராயும் புலவர் பெருமானாகவும் விளங்கிய கபிலர் இப்பாரிக்கு உயிர்த் தோழராக அமைந் தனர் . பாரியுடைய பெருங்கருணை விளக்கு தற்குச் சிறு கதை ஒன்றுண்டு . இவன் ஒருகால் தேரூர்ந்து காட்டுவழியே சென்றபோது அங்கே முல்லைக்கொடி ஒன்று படர்தற்குக் கொழுகொம்பில்லாமல் தளர்ந்து நடுங்குவது கண்டு அவ்வோரறி வுயிரிடத்தும் உண்டாகிய தன் போரு ளால் அக்கொடி இனிது படரும்படி தான் ஏறிச்சென்ற பொற்றேரை யதன் பக்கத்தே நிறுத்திவிட்டுத் தன் மெல்லிய அடிகள் சிவக்குமாறு நடந்து சென்றனன் என்பர் . இவ் வரலாறு பழைய நூல்கள் பலவற்றிலும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது . இவ்வாறே இவன் நிழலில்லாத நீண்ட வழியில் தனிமரம்போல நின்று தன்னை யடைந்த புலவர் மடவார் வறியார் மெலி யார் முதலிய யாவர்க்கும் தன் இன்னருள் சுரந்துவந்தமையால் இவன் புகழ் தமிழக முழுவதையும் தன் வயமாக்கிக் கொண் டது . இங்கனம் வேள் பாரி உலகம் புகழும் பெருவள்ளலாக விளங்கி நிற்ப தமிழரச ராகிய சேரசோழ பாண்டியர் மூவரும் இவனைத் தம் பகைவனாகக் கொண்டிருந் தனர் . நன்மையன்றி வேறு செய்ய அறி யாத இவ்வள்ள லிடம் இவ்வேந்தர் செற் றம் வைத்ததற்குக் காரணம் நன்கு அறி யப்படவில்லையாயினும் தம்மினும் பாரி படைத்த பெரும்புகழால் நிகழ்ந்த பொறா மையே அதன் காரணமாக வேண்டுமென் பது பல ஏதுக்களால் ஊகிக்கப்படுகின்றது இவ்வாறு பாரிக்கும் மூவேந்தர்க்கும் உள்ள பகைமை முற்றிவளரவும் அவ் வேந்தர் ஒன்று சேர்ந்து படையெடுத்துச் சென்று பாரியது பறம்பு மலையை முற் றுகையிட்டனர் . இந்நிலைக்குப் பாரி சிறிது மஞ்சாமலும் அவர் தாக்கு தலைப் பொருட் படுத்தாமலும் ஊக்கத்தோடும் அவரை எதிர்த்து நின்றான் . அம் முற்றுகைக் காலத்தே பாரிக்கு உயிர்த்தோழரான கபி லர் உள்ளே கிளிகள் பலவற்றை வளர்த் துப் பழக்கி அரணுக்கு அப்புறமுள்ள விளைநிலங்களி லிருந்து . நெற் கதிர்களை நாளுங் கொண்டுவரும்படி செய்வித்து பாரியின் குடிபடைகளைக் காத்து வந்தார் . முற்றுகையிட்ட மூவேந் தரும் நெடுங்காலம் வரை வெற்றியின்றிப் பாரி சேனையாற் பரிபவப்பட்டு நிற்க அப்போது புலவர் பெருமானாகிய கபிலர் வெளியே வந்து அவ்வேந்தர் நாணும்படி அவரை நோக்கி அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினும் உழவருழாதன நான்கு பயனுடைத்தே ஒன்றே சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே கொழுங் கொடி வள்ளிக் கிழங்குவீழ்க் கும்மே