அபிதான சிந்தாமணி

கபிலர் 337 கபிலர் பாரின் பாதுகாவலில் வைத்துப் பின்னர் சேரலன் செல்வக் கடுங்கோ வாழியாதன் பாரிபோன்ற நற்குணமுடையவ னென்ப தறிந்து அவனிடஞ் சென்று பதிற்றுப் பத்தில், ஏழாம்பத்துப்பாடி அவனைப் புக ழ்ந்து கூறி அவன் அளவிறந்த பரிசில் கொடுக்கப்பெற்று மீண்டனர். (பதிற்று ஏழாம்பதிகம்.) மீண்டும் பாரியைப் பிரிந்த தனாலாய துன்பம் மிகுந்து தாமும் உயிர் விடத் துணிந்து அவனோடென்னை விதி கூட்டுவதாகவென்று புறம் - 236 கூறி வடக்குமுகமாக இருந்து இந்திரியங்களை ஒடுக்கி ஆகாசாதி வேண்டாது உயிர்துறங் தருளினார். இவர் குறிஞ்சித்திணையில் வல் 'லவார் தலின் அதற்குரிய கொல்லிமலை, பறம்புமலை, முள்ளூர்மலை, முள்ளூர்க்கா னம் இவற்றையெல்லாம் பாராட்டிக் கூறி யுள்ளார். "வாய்மொழிக் கபிலன்” (அகம்- 75) என்று நக்கிரராலும், நல்லிசைக் கபிலன்" (பதிற்று 85) என்று, பெருங் குன்றனார் கிழாராலும், வெறுத்தகேள்வி விளங்குபுகழ்க் கபிலன்" (புறம்-53) என்று பொருந்தில் இளங்கீரனாராலும், "புல னழுக்கற்ற வந்தணாளன்" (புறம் - 126) “பொய்யா நாவிற் கபிலன்" (புறம் - 174) என்று மாறோக்கத்து நப்பசலையாராலும் சிறப்பித்துப் பாடப்பட்டவர். மூவேந்த ரால் முற்றிய பாரி சபிலாது சூழ்ச்சியால் கிள்ளைகளை விடுத்துக் கதிர் கொணர்ந்து உண்டிருந்தமையை நக்கரர் சிறப்பித்துக் கூறாநிற்பர் அகம் - 75. ஔவையாரும் அச் செயலைப் பெரிதும் பாராட்டா நிற் பர் அகம் - 303. இவர் மலைக்கு மாயோனை உவமை கூறின தன்றி "நாடாது நட்டலின்" என்ற குறளின் கருத்தை அமைத்துள்ளார் நற் - 32. வேட்டுவன்பெறும் உணவுப்பொருளை விளக்குகிறார் நற்-56. சகுன சிறப்புக் கூறா நிற்பர் நற் - 65. புலவியுணர்த்தலின்பத் தைப் பெரிதும் பாராட்டிக் கூறுகின்றார் நற் - 217. முருகவேளைக் கூறியுள்ளார் நற்-225. பாரியின்பறம்பு மலையைப் பாரா ட்டிக் கூறியிருக்கிறார் நற்-253. முள்ளூர் மன்னன் காரி குதிரைமேற்சென்று இரு வில் நிரை கவர்ந்து வருவதைச் சிறப்பிக்கி றார் நற் - 291. கொல்லிமலையில் ஓரியைக் கொன்று அவனது நகரிற் காரி சென்ற மையும் ஆங்குள்ளார் பெரும் பூசலிட்டமை யுங் கூறுகிறார் நற் - 320, குறமகள் பல! 'வின் சுளையை மந்திக்கு விருந்தாகக் கொடு க்கு மலைநாடனென வருணிக்கிறார் நற் 353. யாவரும் வியக்கத்தக்க உள்ளு றையே கூறியுள்ளார் நற் - 373. இவர் பாடிய கிள்ளைவிடு தூது மிக்க இனிமை 'யுடையது நற் - 376. தலைவியைச் சிறு கொம்பாகவும், அவள் கொண்ட காமத்தை அதனிடத்துத் தூங்கும் பெரும் பழமாகவும் கூறுவர். குறு-18. இயற்கைப் புணர்ச்சிக் கட் குருகிருந்தது சாக்ஷியாகவெனத் தலை மகன் கூற்றாகக் கூறுவர் நற்-25. இவர் குறு - 38 ம் செய்யுளிற் கூறிய உள்ளுறை யைத் திருக்கோவையாரி லெடுத்தாண்ட மையறிக. (திருக்கோவை 276) ஓரியின் கொல்லி மலையிலுள்ள பாவையைச் சிறப் பித்துக் கூறுவர் குறு - 100. இவர் மலைய மான் திருமுடிக்காரியையும் குறு - 118, 312. நள்ளியையும் 81 - ம் 238. சிறப் பித்துக் கூறுநிற்பர். தலைமகன் மலையை நோக்கியவுடன் பசலை தீர்ந்ததெனத்தலைவி கூறியதாக இவர்பாடியது வியக்கத்தக்கது. குறு - 247. இவர் பாடியனவாக நற்றிணை யில் பத்தொன்பது (13, 32, 59, 65, 77, 217, 222, 225, 253, 267, 291, 309, 320, 336, 353, 359, 368, 373, 376) பாடல்களும், குறுந்தொகையில் இருபத் தொன்பதும், ஐங்குறு நூற்றில் குறிஞ்சி பாட்டு நூறும், பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்துச் செய்யுள் பத்தும், அகத்தில் பதினா றும், புறத்தில் இருபத்தெட்டும் (நெட் டிலை யிருப்பை) என்ற தனிச்செய்யு ளொன்றும், திருவள்ளுவமாலையிலொன்று மாக 204 செய்யுட்களும், இன்னாநாற்பதில் நாற்பது செய்யுட்களும், குறிஞ்சிப்பாட்டுப் பத்துப் பாட்டில் ஒன்றுமாக 246- பாடல் கள் கிடைத் திருக்கின்றன, கபிவர் செய்த வேறு பிரபந்தங்கள் சில பதினொ ராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன. "நீதியார் மதூகநீழல் நெட்டிலை யிரு ப்பை யென்றோர், காதல்கூர் கவிதை பாடும் கபிலனார் பிறந்த மூதூர். என ஒரு செய்யுள் காணப்படுகிறது. G. ஒரு தமிழ்ப் புலவர். இவர் பிறந்த போது பாடியது. "நெட்டிலை யிருப்பை வட்டவான்பூ, வாடாதாயிற், பீடுடைப்பிடி யின் கோடேய்க்கும்மே, வாடிலோ, டைா தலைப்பரதர் மனைதொறு முணங்கும், செந் தலை யிறவின் சீரேய்க்கும்மே." (தமிழ் நாவலர் சரிதை) 43
கபிலர் 337 கபிலர் பாரின் பாதுகாவலில் வைத்துப் பின்னர் சேரலன் செல்வக் கடுங்கோ வாழியாதன் பாரிபோன்ற நற்குணமுடையவ னென்ப தறிந்து அவனிடஞ் சென்று பதிற்றுப் பத்தில் ஏழாம்பத்துப்பாடி அவனைப் புக ழ்ந்து கூறி அவன் அளவிறந்த பரிசில் கொடுக்கப்பெற்று மீண்டனர் . ( பதிற்று ஏழாம்பதிகம் . ) மீண்டும் பாரியைப் பிரிந்த தனாலாய துன்பம் மிகுந்து தாமும் உயிர் விடத் துணிந்து அவனோடென்னை விதி கூட்டுவதாகவென்று புறம் - 236 கூறி வடக்குமுகமாக இருந்து இந்திரியங்களை ஒடுக்கி ஆகாசாதி வேண்டாது உயிர்துறங் தருளினார் . இவர் குறிஞ்சித்திணையில் வல் ' லவார் தலின் அதற்குரிய கொல்லிமலை பறம்புமலை முள்ளூர்மலை முள்ளூர்க்கா னம் இவற்றையெல்லாம் பாராட்டிக் கூறி யுள்ளார் . வாய்மொழிக் கபிலன் ( அகம் 75 ) என்று நக்கிரராலும் நல்லிசைக் கபிலன் ( பதிற்று 85 ) என்று பெருங் குன்றனார் கிழாராலும் வெறுத்தகேள்வி விளங்குபுகழ்க் கபிலன் ( புறம் - 53 ) என்று பொருந்தில் இளங்கீரனாராலும் புல னழுக்கற்ற வந்தணாளன் ( புறம் - 126 ) பொய்யா நாவிற் கபிலன் ( புறம் - 174 ) என்று மாறோக்கத்து நப்பசலையாராலும் சிறப்பித்துப் பாடப்பட்டவர் . மூவேந்த ரால் முற்றிய பாரி சபிலாது சூழ்ச்சியால் கிள்ளைகளை விடுத்துக் கதிர் கொணர்ந்து உண்டிருந்தமையை நக்கரர் சிறப்பித்துக் கூறாநிற்பர் அகம் - 75 . ஔவையாரும் அச் செயலைப் பெரிதும் பாராட்டா நிற் பர் அகம் - 303 . இவர் மலைக்கு மாயோனை உவமை கூறின தன்றி நாடாது நட்டலின் என்ற குறளின் கருத்தை அமைத்துள்ளார் நற் - 32 . வேட்டுவன்பெறும் உணவுப்பொருளை விளக்குகிறார் நற் - 56 . சகுன சிறப்புக் கூறா நிற்பர் நற் - 65 . புலவியுணர்த்தலின்பத் தைப் பெரிதும் பாராட்டிக் கூறுகின்றார் நற் - 217 . முருகவேளைக் கூறியுள்ளார் நற் - 225 . பாரியின்பறம்பு மலையைப் பாரா ட்டிக் கூறியிருக்கிறார் நற் - 253 . முள்ளூர் மன்னன் காரி குதிரைமேற்சென்று இரு வில் நிரை கவர்ந்து வருவதைச் சிறப்பிக்கி றார் நற் - 291 . கொல்லிமலையில் ஓரியைக் கொன்று அவனது நகரிற் காரி சென்ற மையும் ஆங்குள்ளார் பெரும் பூசலிட்டமை யுங் கூறுகிறார் நற் - 320 குறமகள் பல ! ' வின் சுளையை மந்திக்கு விருந்தாகக் கொடு க்கு மலைநாடனென வருணிக்கிறார் நற் 353 . யாவரும் வியக்கத்தக்க உள்ளு றையே கூறியுள்ளார் நற் - 373 . இவர் பாடிய கிள்ளைவிடு தூது மிக்க இனிமை ' யுடையது நற் - 376 . தலைவியைச் சிறு கொம்பாகவும் அவள் கொண்ட காமத்தை அதனிடத்துத் தூங்கும் பெரும் பழமாகவும் கூறுவர் . குறு - 18 . இயற்கைப் புணர்ச்சிக் கட் குருகிருந்தது சாக்ஷியாகவெனத் தலை மகன் கூற்றாகக் கூறுவர் நற் - 25 . இவர் குறு - 38 ம் செய்யுளிற் கூறிய உள்ளுறை யைத் திருக்கோவையாரி லெடுத்தாண்ட மையறிக . ( திருக்கோவை 276 ) ஓரியின் கொல்லி மலையிலுள்ள பாவையைச் சிறப் பித்துக் கூறுவர் குறு - 100 . இவர் மலைய மான் திருமுடிக்காரியையும் குறு - 118 312 . நள்ளியையும் 81 - ம் 238 . சிறப் பித்துக் கூறுநிற்பர் . தலைமகன் மலையை நோக்கியவுடன் பசலை தீர்ந்ததெனத்தலைவி கூறியதாக இவர்பாடியது வியக்கத்தக்கது . குறு - 247 . இவர் பாடியனவாக நற்றிணை யில் பத்தொன்பது ( 13 32 59 65 77 217 222 225 253 267 291 309 320 336 353 359 368 373 376 ) பாடல்களும் குறுந்தொகையில் இருபத் தொன்பதும் ஐங்குறு நூற்றில் குறிஞ்சி பாட்டு நூறும் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்துச் செய்யுள் பத்தும் அகத்தில் பதினா றும் புறத்தில் இருபத்தெட்டும் ( நெட் டிலை யிருப்பை ) என்ற தனிச்செய்யு ளொன்றும் திருவள்ளுவமாலையிலொன்று மாக 204 செய்யுட்களும் இன்னாநாற்பதில் நாற்பது செய்யுட்களும் குறிஞ்சிப்பாட்டுப் பத்துப் பாட்டில் ஒன்றுமாக 246 - பாடல் கள் கிடைத் திருக்கின்றன கபிவர் செய்த வேறு பிரபந்தங்கள் சில பதினொ ராந் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன . நீதியார் மதூகநீழல் நெட்டிலை யிரு ப்பை யென்றோர் காதல்கூர் கவிதை பாடும் கபிலனார் பிறந்த மூதூர் . என ஒரு செய்யுள் காணப்படுகிறது . G . ஒரு தமிழ்ப் புலவர் . இவர் பிறந்த போது பாடியது . நெட்டிலை யிருப்பை வட்டவான்பூ வாடாதாயிற் பீடுடைப்பிடி யின் கோடேய்க்கும்மே வாடிலோ டைா தலைப்பரதர் மனைதொறு முணங்கும் செந் தலை யிறவின் சீரேய்க்கும்மே . ( தமிழ் நாவலர் சரிதை ) 43