அபிதான சிந்தாமணி

ஒளவையார் 308 ஒளவையார் பாடியவென்றவன் பனுவலா னெம்மை யும், பாடுகவென் றனிர் நும்மை யிங்கெங் மனம் பாடுகென்யானே, களிறுபடு செங் களங் கண்ணிற்காணீர், வெளிறுபடுதல் யாழ் விரும்பிக்கேளீர், புலவர்வாய்ச்சொற் புலம்பலுக்கிரங்கீர், இலவுவாய்ச்சிய ரிள முலைபுல்லீ, ரவிச்சுவையல்லது தமிழ்ச் சுவை தெருளீ, ருடீ இருண்ணீர் கொடீ இர் கொள்ளீர், ஒவ்வாக்கானத் துயர்மரம் பழுத்த, துவ்வாக்கனியெனத் தோன்றிய நீரே" எனப் பாடி யகற்றினர். ஒர்காலத் துக் குலோத்துங்க சோழன் கவிகளைப் பராமுகமாகக் கொள்ளுதலைக்கேட்டு இவர் ஓர்நாள் காவிரிக்குத் தெற்கின்கணுள்ள குடிவளத்தை விசாரிக்கப் புலவருடன் போகையில் ஆண்டு ஔவை, அரசனைக் கண்டு ஒரு காலையும், கவிகளைக்கண்டு மற் றொரு காலையும் உடலையும் வளைத்தல் கண்டு அரசன் ஏறிட்டுப் பார்க்க அது நோக்கி ஒளவை "காவலர்க்கோர் கான் மடங்கும் கற்றோர் தமக்கிருகால், கேவலர் க்கோ வங்கமெலாங் கேட்டியால் - மேவ லர்க்குச், சீரேறு போல்வாய் செழுங்கா விரிநாடா, வேறேறப் பார்த்துநிற்ப தென்" எனுஞ் செய்யுள் பாடக்கேட்டு அரசன் கற்றோரிடம் அன்பு கொண்டு நீங் கினன். சிலர் ஒளவையை எது இனிதென க்கேட்க 'எருமிரண்ளெதா யில்லத்தே வித்துளதாய், நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச் சென்று வரவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டால், என்று முழவேயினிது" என்றனர். தேவர் கூறிய புருஷார்த்தங்களைச் சுருக்கிக் கூறக் கேட்டுக்கொண்ட பொழது ''ஈதல றந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான் றும், காதலிருவர் கருத்தொத்- தாதரவு, பட்டதே யின்பம் பானைநினைந் திம் மூன்றும், விட்டதே பேரின்ப வீடு" என் றும் மற்றொருபோது காட்சி முதலிய பற்றி வினவிய போது "ஒன்முகக் காண் பதே காட்சி புலனைந்தும், வென்றான்றன் வீரமே வீரம் என்றாலும், சாகாமற் கற்' பதே கல்விதனைப் பிறர், ஏவாமலுண்பதே யூண்" என்றும், பின்னும் இவர் லோபி யொருவனை நோக்கி பாடல் பெறானே பலர்நச்ச வாழானே, நாடறிய நன்மணங்க ணாடானே- சேட, னிவன்வாழும் வாழ் க்கை யிருங்கடல்சூழ் பாரில், கவிழ்ந்தென் மலர்ந்தென்ன காண்'' என்றும், "சுற்றும் கருங்குளவிச் சூரைத் தூ ராரியப்பேய், எற்றுஞ்சுடுகா டிடிகரையின் - புற்றில், வளர்ந்தமடற் பனைக்குள்வைத்த தேனொக் குந், தளர்ந்தோர்க் கொன் றீயார் தனம் என்றும் கூறினர். அரசன் யாரை மந்திரி யாகக் கொள்ளலாமென்ன "நூலெனி லோ கோல்சாயு நுந்தமசேல் வெஞ்சம் ராங், கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான், மந்திரியுமாவான் வழிக்குத் துணையாவான், அந்த வாசே யாசு'' என் றும், இவர் பாண்டியன் கலியாணத்து விருந்துண்டபோது "வண்டமிழைத் தே ர்ந்தவழுதி கலியாணத், துண்ட பெருக்க முரைக்கக்கே-எண்டி, நெருக்குண்டேன் றள்ளுண்டேmள் பசியினாலே, சுருக்குண் டேன் சோறுண்டிலேன்" என்றும், சோமன் கொடையைப் புகழ்ந்து - (நிழலருமை வெய்யிலிலே நின்றறிமி னீசன், கழலருமை வெவ்வினையிற் காண் மின்- பழகு தமிழ்ச், சொல்லருமை நாலி ரண்டிற் சோமன் கொடையருமை, புல்ல ரிடத்தே யறிமின் போய்" என்றும், இவர் அதிகமானை இழையணி பொலிந்த எனும் அகவலாற் சிறப்பித்தும் பாடினர். இவர் கூழக்குப் பாடினார் என்பதை "காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி, ஆசுக்குக் காளமுகி லாவானே -தேசு பெறு, மூழுக்குக் கூத்தனுவக்கப் புக ழேந்தி, கூழுக்கிங் கவ்வையெனக் கூறு என்பதால் அறிக. 2. இவர் பாணர் மரபினர். இவர் இள மையில் விறலியராக ஆடல் பாடல் முத வியவற்றில் தேர்ந்து விளங்கினர். இவர் ஒருகாலத்து அதிகமானெடுமானஞ்சியிடம்
ஒளவையார் 308 ஒளவையார் பாடியவென்றவன் பனுவலா னெம்மை யும் பாடுகவென் றனிர் நும்மை யிங்கெங் மனம் பாடுகென்யானே களிறுபடு செங் களங் கண்ணிற்காணீர் வெளிறுபடுதல் யாழ் விரும்பிக்கேளீர் புலவர்வாய்ச்சொற் புலம்பலுக்கிரங்கீர் இலவுவாய்ச்சிய ரிள முலைபுல்லீ ரவிச்சுவையல்லது தமிழ்ச் சுவை தெருளீ ருடீ இருண்ணீர் கொடீ இர் கொள்ளீர் ஒவ்வாக்கானத் துயர்மரம் பழுத்த துவ்வாக்கனியெனத் தோன்றிய நீரே எனப் பாடி யகற்றினர் . ஒர்காலத் துக் குலோத்துங்க சோழன் கவிகளைப் பராமுகமாகக் கொள்ளுதலைக்கேட்டு இவர் ஓர்நாள் காவிரிக்குத் தெற்கின்கணுள்ள குடிவளத்தை விசாரிக்கப் புலவருடன் போகையில் ஆண்டு ஔவை அரசனைக் கண்டு ஒரு காலையும் கவிகளைக்கண்டு மற் றொரு காலையும் உடலையும் வளைத்தல் கண்டு அரசன் ஏறிட்டுப் பார்க்க அது நோக்கி ஒளவை காவலர்க்கோர் கான் மடங்கும் கற்றோர் தமக்கிருகால் கேவலர் க்கோ வங்கமெலாங் கேட்டியால் - மேவ லர்க்குச் சீரேறு போல்வாய் செழுங்கா விரிநாடா வேறேறப் பார்த்துநிற்ப தென் எனுஞ் செய்யுள் பாடக்கேட்டு அரசன் கற்றோரிடம் அன்பு கொண்டு நீங் கினன் . சிலர் ஒளவையை எது இனிதென க்கேட்க ' எருமிரண்ளெதா யில்லத்தே வித்துளதாய் நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச் சென்று வரவணித்தாய்ச் செய்வாருஞ் சொற்கேட்டால் என்று முழவேயினிது என்றனர் . தேவர் கூறிய புருஷார்த்தங்களைச் சுருக்கிக் கூறக் கேட்டுக்கொண்ட பொழது ' ' ஈதல றந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான் றும் காதலிருவர் கருத்தொத் - தாதரவு பட்டதே யின்பம் பானைநினைந் திம் மூன்றும் விட்டதே பேரின்ப வீடு என் றும் மற்றொருபோது காட்சி முதலிய பற்றி வினவிய போது ஒன்முகக் காண் பதே காட்சி புலனைந்தும் வென்றான்றன் வீரமே வீரம் என்றாலும் சாகாமற் கற் ' பதே கல்விதனைப் பிறர் ஏவாமலுண்பதே யூண் என்றும் பின்னும் இவர் லோபி யொருவனை நோக்கி பாடல் பெறானே பலர்நச்ச வாழானே நாடறிய நன்மணங்க ணாடானே - சேட னிவன்வாழும் வாழ் க்கை யிருங்கடல்சூழ் பாரில் கவிழ்ந்தென் மலர்ந்தென்ன காண் ' ' என்றும் சுற்றும் கருங்குளவிச் சூரைத் தூ ராரியப்பேய் எற்றுஞ்சுடுகா டிடிகரையின் - புற்றில் வளர்ந்தமடற் பனைக்குள்வைத்த தேனொக் குந் தளர்ந்தோர்க் கொன் றீயார் தனம் என்றும் கூறினர் . அரசன் யாரை மந்திரி யாகக் கொள்ளலாமென்ன நூலெனி லோ கோல்சாயு நுந்தமசேல் வெஞ்சம் ராங் கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான் மந்திரியுமாவான் வழிக்குத் துணையாவான் அந்த வாசே யாசு ' ' என் றும் இவர் பாண்டியன் கலியாணத்து விருந்துண்டபோது வண்டமிழைத் தே ர்ந்தவழுதி கலியாணத் துண்ட பெருக்க முரைக்கக்கே - எண்டி நெருக்குண்டேன் றள்ளுண்டேmள் பசியினாலே சுருக்குண் டேன் சோறுண்டிலேன் என்றும் சோமன் கொடையைப் புகழ்ந்து - ( நிழலருமை வெய்யிலிலே நின்றறிமி னீசன் கழலருமை வெவ்வினையிற் காண் மின் - பழகு தமிழ்ச் சொல்லருமை நாலி ரண்டிற் சோமன் கொடையருமை புல்ல ரிடத்தே யறிமின் போய் என்றும் இவர் அதிகமானை இழையணி பொலிந்த எனும் அகவலாற் சிறப்பித்தும் பாடினர் . இவர் கூழக்குப் பாடினார் என்பதை காசுக்குக் கம்பன் கருணைக் கருணகிரி ஆசுக்குக் காளமுகி லாவானே - தேசு பெறு மூழுக்குக் கூத்தனுவக்கப் புக ழேந்தி கூழுக்கிங் கவ்வையெனக் கூறு என்பதால் அறிக . 2 . இவர் பாணர் மரபினர் . இவர் இள மையில் விறலியராக ஆடல் பாடல் முத வியவற்றில் தேர்ந்து விளங்கினர் . இவர் ஒருகாலத்து அதிகமானெடுமானஞ்சியிடம்