மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். 59 இரத்தமூலத்திற்கு. சுருள்பட்டையை சூரணித்து தேனில் குழைத்து இருபோது தின்று வந்தால் இரத்தமூலம் சாந்தியாகும். சுண்டைக்காய் குலம் வெண்பா. நெஞ்சிற் கபம் போகும் நிரைகிருமி நோயும் போம் விஞ்சுவாதத்தின் விளைவும் போம் - வஞ்சியரே வாயைக்கசப்பிக்கும் மாமலையி லுள்ள சுண்டைக் காயைச் சுவைப்பவர்க்குக் காண். சுண்டைவற்றல் உபயோகம் வெண்பா. பித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும் உற்றகிறாணியும் போம் உட்பசியாம் - சத்தியமாய் பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான் சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல், சூ சுகவிரோசனம். சூரத்து நிலாவிரையை யிடித்து வஸ்திரகாயம் செய்து அதற்குசரியிடை சுக்கு - அதிமதுரம்-ரோஜாமொக்கு - விளக்கெண்ணையில் வருத்தபிஞ்சிகடுக்காய் - இவைகளை பிடித்து வஸ்திரகாயம் செய்து சேர்த்து அறைப்பங்கு-சீனிகூட்டி புட்டியில் வைத்துக்கொண்டு - அறைரூபாயிடை எடுத்து வென்னீரில் கலைக்கி புண்டுவந்தால் மலக்கட்டு நீங்கும் - இரண்டொருவிசை விரோசனமாகும். வெட்பந்தணிய. சூரிய காந்தியை அறைத்து பாலில்கலைக்கியுண்டுவந்தால், சூடு ஊஷ்ணம் இவைகளைத் தணிக்கும். சூரியகாந்தி - சந்திரகாந்தி இரண்டின் குணக் வெண்பா. சந்திரகாந்திக்குத் தழலெரிச்சல் நீர்கடுப்பும் உந்திவலியாவு மொடுங்குங்காண் - சந்திலரும் பாரியவாதம் பருகுநீரேற்றமும்போய் சூரியகாந்திக்குச் சொல்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . 59 இரத்தமூலத்திற்கு . சுருள்பட்டையை சூரணித்து தேனில் குழைத்து இருபோது தின்று வந்தால் இரத்தமூலம் சாந்தியாகும் . சுண்டைக்காய் குலம் வெண்பா . நெஞ்சிற் கபம் போகும் நிரைகிருமி நோயும் போம் விஞ்சுவாதத்தின் விளைவும் போம் - வஞ்சியரே வாயைக்கசப்பிக்கும் மாமலையி லுள்ள சுண்டைக் காயைச் சுவைப்பவர்க்குக் காண் . சுண்டைவற்றல் உபயோகம் வெண்பா . பித்தவரோசகம்போம் பேராப்புழுச்சாகும் உற்றகிறாணியும் போம் உட்பசியாம் - சத்தியமாய் பண்டைக்குதவாமம் பற்றுமிங்கியாரையுந்தான் சுண்டைக்காய் வற்றலுண்ணச் சொல் சூ சுகவிரோசனம் . சூரத்து நிலாவிரையை யிடித்து வஸ்திரகாயம் செய்து அதற்குசரியிடை சுக்கு - அதிமதுரம் - ரோஜாமொக்கு - விளக்கெண்ணையில் வருத்தபிஞ்சிகடுக்காய் - இவைகளை பிடித்து வஸ்திரகாயம் செய்து சேர்த்து அறைப்பங்கு - சீனிகூட்டி புட்டியில் வைத்துக்கொண்டு - அறைரூபாயிடை எடுத்து வென்னீரில் கலைக்கி புண்டுவந்தால் மலக்கட்டு நீங்கும் - இரண்டொருவிசை விரோசனமாகும் . வெட்பந்தணிய . சூரிய காந்தியை அறைத்து பாலில்கலைக்கியுண்டுவந்தால் சூடு ஊஷ்ணம் இவைகளைத் தணிக்கும் . சூரியகாந்தி - சந்திரகாந்தி இரண்டின் குணக் வெண்பா . சந்திரகாந்திக்குத் தழலெரிச்சல் நீர்கடுப்பும் உந்திவலியாவு மொடுங்குங்காண் - சந்திலரும் பாரியவாதம் பருகுநீரேற்றமும்போய் சூரியகாந்திக்குச் சொல் .