சௌமிய சாகரம்
53
ஆமென்ற மகாரமுடன்மைந்தா கேளு
அருள்பெருக அகாரமுடனுகாரங் கூட்டி
ஓமென்ற பிரணவத்தின் மகிமை யாலே
உறுதியுடன் மூன்றெழுத்துஞ் செபித்தா யாகில்
தாமென்ற தன்னிலையே பிரம மாகித்
தானாகித்தானவனாய் தான்தானாவாய்
நாமென்ற நாதாந்த மூர்த்தி யாலே
நடுவெழுந்த மூன்றெழுத்துஞ் சித்தி காணே. 199
காணவே மூன்றெழுத்துங்கருணையாகக்
கட்டாகச் செய்தபின்பு இன்னங் கேளு
பேணவே சிகாரமென்றால் ஆர்தான் காண்பார்
பேரண்ட மானபூரணமே யாகும்
தோணவே பூரணத்தைக் கண்டு கொண்டு
சுகமான சிவசத்தி வாலை யோடே
பூணவே தானிருத்திச் செபித்தால் மைந்தா
பூரணமாய்க் காயசித்தி புனித மாமே. 200
புனிதமுடன்தானிருந்து பூசை பண்ணிப்
பொற்கமல உச்சியிலே மனத்தை வைத்து
இனிதமுடன் வகாரமென்றால் வாசி யாச்சு
ஏகமென்ற வாசியிலே இன்பம் வைத்துக்
கனிகரண மானசிவசத்தி வாலை
கண்ணான பூரணந்தான் நாலுங் கூட்டி
மனிகரனமானதொரு அஞ்சுமைந்தா
மகஸ்த்தான பஞ்சகெண தீட்சையாச்சே! 201
ஆச்சப்பாபஞ்சகெண தீட்சை யோத
அப்பனே வகைவிபரம் நன்றாய்க் கேளு
நீச்சப்பாசிவதீட்சை உதய மாகும்
நிசமாக மாலையிலே சத்தி தீட்சை
பேச்சப்பா பேசாத வாலை தீட்சை
பேணிமனங் கண்டவுடன் தெண்டம் பண்ணு
மூச்சப்பாநிறைந்ததொரு வாம ரூப
முத்திகொண்ட பஞ்சகண நாதந்தானே!
202
53
ஆமென்ற
மகாரமுடன்மைந்தா
கேளு
அருள்பெருக
அகாரமுடனுகாரங்
கூட்டி
ஓமென்ற
பிரணவத்தின்
மகிமை
யாலே
உறுதியுடன்
மூன்றெழுத்துஞ்
செபித்தா
யாகில்
தாமென்ற
தன்னிலையே
பிரம
மாகித்
தானாகித்தானவனாய்
தான்தானாவாய்
நாமென்ற
நாதாந்த
மூர்த்தி
யாலே
நடுவெழுந்த
மூன்றெழுத்துஞ்
சித்தி
காணே
.
199
காணவே
மூன்றெழுத்துங்கருணையாகக்
கட்டாகச்
செய்தபின்பு
இன்னங்
கேளு
பேணவே
சிகாரமென்றால்
ஆர்தான்
காண்பார்
பேரண்ட
மானபூரணமே
யாகும்
தோணவே
பூரணத்தைக்
கண்டு
கொண்டு
சுகமான
சிவசத்தி
வாலை
யோடே
பூணவே
தானிருத்திச்
செபித்தால்
மைந்தா
பூரணமாய்க்
காயசித்தி
புனித
மாமே
.
200
புனிதமுடன்தானிருந்து
பூசை
பண்ணிப்
பொற்கமல
உச்சியிலே
மனத்தை
வைத்து
இனிதமுடன்
வகாரமென்றால்
வாசி
யாச்சு
ஏகமென்ற
வாசியிலே
இன்பம்
வைத்துக்
கனிகரண
மானசிவசத்தி
வாலை
கண்ணான
பூரணந்தான்
நாலுங்
கூட்டி
மனிகரனமானதொரு
அஞ்சுமைந்தா
மகஸ்த்தான
பஞ்சகெண
தீட்சையாச்சே
!
201
ஆச்சப்பாபஞ்சகெண
தீட்சை
யோத
அப்பனே
வகைவிபரம்
நன்றாய்க்
கேளு
நீச்சப்பாசிவதீட்சை
உதய
மாகும்
நிசமாக
மாலையிலே
சத்தி
தீட்சை
பேச்சப்பா
பேசாத
வாலை
தீட்சை
பேணிமனங்
கண்டவுடன்
தெண்டம்
பண்ணு
மூச்சப்பாநிறைந்ததொரு
வாம
ரூப
முத்திகொண்ட
பஞ்சகண
நாதந்தானே
!
202