சௌமிய சாகரம்

36 கலங்கிநின்ற லோகமதுக் குறுதி யாகக் கருணையுள்ளவிஷ்ணுமுனி கருத்து வைத்து இலங்கிநின்ற யெட்டுரெண்டு மொன்றாய்க் கூடி யேகமென்ற அஞ்செழுத்தால் பேத மாக்கித் துலங்கிநின்ற மனுவையொரு நான்கு சாதி சுத்தமுடன் றான்வகுத்துச்சுயமாய் மைந்தா விளங்கிநின்ற சத்திரிய வங்கி சத்தில் விபரமுள்ள நாகமுனி விபரங் கேளே. 132 கேளடா நாகமுனி யுலகோர்க் கையா கிருபையுடன் பாசைபதி னெட்டுஞ் சொன்னான் வாளடாராசமுனி தர்க்க சாஸ்திரங் மகத்தான வேதாந்தஞ்சிப்பி சாஸ்திரங் காலடாதானறிய மதன சாஸ்திரங் கலந்தமனு போகமதாய் நன்மை தீமை ஆளடா அறுசுவையும் அமுர்தங் காட்டி அங்கமுடன் அன்னமதால் அசந்தார் தானே. 133 தானென்ற அன்னமதால் நித்திரையு முண்டாய் சங்கையுடனனுபோகமூப் பிளமை யுண்டாய் வானென்ற யேக்கமுட ஆசை யுண்டாய் வஞ்சகமும் பிறப்பிறப்புத்தானு முண்டாய்த் தேனென்ற பலகோவில் நதிக ளுண்டாய்ச் செகராச மகுடபதி வற்க முண்டாய்க் கோனென்ற வொப்பனைகள் நன்றாய்ச் செய்து குறிப்புடனேதான்மூழ்கித் தவஞ்செய்தார் பாரே. 134 பாரான மறையோர்கள் வேள்வி செய்யப் பதிவாக விஷ்ணுமுனி வந்து தோன்றிச் சீராக வரங்கேளு மென்று சொன்னார் செகத்திலரு சுருதிமறை யாக வேதான் நேராக நாள்முகிழ்த்தம் நினைவாய்ச் சொல்ல நீதியுடன் எங்கள் சொல் மேல தாகப் பேராக அந்தரத்தில் யாருங் காணார் பெருமையுள்ள செந்திருஷம் பேசுங் காணே. 135
36 கலங்கிநின்ற லோகமதுக் குறுதி யாகக் கருணையுள்ளவிஷ்ணுமுனி கருத்து வைத்து இலங்கிநின்ற யெட்டுரெண்டு மொன்றாய்க் கூடி யேகமென்ற அஞ்செழுத்தால் பேத மாக்கித் துலங்கிநின்ற மனுவையொரு நான்கு சாதி சுத்தமுடன் றான்வகுத்துச்சுயமாய் மைந்தா விளங்கிநின்ற சத்திரிய வங்கி சத்தில் விபரமுள்ள நாகமுனி விபரங் கேளே . 132 கேளடா நாகமுனி யுலகோர்க் கையா கிருபையுடன் பாசைபதி னெட்டுஞ் சொன்னான் வாளடாராசமுனி தர்க்க சாஸ்திரங் மகத்தான வேதாந்தஞ்சிப்பி சாஸ்திரங் காலடாதானறிய மதன சாஸ்திரங் கலந்தமனு போகமதாய் நன்மை தீமை ஆளடா அறுசுவையும் அமுர்தங் காட்டி அங்கமுடன் அன்னமதால் அசந்தார் தானே . 133 தானென்ற அன்னமதால் நித்திரையு முண்டாய் சங்கையுடனனுபோகமூப் பிளமை யுண்டாய் வானென்ற யேக்கமுட ஆசை யுண்டாய் வஞ்சகமும் பிறப்பிறப்புத்தானு முண்டாய்த் தேனென்ற பலகோவில் நதிக ளுண்டாய்ச் செகராச மகுடபதி வற்க முண்டாய்க் கோனென்ற வொப்பனைகள் நன்றாய்ச் செய்து குறிப்புடனேதான்மூழ்கித் தவஞ்செய்தார் பாரே . 134 பாரான மறையோர்கள் வேள்வி செய்யப் பதிவாக விஷ்ணுமுனி வந்து தோன்றிச் சீராக வரங்கேளு மென்று சொன்னார் செகத்திலரு சுருதிமறை யாக வேதான் நேராக நாள்முகிழ்த்தம் நினைவாய்ச் சொல்ல நீதியுடன் எங்கள் சொல் மேல தாகப் பேராக அந்தரத்தில் யாருங் காணார் பெருமையுள்ள செந்திருஷம் பேசுங் காணே . 135