சௌமிய சாகரம்

312 சு கண்ணான கமலக்கண் மனக்கண் ணாகும் கருணைவளர் பூரணமெய்யறிவானந்தம் ஒண்ணான அறிவல்லோ பிரம மாச்சு உண்மையென்ற வாசியடா அமுர்த பானம் எண்ணான அமுர்தமதை யறிந்து கொண்டால் யேகநிராமயமான சோதி யாச்சு விண்ணானசோதிதனைக் கண்ட போது மேலான பிரமமென்று மெய்யிற் கொள்ளே. 1181 மெய்யான சவுமிய சாகரத்தை மைந்தா விரும்பிநின்று ஆதியந்தம் நன்றாய்ப் பார்த்தால் பொய்யான மாய்கை யெல்லாம் விட்டகன்று போதமய மானசிவ யோகந்தங்கும் மையான சுழுனையிலே மனக்கண் சாத்தி மகஸ்த்தான சாகரத்தைப் பூசை பண்ணு கையான கையில் நெல்லிக்கனிபோல் மைந்தா கருணைபெற மவுனமதைக்காரு காரே. 1182 காரப்பாமவுனமதைக் காக்க வேண்டிக் கருணையுடன் சத்திசிவ பூசை பண்ணு நேரப்பாவாலைதனைப் பூசைபண்ணு நிசமான பூரணத்தைக் கண்டு கொள்ளு தேரப்பா நால்பதமுந் தேர்ந்து கொண்டால் சிவசிவாமவுனமதுக் குருதி யாகும் வீறப்பா கொண்டுபதி கெட்டுப் போனால் வேதமென்ன நாதமென்னவீண்தான் பாரே. 1183 பாரடா வேதமொடு நாதந்தானும் பதிவான ஆதியந்த மென்றும் பேரு நேரடா ஆதியந்த மண்விண்ணப்பா நிசமான மண்ணுவிண்ணு நாத விந்து கூறடா நாதவிந்து சத்திசிவ மாச்சு குறியான சத்திசிவமேதென்றாக்கால் காரடாசத்தியென்றால் தேக மாச்சு கருவான சிவமென்றால் வெளிதான் காணே. 1184
312 சு கண்ணான கமலக்கண் மனக்கண் ணாகும் கருணைவளர் பூரணமெய்யறிவானந்தம் ஒண்ணான அறிவல்லோ பிரம மாச்சு உண்மையென்ற வாசியடா அமுர்த பானம் எண்ணான அமுர்தமதை யறிந்து கொண்டால் யேகநிராமயமான சோதி யாச்சு விண்ணானசோதிதனைக் கண்ட போது மேலான பிரமமென்று மெய்யிற் கொள்ளே . 1181 மெய்யான சவுமிய சாகரத்தை மைந்தா விரும்பிநின்று ஆதியந்தம் நன்றாய்ப் பார்த்தால் பொய்யான மாய்கை யெல்லாம் விட்டகன்று போதமய மானசிவ யோகந்தங்கும் மையான சுழுனையிலே மனக்கண் சாத்தி மகஸ்த்தான சாகரத்தைப் பூசை பண்ணு கையான கையில் நெல்லிக்கனிபோல் மைந்தா கருணைபெற மவுனமதைக்காரு காரே . 1182 காரப்பாமவுனமதைக் காக்க வேண்டிக் கருணையுடன் சத்திசிவ பூசை பண்ணு நேரப்பாவாலைதனைப் பூசைபண்ணு நிசமான பூரணத்தைக் கண்டு கொள்ளு தேரப்பா நால்பதமுந் தேர்ந்து கொண்டால் சிவசிவாமவுனமதுக் குருதி யாகும் வீறப்பா கொண்டுபதி கெட்டுப் போனால் வேதமென்ன நாதமென்னவீண்தான் பாரே . 1183 பாரடா வேதமொடு நாதந்தானும் பதிவான ஆதியந்த மென்றும் பேரு நேரடா ஆதியந்த மண்விண்ணப்பா நிசமான மண்ணுவிண்ணு நாத விந்து கூறடா நாதவிந்து சத்திசிவ மாச்சு குறியான சத்திசிவமேதென்றாக்கால் காரடாசத்தியென்றால் தேக மாச்சு கருவான சிவமென்றால் வெளிதான் காணே . 1184