சௌமிய சாகரம்

306 சிகாரமென்ற அக்கினியை மூட்டிக் கொண்டு சிவசிவா சுழுமுனையில் வாசி யேத்தி வகாரமென்ற வாசிதனைத் திறவாள் சத்தி வரிசையுடன் சத்தியெட்டும் மவுன மாவாள் மகாரமென்ற மவுனியவள் ஓங்காரத் துள்ளே வகையறிந்து ரவிமதியும் வாசமாகி அகாரமென்ற மனோன்மணியைப் பூசை பண்ண அனுதினமுஞ் சுழுமுனையை யறிந்து நோக்கே.1157 நோக்குவது சுழுமுனைக்குள் மனது வைத்து நுண்மையுடன் அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே தாக்குவது ரவிமதியை யொன்றாய்க் கூட்டித் தமரான அனுவாசல் தமரி லேதான் வாக்குமன தொன்றாகி மனது கூர்ந்து வரிசையுடன் ரேசகபூரகமும் பண்ணி நாக்குநுனியமுர்தத்தை நாவில் கொண்டு நன்மையுடன் கும்பகத்தில் நாடி நில்லே. 1158 நில்லென்ற நிலையான மூல சக்தி நிசமான ஓங்காரந் தன்னில் மைந்தா சொல்லென்ற சுழுனைவளி தன்னி லேறிச் சுகமாக மேலாறுஞ்சுத்திப் பார்த்து உள்ளென்ற சிகாரமதாலுற்றுப் பார்த்து உற்றுமெல்லப் பார்க்கையிலே நந்தி காணுஞ் செல்லென்ற அகாரமதாலறிவுங்காணுஞ் சேர்ந்துமிக ஒன்றாகி ஒளிபோலாமே. 1159 ஒளியான வொளியறிந்து உற்றுப் பாரு உற்றுமெல்லப் பார்க்கையிலே நந்தி காணும் விளியான தெளிவறிந்து கண்டாயானால் வேதாந்த மூலமதிற் கனலோ மீறும் சுளியான கண்ணறிந்து வளியே சென்றால் சோதிதிருவானகேசரியாள் பாதம் வளியானதுறையறிந்து கண்டாயானால் மகஸ்த்தான மதிரவியின் காலைத் தேடே... 1160
306 சிகாரமென்ற அக்கினியை மூட்டிக் கொண்டு சிவசிவா சுழுமுனையில் வாசி யேத்தி வகாரமென்ற வாசிதனைத் திறவாள் சத்தி வரிசையுடன் சத்தியெட்டும் மவுன மாவாள் மகாரமென்ற மவுனியவள் ஓங்காரத் துள்ளே வகையறிந்து ரவிமதியும் வாசமாகி அகாரமென்ற மனோன்மணியைப் பூசை பண்ண அனுதினமுஞ் சுழுமுனையை யறிந்து நோக்கே . 1157 நோக்குவது சுழுமுனைக்குள் மனது வைத்து நுண்மையுடன் அண்ணாக்கை யுண்ணாக் குள்ளே தாக்குவது ரவிமதியை யொன்றாய்க் கூட்டித் தமரான அனுவாசல் தமரி லேதான் வாக்குமன தொன்றாகி மனது கூர்ந்து வரிசையுடன் ரேசகபூரகமும் பண்ணி நாக்குநுனியமுர்தத்தை நாவில் கொண்டு நன்மையுடன் கும்பகத்தில் நாடி நில்லே . 1158 நில்லென்ற நிலையான மூல சக்தி நிசமான ஓங்காரந் தன்னில் மைந்தா சொல்லென்ற சுழுனைவளி தன்னி லேறிச் சுகமாக மேலாறுஞ்சுத்திப் பார்த்து உள்ளென்ற சிகாரமதாலுற்றுப் பார்த்து உற்றுமெல்லப் பார்க்கையிலே நந்தி காணுஞ் செல்லென்ற அகாரமதாலறிவுங்காணுஞ் சேர்ந்துமிக ஒன்றாகி ஒளிபோலாமே . 1159 ஒளியான வொளியறிந்து உற்றுப் பாரு உற்றுமெல்லப் பார்க்கையிலே நந்தி காணும் விளியான தெளிவறிந்து கண்டாயானால் வேதாந்த மூலமதிற் கனலோ மீறும் சுளியான கண்ணறிந்து வளியே சென்றால் சோதிதிருவானகேசரியாள் பாதம் வளியானதுறையறிந்து கண்டாயானால் மகஸ்த்தான மதிரவியின் காலைத் தேடே . . . 1160