சௌமிய சாகரம்

303 தானென்ற ஆணவத்தைத் தள்ள மாட்டார் சங்கையுடன் பூரணத்தைச் சார மாட்டார் ஊனென்ற சுகபோகம் ஒழிக்க மாட்டார் உறுதியுடன் சிவ்வத்தி லொடுங்க மாட்டார் பானென்ற மதியமுர்தங் கொள்ள மாட்டார் பதிவான மவுனத்தைக் காண மாட்டார் வானென்ற பொருளறிய எளிதோமைந்தா மகஸ்த்தான வாசியை நீ சுழுனைக் கேத்தே. 1145 நாகரசமெழுகு ஏத்தமுள்ளசெகசால வித்தை சொல்வேன் என்மகனே அதினாலே யொன்று மில்லை நாத்தமுள்ள கெந்தகமுஞ்சாதி லிங்கம் நன்மையுள்ள வீரமுடன் கெவுரி கூட்டிக் காத்துநன்றாயோரிடையாய் வாங்கி மைந்தா கைமுறையாய்த்தான் பொடித்துக் கரண்டி சேர்த்துப் பார்த்து நன்றாய் அடுப்பேத்தித் தீயை மூட்டப் பத்தியுடன் அஞ்சுமொன்றாய் இளகும் பாரே. 1246 பாரப்பா இளகிநின்ற குழம்புக் குள்ளே பாச்சடா நாகரசமொன்றாய்ச் சேர்த்து நேரப்பா நாகரசம் பொடித்துச் சேர்த்து நேர்மையுடன் தானெடுத்துப்பார்க்கும் போது சாரப்பா சார்ந்து ஒன்றாய் இறுகிப் போகும் சங்கையுடன் கால்வாசி தங்கம் கூட்டிக் காரப்பாகமலரச அமுர்தந் தன்னால் கல்வமதில் தானரைக்க மெழுகு மாமே. 1147 ஆமப்பாமெழுகெடுத்துப் பதனம் பண்ணி அப்பனே வெள்ளிசெம்பு சரியாய்ச் சேர்த்து நாமப்பா சொல்லுகிறோம் உருக்கி நன்றாய் நாதாந்த மெழுகெடுத்துப் பத்துக் கொன்று ஓமப்பா நின்ற பிரணவத்தினாலே உண்மையுடன் தான் கொடுத்து உருக்கிப் பார்த்தால் வாமப்பால் கொண்டகெதிக்கண்ணால் மைந்தா மகஸ்தான தங்கம்வெகு சோதி யாச்சே. 1148
303 தானென்ற ஆணவத்தைத் தள்ள மாட்டார் சங்கையுடன் பூரணத்தைச் சார மாட்டார் ஊனென்ற சுகபோகம் ஒழிக்க மாட்டார் உறுதியுடன் சிவ்வத்தி லொடுங்க மாட்டார் பானென்ற மதியமுர்தங் கொள்ள மாட்டார் பதிவான மவுனத்தைக் காண மாட்டார் வானென்ற பொருளறிய எளிதோமைந்தா மகஸ்த்தான வாசியை நீ சுழுனைக் கேத்தே . 1145 நாகரசமெழுகு ஏத்தமுள்ளசெகசால வித்தை சொல்வேன் என்மகனே அதினாலே யொன்று மில்லை நாத்தமுள்ள கெந்தகமுஞ்சாதி லிங்கம் நன்மையுள்ள வீரமுடன் கெவுரி கூட்டிக் காத்துநன்றாயோரிடையாய் வாங்கி மைந்தா கைமுறையாய்த்தான் பொடித்துக் கரண்டி சேர்த்துப் பார்த்து நன்றாய் அடுப்பேத்தித் தீயை மூட்டப் பத்தியுடன் அஞ்சுமொன்றாய் இளகும் பாரே . 1246 பாரப்பா இளகிநின்ற குழம்புக் குள்ளே பாச்சடா நாகரசமொன்றாய்ச் சேர்த்து நேரப்பா நாகரசம் பொடித்துச் சேர்த்து நேர்மையுடன் தானெடுத்துப்பார்க்கும் போது சாரப்பா சார்ந்து ஒன்றாய் இறுகிப் போகும் சங்கையுடன் கால்வாசி தங்கம் கூட்டிக் காரப்பாகமலரச அமுர்தந் தன்னால் கல்வமதில் தானரைக்க மெழுகு மாமே . 1147 ஆமப்பாமெழுகெடுத்துப் பதனம் பண்ணி அப்பனே வெள்ளிசெம்பு சரியாய்ச் சேர்த்து நாமப்பா சொல்லுகிறோம் உருக்கி நன்றாய் நாதாந்த மெழுகெடுத்துப் பத்துக் கொன்று ஓமப்பா நின்ற பிரணவத்தினாலே உண்மையுடன் தான் கொடுத்து உருக்கிப் பார்த்தால் வாமப்பால் கொண்டகெதிக்கண்ணால் மைந்தா மகஸ்தான தங்கம்வெகு சோதி யாச்சே . 1148