சௌமிய சாகரம்

144 ஆச்சப்பா சிவயோக ஞானியென்று அடங்காத வாசிசிவ யோகி யென்று மூச்சப்பா நின்றந்தக் கேசரிதானென்று முத்தியுள்ள ஞானபர தேசி யென்று பேச்சப்பா பேசாத மவுனி யென்று பேரண்டஞ் சித்திக்குங் கெவுனி யென்று பாச்சப்பா பருதிமதி சுளிமூன்றாலே பரஞான கேசரியிற் சோதி பாரே. 547 சோதியந்தக் கண்ணதிலே சோதி காணச் சுத்தமுள்ள கருமானஞ் சொல்லக் கேளு நீதியந்தப் பூதியடா திருநீர் வாங்கி நிச்செயமாய்க் கற்பூர மதின் மேல் வைத்து ஆதியந்தச் சோதியுடதீபம் பார்த்து அதின்பிறகு கற்பூரத் திருநீர் வாங்கி ஓதியந்தப் பூதிதனையுத்தளமாய்ப் பூசி உண்மையுடன் பூசையிலே சோதி யாமே. 548 ஆமென்ற கற்பூர தீப நீரை அனுதினமும் உத்தமனாய் அணிந்து கொண்டால் ஓமென்ற சிவபூசைசக்தி பூசை உருமையுடன் தினம் செபித்த பலத்துக் கொக்கும் தாமென்றும் அவனெயென்றும் வேறே இல்லை சதாகாலங்கற்பூரத்திருநீர் தன்னை நாமென்று மதம்பிடித்த நோயாளற்கு நாட்டமுடன்றான்கொடுக்க நன்மை யாமே. 549 நன்மையுள்ள பூசையடாமவுன பூசை நல்லோர்கள் அறிவார்கள் இந்தப் பூசை உண்மையுள்ள பூசையென்று மைந்தா நீயும் உரிமையுடன் அந்திசந்தி உறுதி வைத்துத் தன்மையுடன் இடதுகையில் மைந்தா நீயுஞ் சங்கையுடன் பூதிநன்றாய்ப் பிடித்து வைத்து நுண்மையுடன் கற்பூரம் அதின்மேல் வைத்து நோக்க மென்ற அறிவாலே தீப மேத்தே.
144 ஆச்சப்பா சிவயோக ஞானியென்று அடங்காத வாசிசிவ யோகி யென்று மூச்சப்பா நின்றந்தக் கேசரிதானென்று முத்தியுள்ள ஞானபர தேசி யென்று பேச்சப்பா பேசாத மவுனி யென்று பேரண்டஞ் சித்திக்குங் கெவுனி யென்று பாச்சப்பா பருதிமதி சுளிமூன்றாலே பரஞான கேசரியிற் சோதி பாரே . 547 சோதியந்தக் கண்ணதிலே சோதி காணச் சுத்தமுள்ள கருமானஞ் சொல்லக் கேளு நீதியந்தப் பூதியடா திருநீர் வாங்கி நிச்செயமாய்க் கற்பூர மதின் மேல் வைத்து ஆதியந்தச் சோதியுடதீபம் பார்த்து அதின்பிறகு கற்பூரத் திருநீர் வாங்கி ஓதியந்தப் பூதிதனையுத்தளமாய்ப் பூசி உண்மையுடன் பூசையிலே சோதி யாமே . 548 ஆமென்ற கற்பூர தீப நீரை அனுதினமும் உத்தமனாய் அணிந்து கொண்டால் ஓமென்ற சிவபூசைசக்தி பூசை உருமையுடன் தினம் செபித்த பலத்துக் கொக்கும் தாமென்றும் அவனெயென்றும் வேறே இல்லை சதாகாலங்கற்பூரத்திருநீர் தன்னை நாமென்று மதம்பிடித்த நோயாளற்கு நாட்டமுடன்றான்கொடுக்க நன்மை யாமே . 549 நன்மையுள்ள பூசையடாமவுன பூசை நல்லோர்கள் அறிவார்கள் இந்தப் பூசை உண்மையுள்ள பூசையென்று மைந்தா நீயும் உரிமையுடன் அந்திசந்தி உறுதி வைத்துத் தன்மையுடன் இடதுகையில் மைந்தா நீயுஞ் சங்கையுடன் பூதிநன்றாய்ப் பிடித்து வைத்து நுண்மையுடன் கற்பூரம் அதின்மேல் வைத்து நோக்க மென்ற அறிவாலே தீப மேத்தே .