சௌமிய சாகரம்
133)
சேர்த்துமிகத்தானுருக்க நாகந்தானும்
தீர்க்கமுடன் தானிருந்து கண்விட்டாடும்
பார்த்துமிக அந்நேரம் தங்கஞ் சேரு
பதிவான வீரமது கூடச் சேரு
காத்து நன்றாய்ச் சேர்ந்தனதநீ யெடுத்துப் பாரு
கனகமய மானகுரு களங்க தாகும்
ஆற்றுமத்துக் கரசான களங்கு தன்னை
அன்புவைத்து வெள்ளி செம்பில் அணைத்துப் பாரே.505
அணைத்துமிகத்தானுருக்கியெடுத்துப் பார்த்தால்
ஆதிமிகச் சோதியே தங்கத்தாய்தான்
நினைத்தபடி தான் கொடுக்குஞ் சோதித்தாயை
நித்தியமுஞ் சுத்தமதாய்ப் பூசை பண்ணி
மனத்தைமிகத் தானுருக்கிச் சோதி பார்த்தால்
மகத்தான வாசிசிவ யோகந் தன்னால்
சினத்துவருங்காலனவன் ஓடிப் போவான்
சிவசிவா குருபதத்தில் தெளிவாய் நில்லே. 506
நில்லப்பாஞானியண்டமுட்டைத் தோடு
நிசமான கடல்நுரையும் காரஞ் சேர்த்து
உள்ளப்பா நாதநீர் தன்னாலாட்டி
உத்தமனே சாரமதுக்கங்கி பூட்டிச்
செல்லப்பாரவிதனிலே காயவைத்துச்
சிவசிவாபுடம்போட உருகிக் கட்டும்
வில்லப்பா விசைபோலே கட்டும் சாரம்
வேதாந்த நாகமதில் கட்டும் பாரே.
பாரப்பாசவ்வீரம் வைப்புச்சொல்வேன்
பதிவான நவச்சாரமன்னபேதி
சாரப்பாகல்லுப்புச்சீனக் காரஞ்
சங்கையுள்ள வெடியுப்புத் துருசு வெள்ளை
காரப்பாசாதிலிங்கங் கெவுரிதுத்தங்
கனமானதாளகமும் எவச்சாரங்காரம்
நேரப்பா வகைக்கு ஒரு பலமுங் கூட்டி
நிசமான இடைக்கு அரை ரசமுஞ் சேரே.
508
133
)
சேர்த்துமிகத்தானுருக்க
நாகந்தானும்
தீர்க்கமுடன்
தானிருந்து
கண்விட்டாடும்
பார்த்துமிக
அந்நேரம்
தங்கஞ்
சேரு
பதிவான
வீரமது
கூடச்
சேரு
காத்து
நன்றாய்ச்
சேர்ந்தனதநீ
யெடுத்துப்
பாரு
கனகமய
மானகுரு
களங்க
தாகும்
ஆற்றுமத்துக்
கரசான
களங்கு
தன்னை
அன்புவைத்து
வெள்ளி
செம்பில்
அணைத்துப்
பாரே
.
505
அணைத்துமிகத்தானுருக்கியெடுத்துப்
பார்த்தால்
ஆதிமிகச்
சோதியே
தங்கத்தாய்தான்
நினைத்தபடி
தான்
கொடுக்குஞ்
சோதித்தாயை
நித்தியமுஞ்
சுத்தமதாய்ப்
பூசை
பண்ணி
மனத்தைமிகத்
தானுருக்கிச்
சோதி
பார்த்தால்
மகத்தான
வாசிசிவ
யோகந்
தன்னால்
சினத்துவருங்காலனவன்
ஓடிப்
போவான்
சிவசிவா
குருபதத்தில்
தெளிவாய்
நில்லே
.
506
நில்லப்பாஞானியண்டமுட்டைத்
தோடு
நிசமான
கடல்நுரையும்
காரஞ்
சேர்த்து
உள்ளப்பா
நாதநீர்
தன்னாலாட்டி
உத்தமனே
சாரமதுக்கங்கி
பூட்டிச்
செல்லப்பாரவிதனிலே
காயவைத்துச்
சிவசிவாபுடம்போட
உருகிக்
கட்டும்
வில்லப்பா
விசைபோலே
கட்டும்
சாரம்
வேதாந்த
நாகமதில்
கட்டும்
பாரே
.
பாரப்பாசவ்வீரம்
வைப்புச்சொல்வேன்
பதிவான
நவச்சாரமன்னபேதி
சாரப்பாகல்லுப்புச்சீனக்
காரஞ்
சங்கையுள்ள
வெடியுப்புத்
துருசு
வெள்ளை
காரப்பாசாதிலிங்கங்
கெவுரிதுத்தங்
கனமானதாளகமும்
எவச்சாரங்காரம்
நேரப்பா
வகைக்கு
ஒரு
பலமுங்
கூட்டி
நிசமான
இடைக்கு
அரை
ரசமுஞ்
சேரே
.
508