சௌமிய சாகரம்

87 தானேதானாகிநின்ற எழுவர் தானுந் தனித்து நின்ற பராபரமாஞ்சுளியினுள்ளே வானேதான் கெதியெனவே சகல சித்தும் வருந்திவிளையாடிமிக வானமுட்டி ஊனேதானெனவேமுப்பாழுக்கப்பால் ஒடுங்கிநின்ற பாழ்வீட்டுக்குள்ளே சென்று நானேதான் நீயெனவே அந்த காரம் ! நலமான இருளருளில் நாட்டம் பாரே! பாரப்பா இருளொளியும் வெளிமூன் றய்யா பதிவான தேகமதில் கண்டு கொள்ளு சாரப்பா இம்மூன்றின் நிலையைச் சொல்வேன் சரீரமென்ற சத்தியடா இருள்தானப்பா நேரப்பா ஒளிவான அறிவின் கண்ணு நிசமான வெளியதுதான் மாயா மாயம் காரப்பா மாய்கைவெளிகண்ணே சூட்சங் கருவான கண்மறைந்தாலிருள்தான் காணே! 225 காணப்பா இருளதினால் ஒளிதான் தோற்றங் கருவான ஒளியதனால் வெளிதான் தோற்றம் பேணப்பாவெளிஒளியும் எதனாலாச்சு? பெருகிநின்ற இருளதிலே உண்டாச் சப்பா! ஊணப்பாதானொடுங்கும் வகையைக் கேளு உத்தமனே வெளியதுவும் ஒளியிற் சேரும் பூணப்பா ஒளியதுவு மிருளிற் சேரும் புத்தியுடன் கண்டறிவாய் தன்னுள்தானே! 26 தன்னுள்ளேதானறிந்து தன்னைப் பார்க்கத் தனதான மண்டலங்கள் மூன்றினுள்ளே விண்ணுள்ளே முச்சுடரைக் கண்டு அந்த வேதாந்த முச்சுடரின் ஒளியைப் பார்க்கில் கண்ணுள்ளே வெளிதனிலே தன்னைக் கண்டேன் கருணைவளர் ஒளிதனிலே தன்னைக் கண்டேன் என்னுள்ளே இருள்தனிலே நின்று பார்க்கில் ஏகநிராமயமான அருள்தானாச்சே!
87 தானேதானாகிநின்ற எழுவர் தானுந் தனித்து நின்ற பராபரமாஞ்சுளியினுள்ளே வானேதான் கெதியெனவே சகல சித்தும் வருந்திவிளையாடிமிக வானமுட்டி ஊனேதானெனவேமுப்பாழுக்கப்பால் ஒடுங்கிநின்ற பாழ்வீட்டுக்குள்ளே சென்று நானேதான் நீயெனவே அந்த காரம் ! நலமான இருளருளில் நாட்டம் பாரே ! பாரப்பா இருளொளியும் வெளிமூன் றய்யா பதிவான தேகமதில் கண்டு கொள்ளு சாரப்பா இம்மூன்றின் நிலையைச் சொல்வேன் சரீரமென்ற சத்தியடா இருள்தானப்பா நேரப்பா ஒளிவான அறிவின் கண்ணு நிசமான வெளியதுதான் மாயா மாயம் காரப்பா மாய்கைவெளிகண்ணே சூட்சங் கருவான கண்மறைந்தாலிருள்தான் காணே ! 225 காணப்பா இருளதினால் ஒளிதான் தோற்றங் கருவான ஒளியதனால் வெளிதான் தோற்றம் பேணப்பாவெளிஒளியும் எதனாலாச்சு ? பெருகிநின்ற இருளதிலே உண்டாச் சப்பா ! ஊணப்பாதானொடுங்கும் வகையைக் கேளு உத்தமனே வெளியதுவும் ஒளியிற் சேரும் பூணப்பா ஒளியதுவு மிருளிற் சேரும் புத்தியுடன் கண்டறிவாய் தன்னுள்தானே ! 26 தன்னுள்ளேதானறிந்து தன்னைப் பார்க்கத் தனதான மண்டலங்கள் மூன்றினுள்ளே விண்ணுள்ளே முச்சுடரைக் கண்டு அந்த வேதாந்த முச்சுடரின் ஒளியைப் பார்க்கில் கண்ணுள்ளே வெளிதனிலே தன்னைக் கண்டேன் கருணைவளர் ஒளிதனிலே தன்னைக் கண்டேன் என்னுள்ளே இருள்தனிலே நின்று பார்க்கில் ஏகநிராமயமான அருள்தானாச்சே !