சௌமிய சாகரம்

60 உச்சாடனம் பாரப்பாதம்பனத்தைச் சொன்னேன்மைந்தா பதிவான உச்சாடணத்தைப் பகரக் கேளு நேரப்பா தென்திசையை நோக்கி மைந்தா நேர்மையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி காரப்பா படந்தாள் ஆசனமேற் கொண்டு கருணையுடன் சங்குமணி கையில் வாங்கிச் சாரப்பாசத்திகணபதியின் சூட்சம் தன்மையுடன் ஓம், கிலி, யுஞ், சவ், வென் றெண்ணே !226 எண்ணியே ஆயிரத்தெண்ணுருவே செய்தால் ஏகாந்த சத்திகணபதியினாலே உன்னியே சாடனம்தான்மைந்தாமைந்தா உறுதியுடன் சித்துமய மாகும் பாரு நண்ணியே சாடனந்தான் சித்தி யானால் நாதாந்தப் புலத்தியனே சொல்லக் கேளு நுண்ணிமையாய்க் கண்டதெல்லா மூச்சாடிக்கு நோக்குமனக் கண்ணதினால் தன்னைப் பாரே. 227 பாரப்பா பார்தனிலே யிருந்து கொண்டு பத்தியுடன் சிவயோகத் திருக்கும் போது வீரப்பா கொண்டதொரு நோய்க ளெல்லாம் வீசமுடனே பில்லிசூனியங்க ளெல்லாம் நேரப்பாசாடனத்தாற் காணாதோடும் நீடுலகில் சகலசித்து மாடலாகும் தேரப்பாசத்திகண பதியி னாலே தீர்க்கமுடன் சாடனந்தான் சித்தியாமே. 228
60 உச்சாடனம் பாரப்பாதம்பனத்தைச் சொன்னேன்மைந்தா பதிவான உச்சாடணத்தைப் பகரக் கேளு நேரப்பா தென்திசையை நோக்கி மைந்தா நேர்மையுடன் விபூதி உத்தளமாய்ப் பூசி காரப்பா படந்தாள் ஆசனமேற் கொண்டு கருணையுடன் சங்குமணி கையில் வாங்கிச் சாரப்பாசத்திகணபதியின் சூட்சம் தன்மையுடன் ஓம் கிலி யுஞ் சவ் வென் றெண்ணே ! 226 எண்ணியே ஆயிரத்தெண்ணுருவே செய்தால் ஏகாந்த சத்திகணபதியினாலே உன்னியே சாடனம்தான்மைந்தாமைந்தா உறுதியுடன் சித்துமய மாகும் பாரு நண்ணியே சாடனந்தான் சித்தி யானால் நாதாந்தப் புலத்தியனே சொல்லக் கேளு நுண்ணிமையாய்க் கண்டதெல்லா மூச்சாடிக்கு நோக்குமனக் கண்ணதினால் தன்னைப் பாரே . 227 பாரப்பா பார்தனிலே யிருந்து கொண்டு பத்தியுடன் சிவயோகத் திருக்கும் போது வீரப்பா கொண்டதொரு நோய்க ளெல்லாம் வீசமுடனே பில்லிசூனியங்க ளெல்லாம் நேரப்பாசாடனத்தாற் காணாதோடும் நீடுலகில் சகலசித்து மாடலாகும் தேரப்பாசத்திகண பதியி னாலே தீர்க்கமுடன் சாடனந்தான் சித்தியாமே . 228