சௌமிய சாகரம்

ஓதடா ஆயிரத்தெண்ணுருவே செய்தால் உண்மையென்ற ஆதிகண பதிதான்மைந்தா நீதமுட னுனதிடத்தில் நின்று கொண்டு நீ நினைத்த காரியங்கள் வசியஞ் செய்வாய் பேதமென்ற பேதமெல்லாம் வசிய மாகும் பேரண்டஞ்சித்தண்டம் வசிய மாகும் வேதமென்ற வேதமொடு சாஸ்த்தி ரங்கள் விளங்கிநின்ற மந்திரங்கள் வசிய மாமே. 218 ஆமப்பாதேவரொடு முனிவர் தானும் அடங்காத பிசாசுமுதற் சத்து ருக்கள் ஓமப்பா மிருகமுதல் அஷ்ட நாகம் ஒடுங்காத பட்சிமுதற் சகல மெல்லாம் தாமப்பா ஆதிகணபதியின் சூட்சம் தன்மையுடன் தியானித்துத்தானே நின்றால் காமப்பால் காணப்பால் வசிய தாகிக் கருணையுடன் சகலமுமே வசியங்காணே. 219 மோகனம் காணவே வசீகரத்தின் மூலஞ் சொன்னேன் கணக்காண மோகனத்தின்கருணை கேளு பேணவே கீழ்த்திசையை நோக்கி மைந்தா பிரணவத்தால் விபூதி உத்தாளமாய்ப் பூசித் தோணவே வெண்புலியாசனமேற் கொண்டு சுத்தமென்ற துளசிமணிகையில் வாங்கிப் பூணவே செபிப்பதற்கு மந்திரங் கேளு பொருந்துமகாகணபதியின் சூட்சந்தானே! 220 தானென்ற சூட்சமது சொல்லக் கேளு சங்கையுடன் ஓங்கிலிசிங்கென்றேதான் வானென்ற குருபதியில் நின்று கொண்டு மார்க்கமுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் கோனென்ற மகாகணபதி தானமைந்தா குருவான இருதயத்தில் பிரகாசிப் பார்கள் ஊனென்ற இருதயத்தில் பிரகாசித்தால் உத்தமனே சகலமுமோகனந்தான் பாரே! 221
ஓதடா ஆயிரத்தெண்ணுருவே செய்தால் உண்மையென்ற ஆதிகண பதிதான்மைந்தா நீதமுட னுனதிடத்தில் நின்று கொண்டு நீ நினைத்த காரியங்கள் வசியஞ் செய்வாய் பேதமென்ற பேதமெல்லாம் வசிய மாகும் பேரண்டஞ்சித்தண்டம் வசிய மாகும் வேதமென்ற வேதமொடு சாஸ்த்தி ரங்கள் விளங்கிநின்ற மந்திரங்கள் வசிய மாமே . 218 ஆமப்பாதேவரொடு முனிவர் தானும் அடங்காத பிசாசுமுதற் சத்து ருக்கள் ஓமப்பா மிருகமுதல் அஷ்ட நாகம் ஒடுங்காத பட்சிமுதற் சகல மெல்லாம் தாமப்பா ஆதிகணபதியின் சூட்சம் தன்மையுடன் தியானித்துத்தானே நின்றால் காமப்பால் காணப்பால் வசிய தாகிக் கருணையுடன் சகலமுமே வசியங்காணே . 219 மோகனம் காணவே வசீகரத்தின் மூலஞ் சொன்னேன் கணக்காண மோகனத்தின்கருணை கேளு பேணவே கீழ்த்திசையை நோக்கி மைந்தா பிரணவத்தால் விபூதி உத்தாளமாய்ப் பூசித் தோணவே வெண்புலியாசனமேற் கொண்டு சுத்தமென்ற துளசிமணிகையில் வாங்கிப் பூணவே செபிப்பதற்கு மந்திரங் கேளு பொருந்துமகாகணபதியின் சூட்சந்தானே ! 220 தானென்ற சூட்சமது சொல்லக் கேளு சங்கையுடன் ஓங்கிலிசிங்கென்றேதான் வானென்ற குருபதியில் நின்று கொண்டு மார்க்கமுடன் ஆயிரத்தெண்ணுருவே செய்தால் கோனென்ற மகாகணபதி தானமைந்தா குருவான இருதயத்தில் பிரகாசிப் பார்கள் ஊனென்ற இருதயத்தில் பிரகாசித்தால் உத்தமனே சகலமுமோகனந்தான் பாரே ! 221