சௌமிய சாகரம்

57 அறிந்து கொண்டு ஆதாரம் நன்றாய்ப் பார்த்து ஆதியென்ற பற்பமொடு சுண்ணம் ரெண்டும் வருந்துமனக் கணிவதனாற் செய்து மைந்தா வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரு தெரிந்து செடந்தானறிந்து யோகம் பார்க்கத் தீர்க்கமுள்ள மார்க்கமொன்று செப்பக் கேளு பொருந்தி நின்ற அஷ்டகர்மம் சித்துப் பெற்றால் பூரணமாயஷ்டாங்க யோக மாமே. 214 யோகமென்ற அஷ்டாங்க யோகம் பார்க்க உத்தமனே அஷ்டகர்ம சித்துக் கேளு ஆகமென்ற தேகநவக்கிரக மாச்சு ஆதியென்ற அனுக்கிரக முடிவில் நின்று பாகமென்ற ஆதார மூலந்தன்னைப் பத்தி கொண்டு ஊடுருவிப் பார்க்கும் போது ஏகமென்ற அட்சரத்தி னாட்டே யல்லால் என்மகனே மற்றதெல்லாந்தூலங் காணே. 215 காணவே தூலமுடன் சூட்சங் கண்டால் காரணமாய்ச் சென்றுவிளை யாடலாகும் பூணவே நின்று விளையாடு தற்குப் புத்தியுடன் அஷ்டகர்மம் சித்துக் கேளு தோணவே அஷ்டகர்மசித்துக் காணச் சொல்லுகிறேன் வசீகரத்தின் சூட்சந்தன்னை ஊணவே தானிருந்து மூலம் பார்த்து உரிமையுடன் குருபதியை உகந்து காணே. 216 வசியம் உகந்துகொண்டு வசீகரத்தின் சூட்சங் கேளு உத்தமனே வடதிசையை நோக்கி மைந்தா அகந்தெளிய விபூதி உத் தளமாய்ப் பூசி யானகலை யாசனமேல் இருந்து கொண்டு முகந்தெளிந்த ருத்திராட்ச மணியை வாங்கி முத்திபெற ஆதிகண பதியை நன்றாய்ச் செகந்தெளியச் செபிப்பதற்கு மந்திரங் கேளு சிவசிவா ஓம்றீங் அங்கென்றோதே. 217
57 அறிந்து கொண்டு ஆதாரம் நன்றாய்ப் பார்த்து ஆதியென்ற பற்பமொடு சுண்ணம் ரெண்டும் வருந்துமனக் கணிவதனாற் செய்து மைந்தா வகையுடனே அஷ்டாங்க யோகம் பாரு தெரிந்து செடந்தானறிந்து யோகம் பார்க்கத் தீர்க்கமுள்ள மார்க்கமொன்று செப்பக் கேளு பொருந்தி நின்ற அஷ்டகர்மம் சித்துப் பெற்றால் பூரணமாயஷ்டாங்க யோக மாமே . 214 யோகமென்ற அஷ்டாங்க யோகம் பார்க்க உத்தமனே அஷ்டகர்ம சித்துக் கேளு ஆகமென்ற தேகநவக்கிரக மாச்சு ஆதியென்ற அனுக்கிரக முடிவில் நின்று பாகமென்ற ஆதார மூலந்தன்னைப் பத்தி கொண்டு ஊடுருவிப் பார்க்கும் போது ஏகமென்ற அட்சரத்தி னாட்டே யல்லால் என்மகனே மற்றதெல்லாந்தூலங் காணே . 215 காணவே தூலமுடன் சூட்சங் கண்டால் காரணமாய்ச் சென்றுவிளை யாடலாகும் பூணவே நின்று விளையாடு தற்குப் புத்தியுடன் அஷ்டகர்மம் சித்துக் கேளு தோணவே அஷ்டகர்மசித்துக் காணச் சொல்லுகிறேன் வசீகரத்தின் சூட்சந்தன்னை ஊணவே தானிருந்து மூலம் பார்த்து உரிமையுடன் குருபதியை உகந்து காணே . 216 வசியம் உகந்துகொண்டு வசீகரத்தின் சூட்சங் கேளு உத்தமனே வடதிசையை நோக்கி மைந்தா அகந்தெளிய விபூதி உத் தளமாய்ப் பூசி யானகலை யாசனமேல் இருந்து கொண்டு முகந்தெளிந்த ருத்திராட்ச மணியை வாங்கி முத்திபெற ஆதிகண பதியை நன்றாய்ச் செகந்தெளியச் செபிப்பதற்கு மந்திரங் கேளு சிவசிவா ஓம்றீங் அங்கென்றோதே . 217