சௌமிய சாகரம்

315 சொர்க்கபத மதில்நின்று வொளியை மைந்தா தூண்டியந்தக் குருவதனைச் சூட்சஞ் செய்து சொர்க்கபதந்தனைப்பாரு வாசி யோகம் சூடப்பா லகிரியொடு குளிகை கொண்டு சொர்க்கபதந் தெரிசனையா யூடுங் கூத்தைத் தொடுகுறிபோல் நடனமிட்ட கூத்துக் காணும் சொர்க்கபதங் குருவினுட பாதங் கண்டால் தூலம்போங்காயமதில் வாசி சாத்தே. 1192 சாத்துறேன் வாசியுட கருவைக் கேளு தற்பரமாஞ்சுளினையிலே சரத்தை யூன்றி நேத்திரமே பிறியாமல் நோக்கிப் பார்க்கில் நிலையற்ற புரியஷ்ட முள்ளாய் நிற்கும் ஆத்துறேன் பூரணந்தானாலு மைந்தா அப்பனே வெளியோடி யுள்ளே பாயு மாத்துறேன் பூரணத்தை மவுனந்தாக்க மகஸ்த்தான சிவயோக வரிசைபாரே. 1193 பாருநீ யிப்படியே வாசி யோகம் பார்க்கையிலே மவுனமது பிலக்குஞ் சித்தி காருநீ சூடுகொண்டாலுள்ளங்காலில் கலசப்பால் பூரணமுங் கலந்து பூச சேருநீ புளியாரை கொடுப்பை வெந்து சிறப்பாக மிளகுசார்தினமுங் கொள்ளு சாருநீதலைமுழுக வகையைக் கேளு தனிமிளகு அமுரிதனிலரைத்துக் காணே. 1194 காணவே யமுரிதனில் மிளக ரைத்துக் கருணையுடன்தான்குழைத்துத் தலையில் தேய்த்துப் பேணவே வெந்நீரால் முழுகு மைந்தா பெரிதான கபாலத்தின் தோஷந் தீரும் பூணவே கண்ணெரிவு கபாலக் குத்து புத்தியுடன் தீருமடா புத்தி யாகத் தோணவே கண்மூடிக் கண்ணைப் பாரு சுத்தமுடனிருகண்ணுஞ் சோதி கேளே. 1195
315 சொர்க்கபத மதில்நின்று வொளியை மைந்தா தூண்டியந்தக் குருவதனைச் சூட்சஞ் செய்து சொர்க்கபதந்தனைப்பாரு வாசி யோகம் சூடப்பா லகிரியொடு குளிகை கொண்டு சொர்க்கபதந் தெரிசனையா யூடுங் கூத்தைத் தொடுகுறிபோல் நடனமிட்ட கூத்துக் காணும் சொர்க்கபதங் குருவினுட பாதங் கண்டால் தூலம்போங்காயமதில் வாசி சாத்தே . 1192 சாத்துறேன் வாசியுட கருவைக் கேளு தற்பரமாஞ்சுளினையிலே சரத்தை யூன்றி நேத்திரமே பிறியாமல் நோக்கிப் பார்க்கில் நிலையற்ற புரியஷ்ட முள்ளாய் நிற்கும் ஆத்துறேன் பூரணந்தானாலு மைந்தா அப்பனே வெளியோடி யுள்ளே பாயு மாத்துறேன் பூரணத்தை மவுனந்தாக்க மகஸ்த்தான சிவயோக வரிசைபாரே . 1193 பாருநீ யிப்படியே வாசி யோகம் பார்க்கையிலே மவுனமது பிலக்குஞ் சித்தி காருநீ சூடுகொண்டாலுள்ளங்காலில் கலசப்பால் பூரணமுங் கலந்து பூச சேருநீ புளியாரை கொடுப்பை வெந்து சிறப்பாக மிளகுசார்தினமுங் கொள்ளு சாருநீதலைமுழுக வகையைக் கேளு தனிமிளகு அமுரிதனிலரைத்துக் காணே . 1194 காணவே யமுரிதனில் மிளக ரைத்துக் கருணையுடன்தான்குழைத்துத் தலையில் தேய்த்துப் பேணவே வெந்நீரால் முழுகு மைந்தா பெரிதான கபாலத்தின் தோஷந் தீரும் பூணவே கண்ணெரிவு கபாலக் குத்து புத்தியுடன் தீருமடா புத்தி யாகத் தோணவே கண்மூடிக் கண்ணைப் பாரு சுத்தமுடனிருகண்ணுஞ் சோதி கேளே . 1195