சௌமிய சாகரம்

299 காணவே அகாரமது உகாரத்தைக் கொள்ளும் கருவான உகாரமது மகாரத்தைக் கொள்ளும் பூணவே மகாரமது விந்துவைத்தான் கொள்ளும் பொருந்திநின்ற விந்துவது நாதத்தைக் கொள்ளும் தோணவே நாதமது சத்தியைத்தான் கொள்ளும் சுகமான சத்தியல்லோசிவத்தைக் கொள்ளும் பேணவே சிவன்தன்னைப் பரந்தான் கொள்ளும் பெரிதான பரஞ்சென்ற இடத்தைப் பாரே. 1129 பாரப்பா மூலமுதலாறும் பாரு பதிவானசுழுமுனையையறிந்து கொண்டு சாரப்பாசாம்பவியைத் தானே கண்டு தன்மையுடன் தானறிந்து தானே நின்றால் காரப்பா வாழ்வுசிவயோக வாழ்க்கை கதிர்மதியு மானவிடம் யோக மாச்சு நேரப்பா நின்ற இடங் கண்டால் யோகி நிசமான கேசரியைக் கண்டு பாரே. 1130 கண்டுபார்லகிரியுண்ண மேலே யேறும் காணாமல் லகிரிவிட்டால் கீழே பாயும் உண்டுபார் குளிகையிட்டாற் சினத்துக் குள்ளே ஊடுருவிக் கடந்தேறி ஒளியுங் காணும் அண்டமொடு புவனமதைக் கண்டாயானால் ஆதிவஸ்தும் அனாதிவஸ்து மொன்றாய்க் காணும் நின்றுவளர் சற்குணத்தின் அமுத மள்ளி நிசமான ஞானசத்தி யூட்டு வானே. 1131 ஊட்டினதோர் தாடைவிட்டாலுறவு முண்டே உலகத்திற் பூரணியைத் தூஷிப் பார்கள் ஆட்டினதோர் திரேதாயிதானே நின்று ஆகாத மாய்கையிலே யமிழ்த்தி மாட்டி மாட்டினதோர் ஞானமெல்லாம் மயக்கித் தள்ளி மகஸ்த்தான காமமென்ற வலையைப் போட்டால் நீட்டினதோர் போதமதால் ஞான மாச்சு நிலையறிந்து நின்றவர்கள் வாசி பாரே. 1132
299 காணவே அகாரமது உகாரத்தைக் கொள்ளும் கருவான உகாரமது மகாரத்தைக் கொள்ளும் பூணவே மகாரமது விந்துவைத்தான் கொள்ளும் பொருந்திநின்ற விந்துவது நாதத்தைக் கொள்ளும் தோணவே நாதமது சத்தியைத்தான் கொள்ளும் சுகமான சத்தியல்லோசிவத்தைக் கொள்ளும் பேணவே சிவன்தன்னைப் பரந்தான் கொள்ளும் பெரிதான பரஞ்சென்ற இடத்தைப் பாரே . 1129 பாரப்பா மூலமுதலாறும் பாரு பதிவானசுழுமுனையையறிந்து கொண்டு சாரப்பாசாம்பவியைத் தானே கண்டு தன்மையுடன் தானறிந்து தானே நின்றால் காரப்பா வாழ்வுசிவயோக வாழ்க்கை கதிர்மதியு மானவிடம் யோக மாச்சு நேரப்பா நின்ற இடங் கண்டால் யோகி நிசமான கேசரியைக் கண்டு பாரே . 1130 கண்டுபார்லகிரியுண்ண மேலே யேறும் காணாமல் லகிரிவிட்டால் கீழே பாயும் உண்டுபார் குளிகையிட்டாற் சினத்துக் குள்ளே ஊடுருவிக் கடந்தேறி ஒளியுங் காணும் அண்டமொடு புவனமதைக் கண்டாயானால் ஆதிவஸ்தும் அனாதிவஸ்து மொன்றாய்க் காணும் நின்றுவளர் சற்குணத்தின் அமுத மள்ளி நிசமான ஞானசத்தி யூட்டு வானே . 1131 ஊட்டினதோர் தாடைவிட்டாலுறவு முண்டே உலகத்திற் பூரணியைத் தூஷிப் பார்கள் ஆட்டினதோர் திரேதாயிதானே நின்று ஆகாத மாய்கையிலே யமிழ்த்தி மாட்டி மாட்டினதோர் ஞானமெல்லாம் மயக்கித் தள்ளி மகஸ்த்தான காமமென்ற வலையைப் போட்டால் நீட்டினதோர் போதமதால் ஞான மாச்சு நிலையறிந்து நின்றவர்கள் வாசி பாரே . 1132