சௌமிய சாகரம்

298 மாண்டுதான் போகாமல் தெளிவ தெப்போ? மகஸ்தான அறிவதிலே வாழ்வ தெப்போ? பூண்டுகொண்ட ஆசையது ஒழிவ தெப்போ? பொல்லாத மாய்கைவிட்டு நிற்ப தெப்போ? ஆண்டுகொண்ட காமவலையறுப்ப தெப்போ? அலைச்சலற்று இருப்பதெப்போ? அய்யா அய்யா! தாண்டியந்தக் கேசரியில் மனதை நாட்டிச் சதானந்த போதமதாய் மூலம் பாரே. 1125 பாரப்பா ஆறுதலங்கண்டு தேறிப் பதிவான மேலாறில் சென்று புக்கிக் காரப்பாசுழுமுனையிற் கலந்து கூடிக் கருணையுள்ள மனோன்மணியைக் கண்டு போற்றி நேரப்பா மவுனமென்ற கேசரியிற் சென்று நீமகனே பராபரத்தில் நேர்ந்து கொண்டால் சாரப்பா பிறப்பிறப்புத்தவிர்ந்து போகும் சதாபோத பிரணவஓம்காரங்காணே. 1126 காணப்பா பிரணவங்கொண்டிருந்த மூலங் கருணைவளர் பஞ்சகர்த்தா இருந்த வீடு பூணப்பா அவ்வீட்டில் மனக்கண் கொண்டால் பொருளான அகாரமுதல் உகாரங்காணும் ஊணப்பா மகாரமொடு விந்து நாதம் உண்மையுடன் தானிருக்கு மறிவானந்தம் பேணப்பா அறிவான மவுனத் தேகில் பிலமான போதமது பிலக்கும் பாரே. 1127 பிலமான ஓங்கார மண்ணையுண்ணும் பெருகிநின்ற மண்ணதுவுஞ் சிலத்தை யுண்ணும் குலமான சிலமதுதான் தீயை யுண்ணும் கொடிதான தீச்சென்று வாய்வை யுண்ணும் சலமான வாய்வதுதான் விண்ணையுண்ணும் சங்கையுள்ள செடமதுதான் தானே போச்சு தலமான தலமறிந்து தன்னைக் கண்டு சந்திரகலை யமுர்தமதைக் கொண்டு காணே. 1128
298 மாண்டுதான் போகாமல் தெளிவ தெப்போ ? மகஸ்தான அறிவதிலே வாழ்வ தெப்போ ? பூண்டுகொண்ட ஆசையது ஒழிவ தெப்போ ? பொல்லாத மாய்கைவிட்டு நிற்ப தெப்போ ? ஆண்டுகொண்ட காமவலையறுப்ப தெப்போ ? அலைச்சலற்று இருப்பதெப்போ ? அய்யா அய்யா ! தாண்டியந்தக் கேசரியில் மனதை நாட்டிச் சதானந்த போதமதாய் மூலம் பாரே . 1125 பாரப்பா ஆறுதலங்கண்டு தேறிப் பதிவான மேலாறில் சென்று புக்கிக் காரப்பாசுழுமுனையிற் கலந்து கூடிக் கருணையுள்ள மனோன்மணியைக் கண்டு போற்றி நேரப்பா மவுனமென்ற கேசரியிற் சென்று நீமகனே பராபரத்தில் நேர்ந்து கொண்டால் சாரப்பா பிறப்பிறப்புத்தவிர்ந்து போகும் சதாபோத பிரணவஓம்காரங்காணே . 1126 காணப்பா பிரணவங்கொண்டிருந்த மூலங் கருணைவளர் பஞ்சகர்த்தா இருந்த வீடு பூணப்பா அவ்வீட்டில் மனக்கண் கொண்டால் பொருளான அகாரமுதல் உகாரங்காணும் ஊணப்பா மகாரமொடு விந்து நாதம் உண்மையுடன் தானிருக்கு மறிவானந்தம் பேணப்பா அறிவான மவுனத் தேகில் பிலமான போதமது பிலக்கும் பாரே . 1127 பிலமான ஓங்கார மண்ணையுண்ணும் பெருகிநின்ற மண்ணதுவுஞ் சிலத்தை யுண்ணும் குலமான சிலமதுதான் தீயை யுண்ணும் கொடிதான தீச்சென்று வாய்வை யுண்ணும் சலமான வாய்வதுதான் விண்ணையுண்ணும் சங்கையுள்ள செடமதுதான் தானே போச்சு தலமான தலமறிந்து தன்னைக் கண்டு சந்திரகலை யமுர்தமதைக் கொண்டு காணே . 1128