சௌமிய சாகரம்

295 கபசத்துருகரிசாலை நெய் தானென்ற சுழுனைவளிகண்டு ஏறச் சாதகமாய் இன்னமொரு பாகங் கேளு வீணென்ற கபமகல மைந்தா கேளு விபரமுடன்கரிசாலைச்சாறு வாங்கிச் கோனென்ற குருவருளால் ஆவின் நெய்யைக் கூர்மையுடன் இடைசரியாய்க் கலந்து காய்ச்சி நானென்ற ஆணவத்தை யகலத் தள்ளி நன்மையுடன் நெய்யதனை வடித்துக் கொள்ளே.1113 வடித்ததொரு நெய்யதனைமைந்தா கேளு மார்க்கமுடன் தற்சனையு மத்திமையுங் கூட்டிக் கடுத்ததொரு நெய்யதனைத் தொட்டு நீயும் கண்டமதிற் சுத்திவிடு கபநீ ரெல்லாம் தொடுத்துமிகத்தான்வடித்து சுத்த மாகும் சுத்தமுடன் மண்டலம்நீ தொகுத்துப் பார்த்தால் பிடித்தகபக்கட்டறுத்து ஆறாதாரம் பெரிதானதூலமது சூட்சமாச்சே. 1114 ஆச்சப்பாசூட்சமதாய் இருந்து கொண்டு அப்பனே கரிசாலை நெய்யில் மைந்தா பாச்சப்பாபெருவிரலில் தோய்த்து அந்தப் பதிவான அண்ணாக்கைப் பதிவாய்ச்சுத்து காச்சப்பா இப்படியே பத்துவிசைசுத்து கபாடமதில் நின்றகபங் கழன்று போகும் மூச்சப்பா ஒடுங்கிநின்ற அண்ட வாசல் மூடிநின்ற திரையகன்று வழிசெல் வாரே. 1115 வழியான சுழுனைவளி கபாட வாசல் வங்குசிங்கு சுழுனைவளி வாசற் குள்ளே தெளியாமல் வாசிசர மதிலே பாய நிசமான புலத்தியனே சொல்லக் கேளு சலியாமற் சுகாசமனாயிருந்து கொண்டு தற்சனையு மத்திமையுந்தானே சேர்த்து அளியாத பேரின்ப வீட்டைப் பத்தி அண்ணாக்கை உண்ணாக்குள் அடக்கம் பண்ணே.1116
295 கபசத்துருகரிசாலை நெய் தானென்ற சுழுனைவளிகண்டு ஏறச் சாதகமாய் இன்னமொரு பாகங் கேளு வீணென்ற கபமகல மைந்தா கேளு விபரமுடன்கரிசாலைச்சாறு வாங்கிச் கோனென்ற குருவருளால் ஆவின் நெய்யைக் கூர்மையுடன் இடைசரியாய்க் கலந்து காய்ச்சி நானென்ற ஆணவத்தை யகலத் தள்ளி நன்மையுடன் நெய்யதனை வடித்துக் கொள்ளே . 1113 வடித்ததொரு நெய்யதனைமைந்தா கேளு மார்க்கமுடன் தற்சனையு மத்திமையுங் கூட்டிக் கடுத்ததொரு நெய்யதனைத் தொட்டு நீயும் கண்டமதிற் சுத்திவிடு கபநீ ரெல்லாம் தொடுத்துமிகத்தான்வடித்து சுத்த மாகும் சுத்தமுடன் மண்டலம்நீ தொகுத்துப் பார்த்தால் பிடித்தகபக்கட்டறுத்து ஆறாதாரம் பெரிதானதூலமது சூட்சமாச்சே . 1114 ஆச்சப்பாசூட்சமதாய் இருந்து கொண்டு அப்பனே கரிசாலை நெய்யில் மைந்தா பாச்சப்பாபெருவிரலில் தோய்த்து அந்தப் பதிவான அண்ணாக்கைப் பதிவாய்ச்சுத்து காச்சப்பா இப்படியே பத்துவிசைசுத்து கபாடமதில் நின்றகபங் கழன்று போகும் மூச்சப்பா ஒடுங்கிநின்ற அண்ட வாசல் மூடிநின்ற திரையகன்று வழிசெல் வாரே . 1115 வழியான சுழுனைவளி கபாட வாசல் வங்குசிங்கு சுழுனைவளி வாசற் குள்ளே தெளியாமல் வாசிசர மதிலே பாய நிசமான புலத்தியனே சொல்லக் கேளு சலியாமற் சுகாசமனாயிருந்து கொண்டு தற்சனையு மத்திமையுந்தானே சேர்த்து அளியாத பேரின்ப வீட்டைப் பத்தி அண்ணாக்கை உண்ணாக்குள் அடக்கம் பண்ணே . 1116