சௌமிய சாகரம்

271 காணவே அரூபமென்ற தெரிசனந்தானொன்று கயிலாச சாயுச்சிய தெரிசனந்தானொன்று தோணவே தெரிசனங்கள் பதினாறு தன்னைச் சுத்தமுடன் சற்குருவின் கடாட்சத்தாலே ஊணவே யந்தநிலை யூணிப் பார்த்து உண்மையுடன் தன்னிலையில் தன்னைக் கண்டு பூணவே யிகபரசாதனத்துக் கெல்லாம் பொருந்திமனம் பூரணமாய் வாழ்வாய் பாரே. 1024 பாரப்பா தெரிசனங்கள் பதினாறு தன்னைப் பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்க்காண நேரப்பா சொல்லுகிறேன் மூலாதாரம் நேர்மையுள்ள தன்னறிவாய் நிலையைக் காணச் சாரப்பா ஆதாரமேலாதாரம் சகலகலை வாசமடா மூலாதாரம் காரப்பா அடிமூலாதாரத்துள்ளே கருணையுடன் ஓமென்று இங்கென் றூணே. 1025 ஊணவே வாசிதனை மூலந்தன்னில் ஓமென்ற தானிருத்தி யுறுதி கொண்டு பேணவே யிங்கென்று மவுனம் பூட்டிப் பெருமையுடன் ஓம் அங் சிவாயநம வென்று தோணவே தினம்நூறு உரூவே செய்தால் சுத்தமுள்ள சுழுனையிலே நந்தி காணும் பூணவே நந்திபிரகாசங் கண்டால் பொருந்தி நின்ற ஆதாரஞ்சித்தி யாமே. 1026 ஆமப்பா ஆதாரஞ்சித்தி யானால் ஆதாரதேவதைகளப்போகாணும் ஓமப்பா என்ற பிரணவத்தினாலே ஒளிவிளக்காய் நின்றதொரு சோதி காணும் வாமப்பாநிறைந்த பூரணத்தினாலே மகத்தான சோதி பஞ்சவர்ண மாகத் தாமப்பாதன்னிலையிற்றானே காணும் தன்மையுடன் கண்டதெல்லாஞ் சித்தி யாமே. 1027
271 காணவே அரூபமென்ற தெரிசனந்தானொன்று கயிலாச சாயுச்சிய தெரிசனந்தானொன்று தோணவே தெரிசனங்கள் பதினாறு தன்னைச் சுத்தமுடன் சற்குருவின் கடாட்சத்தாலே ஊணவே யந்தநிலை யூணிப் பார்த்து உண்மையுடன் தன்னிலையில் தன்னைக் கண்டு பூணவே யிகபரசாதனத்துக் கெல்லாம் பொருந்திமனம் பூரணமாய் வாழ்வாய் பாரே . 1024 பாரப்பா தெரிசனங்கள் பதினாறு தன்னைப் பத்தியுடன் தன்னகமாய்ப் பதிவாய்க்காண நேரப்பா சொல்லுகிறேன் மூலாதாரம் நேர்மையுள்ள தன்னறிவாய் நிலையைக் காணச் சாரப்பா ஆதாரமேலாதாரம் சகலகலை வாசமடா மூலாதாரம் காரப்பா அடிமூலாதாரத்துள்ளே கருணையுடன் ஓமென்று இங்கென் றூணே . 1025 ஊணவே வாசிதனை மூலந்தன்னில் ஓமென்ற தானிருத்தி யுறுதி கொண்டு பேணவே யிங்கென்று மவுனம் பூட்டிப் பெருமையுடன் ஓம் அங் சிவாயநம வென்று தோணவே தினம்நூறு உரூவே செய்தால் சுத்தமுள்ள சுழுனையிலே நந்தி காணும் பூணவே நந்திபிரகாசங் கண்டால் பொருந்தி நின்ற ஆதாரஞ்சித்தி யாமே . 1026 ஆமப்பா ஆதாரஞ்சித்தி யானால் ஆதாரதேவதைகளப்போகாணும் ஓமப்பா என்ற பிரணவத்தினாலே ஒளிவிளக்காய் நின்றதொரு சோதி காணும் வாமப்பாநிறைந்த பூரணத்தினாலே மகத்தான சோதி பஞ்சவர்ண மாகத் தாமப்பாதன்னிலையிற்றானே காணும் தன்மையுடன் கண்டதெல்லாஞ் சித்தி யாமே . 1027