சௌமிய சாகரம்

269 ஆமப்பாகுடவனென்ற தாம்பூரத்தில் அரைவாசி தங்கமிட்டு உருக்கிக் கொண்டு ஓமடா வெள்ளிதனில் பத்துக் கொன்று உருக்கமுடன் தான் கொடுத்து உருக்கிப் பார்த்தால் நாமடாசொல்லுகிறோம் வெள்ளிமைந்தா நல்லதங்கச் சோதியடாகண்கொள்ளாது தாமடாதன்னிலையின் வாசி பூட்டிச் சங்கையுள்ள மவுனாதி யோகங் காணே. 1016 ரசகெந்தத்தால் ரசிதவேதை காணவே யின்னமொரு வெள்ளி வித்தை கருவாகச்சொல்லுகிறேன் கண்டு பாரு பூணவே வெள்வங்கந்தன்னை வாங்கிப் புத்தியுடன் அதுக்கு நிகர் ரசத்தைச் சேர்த்துப் பேணவே அதுக்கு நிகர் வெண்ணெய் கூட்டிப் பேறான அமுர்தரசந்தன்னாலாட்டித் தோணவே ரவிதனிலே காயப் போட்டுச் சுத்தமுடன் தானெடுத்து இன்னங் கேளே. 1017 கேளடா வெள்ளிதனை யுருக்கிமைந்தா கிருபையுள்ள வங்கமதைச் சரியாய்த் தாக்கு காலடா வலுவறிந்து உருக்கிப் பாரு கயிலாச வெள்ளியது குருவாய் நிற்கும் வாலடா வெள்ளியென்ற குருவை மைந்தா மார்க்கமுடன் குப்பியிலே வைத்துக் கொண்டு சூலடாதான் கொடுத்து உருக்கிப் பார்க்கச் சுத்தமென்ற செம்பதுவும் வெள்ளியாமே. 1018 ஆமப்பா இன்னமொரு கருமானங் கேளு அடங்கிநின்ற வெள்ளைப்பாஷாணந் தன்னில் ஓமப்பா இடைசரியாய் ரசத்தை வார்த்து உண்மையென்ற மவுனரசந்தன்னாலாட்டி நாமப்பாவென்றவங்கத் தகட்டில் பூசி நன்மையுட னோட்டில்வைத்து மண்ணுஞ் செய்து தாமப்பா நிலையறிந்து புடத்தைப் போட்டால் தன்மையுள்ள வங்கமது வேட்டைகாணே. 1019
269 ஆமப்பாகுடவனென்ற தாம்பூரத்தில் அரைவாசி தங்கமிட்டு உருக்கிக் கொண்டு ஓமடா வெள்ளிதனில் பத்துக் கொன்று உருக்கமுடன் தான் கொடுத்து உருக்கிப் பார்த்தால் நாமடாசொல்லுகிறோம் வெள்ளிமைந்தா நல்லதங்கச் சோதியடாகண்கொள்ளாது தாமடாதன்னிலையின் வாசி பூட்டிச் சங்கையுள்ள மவுனாதி யோகங் காணே . 1016 ரசகெந்தத்தால் ரசிதவேதை காணவே யின்னமொரு வெள்ளி வித்தை கருவாகச்சொல்லுகிறேன் கண்டு பாரு பூணவே வெள்வங்கந்தன்னை வாங்கிப் புத்தியுடன் அதுக்கு நிகர் ரசத்தைச் சேர்த்துப் பேணவே அதுக்கு நிகர் வெண்ணெய் கூட்டிப் பேறான அமுர்தரசந்தன்னாலாட்டித் தோணவே ரவிதனிலே காயப் போட்டுச் சுத்தமுடன் தானெடுத்து இன்னங் கேளே . 1017 கேளடா வெள்ளிதனை யுருக்கிமைந்தா கிருபையுள்ள வங்கமதைச் சரியாய்த் தாக்கு காலடா வலுவறிந்து உருக்கிப் பாரு கயிலாச வெள்ளியது குருவாய் நிற்கும் வாலடா வெள்ளியென்ற குருவை மைந்தா மார்க்கமுடன் குப்பியிலே வைத்துக் கொண்டு சூலடாதான் கொடுத்து உருக்கிப் பார்க்கச் சுத்தமென்ற செம்பதுவும் வெள்ளியாமே . 1018 ஆமப்பா இன்னமொரு கருமானங் கேளு அடங்கிநின்ற வெள்ளைப்பாஷாணந் தன்னில் ஓமப்பா இடைசரியாய் ரசத்தை வார்த்து உண்மையென்ற மவுனரசந்தன்னாலாட்டி நாமப்பாவென்றவங்கத் தகட்டில் பூசி நன்மையுட னோட்டில்வைத்து மண்ணுஞ் செய்து தாமப்பா நிலையறிந்து புடத்தைப் போட்டால் தன்மையுள்ள வங்கமது வேட்டைகாணே . 1019