சௌமிய சாகரம்

266 பாரப்பா அண்ணாக்கை யுண்ணாக் குக்குள் பக்தியுடன் தானடக்கிப் பதிவாய் மைந்தா சாரப்பா ஓமெனவேதமரில் புக்கிச் சரமறிந்து தானொடுங்கித்தானே நின்றால் பேரப்பாபெற்றசிவ யோகந்தங்கும் பேரண்டத்தமுர்தரசங் கொள்ள லாகும் மேரப்பாசுத்திவரக் கெவுன முண்டாம் வேதாந்த கேசரியின் விஞ்சைதானே. 1006 தானான விஞ்சையென்ற சத்தி மாது சமரசமாய்த் தான்விளக்குந்தங்க மாது வானான கேசரியாந்தங்க மாதை மார்க்கமுடன் கண்டறிந்து மகிழ்ச்சி யாகக் கோனான குருவருளால் சொல்லக் கேளு குருவான அயமுடனே பூரஞ் சேர்த்துப் பூனான காரமிட்டு உருக்கி மைந்தா பொருந்திரெண்டும் உறவாகிப் பொருந்துங் காணே. 1007 காணவேதானுருகிப் பொருந்தும் போது கனிவான நாகமுடன் லிங்கந்தாரம் பேணவே ரசமுடனே நாலுஞ் சேர்த்துப் பிரியமுடன் தான் கொடுக்க வாங்கிக் கொள்ளும் தோணவே யதற்குக்கால் தங்கஞ் சேர்த்துச் சுத்தமுடன் தானுருக்கியெடுத்துப் பார்த்தால் பூணான தங்கமதைப் பத்துக் கொன்று பூரணமாங் களஞ்சிதனிலொன்று போடே. 1008 போட்டுமிகத் தானுருக்கியெடுத்துப் பார்த்தால் பொன்னான தங்கமதை யென்ன சொல்வேன் பூட்டறிந்து பொற்குறியைக் கண்டால் மைந்தா பொன்னுலகெலாமுனது வசமே யாகும் தாட்டிகமாய்ப் பொன்னுலகில் தானே தானாய்த் தானிருந்து சிவயோகத்தலைவனாகிப் பாட்டறிந்து பயனறிந்து பதியில் நிற்கப் பத்தியுடன் இன்னமொரு பாகங் கேளு. 1009
266 பாரப்பா அண்ணாக்கை யுண்ணாக் குக்குள் பக்தியுடன் தானடக்கிப் பதிவாய் மைந்தா சாரப்பா ஓமெனவேதமரில் புக்கிச் சரமறிந்து தானொடுங்கித்தானே நின்றால் பேரப்பாபெற்றசிவ யோகந்தங்கும் பேரண்டத்தமுர்தரசங் கொள்ள லாகும் மேரப்பாசுத்திவரக் கெவுன முண்டாம் வேதாந்த கேசரியின் விஞ்சைதானே . 1006 தானான விஞ்சையென்ற சத்தி மாது சமரசமாய்த் தான்விளக்குந்தங்க மாது வானான கேசரியாந்தங்க மாதை மார்க்கமுடன் கண்டறிந்து மகிழ்ச்சி யாகக் கோனான குருவருளால் சொல்லக் கேளு குருவான அயமுடனே பூரஞ் சேர்த்துப் பூனான காரமிட்டு உருக்கி மைந்தா பொருந்திரெண்டும் உறவாகிப் பொருந்துங் காணே . 1007 காணவேதானுருகிப் பொருந்தும் போது கனிவான நாகமுடன் லிங்கந்தாரம் பேணவே ரசமுடனே நாலுஞ் சேர்த்துப் பிரியமுடன் தான் கொடுக்க வாங்கிக் கொள்ளும் தோணவே யதற்குக்கால் தங்கஞ் சேர்த்துச் சுத்தமுடன் தானுருக்கியெடுத்துப் பார்த்தால் பூணான தங்கமதைப் பத்துக் கொன்று பூரணமாங் களஞ்சிதனிலொன்று போடே . 1008 போட்டுமிகத் தானுருக்கியெடுத்துப் பார்த்தால் பொன்னான தங்கமதை யென்ன சொல்வேன் பூட்டறிந்து பொற்குறியைக் கண்டால் மைந்தா பொன்னுலகெலாமுனது வசமே யாகும் தாட்டிகமாய்ப் பொன்னுலகில் தானே தானாய்த் தானிருந்து சிவயோகத்தலைவனாகிப் பாட்டறிந்து பயனறிந்து பதியில் நிற்கப் பத்தியுடன் இன்னமொரு பாகங் கேளு . 1009