சௌமிய சாகரம்

பாரப்பாதன்னைத்தானே கண்டு பக்தியுடனுடல்கருவி மூலம் பார்த்து நேரப்பாநின்றதினால் தத்துவத்தின் பெருமை நீதியுடன் தோணுமடாநினைவாய்ப் பாரு சாரப்பா மனசார சார்ந்து பார்த்தால் சார்வான தத்துவங்கள் தோணும் பாரு ஆரப்பா அறிவார்கள் பூதமைந்தில் அதில் பிறந்த தத்துவந்தான் தொண்ணூற் றாறே. 35 பிரிதிவியின்கூறு ஆறான பூதமைந்தின் உருவைக் கேளு அப்பனே பிருதிவியின் கூத்தான் மைந்தா நேருமயி ருடனே எலும்பு சர்மம் நிலையான நரம்புசதை அஞ்சு மாச்சு பேறான பிருதிவியின் கூறு சொன்னேன் பெருமையுடன் தானறிந்து பிலமாய் நின்று கூறான அப்புடைய கூறு பாரு குணமான புலத்தியனே குவிந்து பாரே, அப்புவின்கூறு பாரப்பா அப்பினுட கூறு சொல்வேன் பரிவான நீருடனே உதிரமப்பா காரப்பாசுக்கிலமும் மூளை மச்சை கருவாக யஞ்சுமடா அப்பின் கூறு தேரப்பா அப்பினுட கூறு தன்னைத் தெளிந்துமன தொன்றாகத் தன்னைப் பாரு சாரப்பாதன்னுணர்வாய்ப் பார்த்தால் மைந்தா தனதான தேய்வினுட கூறு கேளே
பாரப்பாதன்னைத்தானே கண்டு பக்தியுடனுடல்கருவி மூலம் பார்த்து நேரப்பாநின்றதினால் தத்துவத்தின் பெருமை நீதியுடன் தோணுமடாநினைவாய்ப் பாரு சாரப்பா மனசார சார்ந்து பார்த்தால் சார்வான தத்துவங்கள் தோணும் பாரு ஆரப்பா அறிவார்கள் பூதமைந்தில் அதில் பிறந்த தத்துவந்தான் தொண்ணூற் றாறே . 35 பிரிதிவியின்கூறு ஆறான பூதமைந்தின் உருவைக் கேளு அப்பனே பிருதிவியின் கூத்தான் மைந்தா நேருமயி ருடனே எலும்பு சர்மம் நிலையான நரம்புசதை அஞ்சு மாச்சு பேறான பிருதிவியின் கூறு சொன்னேன் பெருமையுடன் தானறிந்து பிலமாய் நின்று கூறான அப்புடைய கூறு பாரு குணமான புலத்தியனே குவிந்து பாரே அப்புவின்கூறு பாரப்பா அப்பினுட கூறு சொல்வேன் பரிவான நீருடனே உதிரமப்பா காரப்பாசுக்கிலமும் மூளை மச்சை கருவாக யஞ்சுமடா அப்பின் கூறு தேரப்பா அப்பினுட கூறு தன்னைத் தெளிந்துமன தொன்றாகத் தன்னைப் பாரு சாரப்பாதன்னுணர்வாய்ப் பார்த்தால் மைந்தா தனதான தேய்வினுட கூறு கேளே