சௌமிய சாகரம்

237 899 பாரப்பாதங்கமுடன்லிங்கஞ் சேர்த்துப் பத்தியுடன் தானுருகி மணிபோலாகும் நேரப்பாலிங்கதங்க மணியை வாங்கி நிச்சயமாய் வெள்ளிதனில் பத்துக் கொன்று சாரப்பாதான்கொடுத்து உருக்கிப் பாரு தன்மையுடன் வெள்ளியது தங்க மாகும் ஆரப்பா அறிவார்கள் லிங்க வேதை அடங்காத வேதையடா ஆதி பாரே. அண்டபிண்டம் ஆதியென்ற பிரமதல மணிநாலாச்சு அண்ணாக்கை யுண்ணாக்குளடக்கி மைந்தா சோதியென்ற சுழுனையிலே துலங்கப் பண்ணித் துருவமென்ற தமர்தனிலே சொக்கி நின்று நீதியுடன் அண்டவெளி தன்னைப் பார்த்து நிறைந்தமதி பூரணமாய் நின்றாயானால் சாதியென்ற சமரசமுமொன்றாய்ப் போகும் தனித்திருந்து மவுனமதில் சார்ந்து நில்லே. 900 நில்லடா நிலையறிந்து வாசி கொண்டு நீமகனே உன்னிவிளையாடும் போது உள்ளடாசுழுனையிலே மனதை வைத்து உத்தமனே ஓங்காரக்கம்பம் நாட்டிச் சொல்லடாசிவாயவசி யென்று மைந்தா சுகமாகப் பிராணாயஞ் செய்தாயாகில் அல்லடா சொல்லுகிறேன் ஒளிதான் காணும் ஆதிவெளிதனையறிந்து அண்டம் பாரே. 01 பாரப்பா அண்டபிண்ட மார்தான் காண்பார் பதியறிந்து காண்பதற்கு வகையைக் கேளு நேரப்பா பிண்டமென்றாலண்ணாக் காச்சு நிதமான அண்டமென்றால் சுழுனை யாச்சு காரப்பா அண்ணாக்காச்சுழுனைக்குள்ளே கைமுறையா யுன்னிநடு மனையிற் சென்று மேரப்பாசுத்திவலம் வந்தாயாகில் மெய்ஞ்ஞான மான செக சோதி தானே. 900
237 899 பாரப்பாதங்கமுடன்லிங்கஞ் சேர்த்துப் பத்தியுடன் தானுருகி மணிபோலாகும் நேரப்பாலிங்கதங்க மணியை வாங்கி நிச்சயமாய் வெள்ளிதனில் பத்துக் கொன்று சாரப்பாதான்கொடுத்து உருக்கிப் பாரு தன்மையுடன் வெள்ளியது தங்க மாகும் ஆரப்பா அறிவார்கள் லிங்க வேதை அடங்காத வேதையடா ஆதி பாரே . அண்டபிண்டம் ஆதியென்ற பிரமதல மணிநாலாச்சு அண்ணாக்கை யுண்ணாக்குளடக்கி மைந்தா சோதியென்ற சுழுனையிலே துலங்கப் பண்ணித் துருவமென்ற தமர்தனிலே சொக்கி நின்று நீதியுடன் அண்டவெளி தன்னைப் பார்த்து நிறைந்தமதி பூரணமாய் நின்றாயானால் சாதியென்ற சமரசமுமொன்றாய்ப் போகும் தனித்திருந்து மவுனமதில் சார்ந்து நில்லே . 900 நில்லடா நிலையறிந்து வாசி கொண்டு நீமகனே உன்னிவிளையாடும் போது உள்ளடாசுழுனையிலே மனதை வைத்து உத்தமனே ஓங்காரக்கம்பம் நாட்டிச் சொல்லடாசிவாயவசி யென்று மைந்தா சுகமாகப் பிராணாயஞ் செய்தாயாகில் அல்லடா சொல்லுகிறேன் ஒளிதான் காணும் ஆதிவெளிதனையறிந்து அண்டம் பாரே . 01 பாரப்பா அண்டபிண்ட மார்தான் காண்பார் பதியறிந்து காண்பதற்கு வகையைக் கேளு நேரப்பா பிண்டமென்றாலண்ணாக் காச்சு நிதமான அண்டமென்றால் சுழுனை யாச்சு காரப்பா அண்ணாக்காச்சுழுனைக்குள்ளே கைமுறையா யுன்னிநடு மனையிற் சென்று மேரப்பாசுத்திவலம் வந்தாயாகில் மெய்ஞ்ஞான மான செக சோதி தானே . 900