சௌமிய சாகரம்

கேளப்பாஞானேந்திரியந்தன்னைக் கிருபையுடன் சொல்லுகிறேன், நன்றாய்க் கேளு சூளப்பாசுரோத்திரந்தான் காது மாகும் தொக்குவென்று சொன்னதுதான் தேக மாகும் வாளப்பா சட்சுவென்றால் நேத்திரமாகும் மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும் காலப்பா ஆக்கிறாண மூக்கு மூக்குக் கருணையுள்ள ஞான இந்திரிய மஞ்சே! அஞ்சான ஞானயிந்திரியந் தன்னை அருளான மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்து நெஞ்சார அஞ்சுநிலை பார்த்து மைந்தா நிலையான குருபதியில் நின்றாயானால் மிஞ்சாமல் வாசியது தானே தானாய் மெய்ஞ்ஞான தீபமதில் விளங்கும் பாரு தஞ்சமென்று அஞ்சுநிலை நன்றாய்ப் பார்த்துச் சங்கையுடன் கர்மயிந்திரியங் கேளே. கர்மேந்திரியம் கேளப்பா வாக்குடனே பாதம் வாணி கிருபையுடன் பாயுரு உபத்த மஞ்சு சூளப்பாகர்மயிந்தி ரியங்க ளாகும் சுகமாகத் தானறிந்து சுத்த மானால் பாளப்பாபோகாது ஞான மார்க்கம் பக்தியுடன் அஞ்சேயும் நீகண்டு தேர்ந்தால் கோளப்பா ஒன்றுமில்லை வாசி யேறும் குறிப்பாக ஐம்புலனைக் கூர்ந்து பாரே.
கேளப்பாஞானேந்திரியந்தன்னைக் கிருபையுடன் சொல்லுகிறேன் நன்றாய்க் கேளு சூளப்பாசுரோத்திரந்தான் காது மாகும் தொக்குவென்று சொன்னதுதான் தேக மாகும் வாளப்பா சட்சுவென்றால் நேத்திரமாகும் மகத்தான சிங்குவென்றால் வாய்தானாகும் காலப்பா ஆக்கிறாண மூக்கு மூக்குக் கருணையுள்ள ஞான இந்திரிய மஞ்சே ! அஞ்சான ஞானயிந்திரியந் தன்னை அருளான மனக்கண்ணால் நன்றாய்ப் பார்த்து நெஞ்சார அஞ்சுநிலை பார்த்து மைந்தா நிலையான குருபதியில் நின்றாயானால் மிஞ்சாமல் வாசியது தானே தானாய் மெய்ஞ்ஞான தீபமதில் விளங்கும் பாரு தஞ்சமென்று அஞ்சுநிலை நன்றாய்ப் பார்த்துச் சங்கையுடன் கர்மயிந்திரியங் கேளே . கர்மேந்திரியம் கேளப்பா வாக்குடனே பாதம் வாணி கிருபையுடன் பாயுரு உபத்த மஞ்சு சூளப்பாகர்மயிந்தி ரியங்க ளாகும் சுகமாகத் தானறிந்து சுத்த மானால் பாளப்பாபோகாது ஞான மார்க்கம் பக்தியுடன் அஞ்சேயும் நீகண்டு தேர்ந்தால் கோளப்பா ஒன்றுமில்லை வாசி யேறும் குறிப்பாக ஐம்புலனைக் கூர்ந்து பாரே .